இடுகைகள்

வானொலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகச் செல்வாக்கில் இந்தியாவை முந்திச்செல்லும் சீனா!

படம்
              ஊடக செல்வாக்கில் கொடிகட்டிப் பறக்கும் சீனா! அற மதிப்பீடுகள், பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் குழுக்கள், ஆன்மிகம், மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது, நல்லிணக்கம், அறிவு, நேர்மை, விசுவாசம் ஆகிய அம்சங்கள் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பொதுவானவை. இவற்றின் அடிப்படையில்தான் இவ்விரு நாடுகளிலுள்ள அதிகாரம் தன்னை வலுப்படுத்திக்கொண்டு வாழ்கிறது. இந்தியாவில், உலகம் என்பது ஒன்று என்ற கொள்கையில் தனது வேர்களைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மக்களின் பொறுப்புணர்வு, கடமைகள் கூறப்படுகின்றன. சீனாவில் உலகம் என்பது ஒரே குடும்பம் (தியான்ஷியா யிஜியா) என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆர்வம், விருப்பம், மனிதகுலத்தின் பாதை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இதில், நமக்கு ஏற்படும் சவால்கள் பொதுவானவை, அதற்கு தீர்வுகளை கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. சீனா, கலாசார ரீதியாக மேம்பட்டது என பிரசாரம் செய்யப்படுகிறது. அதன் பாதை, அமைப்புமுறை, கோட்பாடு என்பதற்கு அடிப்படையாக சோசலிசம் இருக்கிறது, ஆனால், ஜனநாயகம் என்று வரும்போது, இக்கொள்கைகள் பொருந்துவதில்லை. அமெரிக்கா, ...

ஒரே மெகந்தியா ஒரே ஒரு குரல்! - பன் பட்டர் ஜாம் எக்ஸ்டென்டட்

படம்
1 பிறரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்வோமே? எனதருமை நாட்டு மக்களே , வணக்கம். என்னை சந்திப்பதில் குரலைக் கேட்பதில் மகிழ்வீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நீங்கள் தாக்குப்பிடித்து எனது நாட்டில் உயிரோடு வாழ்கிறீர்கள் என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நம்புங்கள். அப்படியே உங்களை ஆளும் பரமாத்மாவான என்னை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுங்கள். கரம் கூப்பித் தொழுங்கள். மாசி மகம் எனும் நன்னாளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனது ஆட்சியில் ஆறுகளை, ஏரிகளை எனது தொழிலதிபரான நண்பர்களுக்கு குத்தகை விட்டுவிட்டேன் என விமர்சனங்கள் வருகின்றன. அதை யாருக்காக செய்தேன்? எல்லாம் உங்களுக்காகவே. ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு அவை இல்லாமல் போனதால்தான், மக்களுக்கு பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்க அபாயம் குறைந்திருக்கிறது. இந்த தசாப்த சீர்திருத்தங்களுக்கு முன்னர் நீர்நிலைகளோடு கொண்டாடும் பண்டிகைகள் எப்போதும் நமது மெகந்தியாவில் உண்டு. இனிமேல் அவற்றை எனது வலைப்பக்கத்தில் மெய்நிகர் வடிவில் கொண்டாட வசதி செய்துள்ளேன். ஜில்பவாசம் எனும் பழக்கத்தை மக்கள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்...