இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் அதிகாரத்துவ இயக்கங்களை அழித்த போல்ஷ்விக், பாசிஸ்ட் அமைப்புகள்!

படம்
    அரசியல் இயக்கமாக மக்கள் அதிகார அமைப்புகளை பார்ப்பது சுவாரசியமானது. அதன் செயல்பாடு, அமைப்பின் கட்டமைப்பு, உள்ளே நடக்கும் செயல்பாடுகள் என அனைத்துமே வேறுபட்டவை. வெளிப்படைத்தன்மை கொண்டவை. 1848-1914 காலகட்டத்தில் மக்கள் அதிகார அமைப்புகள் தீவிரமாக இயங்கின. அமைப்பிற்குள் மக்களை இழுக்க பிரசாரம் செய்தன. ஆனால், உலகப்போர் நிறைவடைந்தபிறகு, அமைப்புகள் பலரும் அறியாமல் காணாமல் மறையத் தொடங்கின. இதற்கு போல்ஷ்விக், பாசிஸ்ட் இயக்கங்களே முக்கியப் பங்காற்றின.   ஐரோப்பாவில் மக்கள் அதிகார இயக்கங்கள் அழிவதற்கு, அதைவிட வலிமையான கருத்தியல் அமைப்புகள் அரசு அதிகாரத்தை கைப்பற்றியதே முக்கியக் காரணம். 1945ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவில் சில மக்கள் அதிகார அமைப்புகள் மெதுவாக இயங்கத் தொடங்கின. தனது கருத்தியல் சார்ந்து சில நூல்களை வெளியிட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, உருகுவே ஆகிய நாடுகளில் சர்வாதிகாரம் காரணமாக மக்கள் அதிகார அமைப்புகள் செயல்பாடு தேக்கமடைந்தன. பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, மக்கள் அதிகார அமைப்புகளின் செயல்பாடு முழுக்க நின்றுபோய், அதன் நிழல்தான் மிச்சமிருந்தது. ப...

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரே வழி!

படம்
      மக்கள் அதிகாரத்துவர்கள், ஒரு விஷயத்தில் நீதி கிடைக்கவேண்டுமென்றால் எந்த தரகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் நாடுவதில்லை. அதில் அவர்கள் பெரிதாக நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாக களத்தில் இறங்கி நடைபெறும் செயலை உடனே தடுக்க முயல்வார்கள். அதனால், இதை பார்ப்பவர்களுக்கு வன்முறை இயல்பு  கொண்டவர்கள் போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியானவர்கள் இல்லை. செயலை உடனே தடுக்கவேண்டும் என நினைப்பார்கள். உடனே களத்தில் குதித்துவிடுவார்கள். இந்தியாவில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ இயக்கத்தை அறிவீர்கள். மரங்களை கட்டிப்பிடித்து தடுத்து இயற்கையைக் காத்தவர்கள். அதுபோலத்தான். இவர்களும் செயல்படுகிறார்கள். புல்டோசர்களைக் கொண்டு காடுகளை அழிக்கிறார்களா, அவர்களது வண்டியின் பெட்ரோல், டீசல் டேங்கில் சர்க்கரையைப் போட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன முழு எஞ்சினும் பழுதாகிவிடும். நாம் கவனிக்கவேண்டியது எதிர்தரப்பு எந்த மெக்கானிக்கிடம் செல்வார்கள் என்பதல்ல. நடைபெற்ற செயல் நின்றுபோனதல்லவா, அதுதான் மக்கள் அதிகாரத்துவர்களின் வெற்றி. இயக்கமாகவும் அவர்கள் மேலிருந்து கீழ் என ஆணையிட்டு ச...

கார்பன் வரியின் நோக்கம்!

      கார்பன் வரியின் நோக்கம் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கார்பன் வரி என்பது நடைமுறைக்கு வந்திருக்கும் அல்லது கொண்டு வரலாம் என யோசித்துக்கொண்டிருப்பார்கள். பிரான்ஸ் போன்ற நாட்டில் வரியை எதிர்த்து போராட்டங்களே வெடித்தன. உண்மையில் கார்பன் வரி எதற்காக, இதைக் கொண்டு வந்தால் கரிம எரிபொருட்கள் தயாரிப்பு குறைந்துவிடுமா, காலநிலை மாற்றம் பிரச்னை தராதா? அப்படியெல்லாம் கிடையாது. கார்பன் வரி என்பது, முற்றாக கரிம எரிபொருட்கள் உற்பத்தியை நிறுத்தப்படுவதை சற்று தள்ளிப்போட உதவுகிறது. கார்பன் வரியைக் கட்டுபவர்களால், அரசை முழுக்க எதிர்த்து தான் நினைத்தை செய்ய வைக்க முடியுமா என்று பதில் கூறுவது கடினம். கரிம எரிபொருட்களை முற்றாக ஒழிப்பது அரசுக்கு சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஒரே உத்தரவில் அந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடலாம். ஆனால் பொதுவாக எந்த அரசும் அதுபோல செய்வதில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், எக்செல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் , தங்கள் தொழிற்சாலையை மூடுவது நடக்ககூடிய ஒன்றா என்ன? ஆனால், அவர்கள் கூட கார்பன் வரியை ஆதரிக்கிறார்கள். இப்போது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கார்பன் வரி பற்ற...

நாட்டை சமூக நீதி பாதைக்கு கொண்டு வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்!

      உற்பத்தியைப் பொறுத்தவரையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள் எனில் பகுதியாக குறையும். பிறகு, முற்றாக நின்றுவிடும். இப்படியான விளைவை தொழிலாளர்கள் முன்னமே அடையாளம் கொண்டு செயல்பட வேண்டும். புரட்சி என்பது முக்கியம். அதேசமயம், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு தெருக்களில் குழுமுவது தற்காலிகமாகத்தான். அது நிரந்தரமல்ல. புரட்சி என்பது பொது சொத்துக்களை அழிப்பதல்ல. அது மக்களுக்கு உதவும் பெரும் பொறுப்பை தன் தோள்களில் கொண்டுள்ளது. கடின உழைப்பும், சுய ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் புரட்சியின் பாதையில் பயணிக்க முடியும். முதலாளித்துவவாதிகள், துறையை போட்டியிடும் வகையில் உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அதிகளவு முதலீடு, அதற்கு கட்டாயமாக கிடைத்தே ஆக வேண்டிய லாபம், இரக்கமில்லாத விலை, விலை வேறுபாடுகள், வாங்கும் கடன்களுக்கு அதிகரிக்கும் வட்டி என முதலாளித்துவ வணிகம் பல்வேறு நெருக்கடிகளை தனக்குள்ளேயே கொண்டது. முதலாளித்து நிறுவனங்கள் ஏற்படுத்தும் போட்டி உள்நாடு, வெளிநாடு என இரண்டு பிரிவுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்துறையை ...

சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!

படம்
            மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு, வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி. பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது. கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது.  இந்த ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏற...

இழந்த தாய்நிலத்தை மீட்க போராடத் தூண்டும் கவிதைகள்!

படம்
    பலஸ்தீன கவிதைகள் தமிழில் நுஃமான் நூலகம் இது, சிறிய கவிதை நூல். மொத்தம் ஒன்பது பலஸ்தீன கவிஞர்கள் எழுதிய முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது. பலஸ்தீனம், இனப்படுகொலைக்கு உள்ளாகி மெல்ல அழிந்து வருகிறது. இன்று அமெரிக்கா, அழிந்த பலஸ்தீனத்தில் சொகுசு விடுதிகள், ஆடம்பர இல்லங்கள் கட்டினால் சிறப்பாக இருக்கும் என எகத்தாளமாக இனப்படுகொலையை ஆதரித்து பேசி வருகிறது. இப்படியான சூழலில் இக்கவிதைகளை நாம் வாசித்தோம் என்றால், அதன் அழுத்ததை புரிந்துகொள்ள முடியும். இனப்படுகொலை, தடுப்புக்காவல், சித்திரவதை, சிறை, பசி, பட்டினி, கல்வியின்மை, எதிர்காலம் பற்றிய இலக்கின்மை, வறுமை, போரில் மரணமடைந்த வீரர்கள், பலஸ்தீனியர்களுக்குள் உள்ள துரோகிகளால் வீழும் மக்கள் என நிறைய விஷயங்களை கவிதைகள் அழுத்தமாக பல்வேறு உருவகங்களை முன்வைத்து பேசுகிறது. பெரும்பாலும் அவற்றை ஒருமுறை வாசிக்கும்போதே முழு அரசியல், சமூக, பொருளாதார சூழலை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். பேரினவாதம் பேசுவோர், எதிரினத்தை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என வன்ம வாதத்தை முன்வைப்பார்கள். அப்படியான கருத்தில் மஹ்மூத் தார்விஷ் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். ரொட்...

சமூகப் புரட்சியை தொடங்கி வெற்றி பெறுவது பற்றி விளக்கும் நூல்!

படம்
   ஏபிசி ஆப் அனார்சிசம் அலெக்சாண்டர் பெர்க்மன் ப.108 அனார்சிசம் என்பதை தலைவர் இன்மை, அல்லது அரசின்மை என்று கூறலாம். அந்த வகையில் அரசு இல்லாமல் நாடு எப்படி செயல்பட முடியும், அதன் சாத்தியங்கள் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஆராய்கிறது. பொதுவாக, புரட்சி என்பதை முதலாளித்துவ ஊடகங்கள், குறிப்பாக ஆரியர்கள் நடத்துபவை, தவறாக சித்திரித்து வந்திருக்கின்றன. அப்படியான பல்வேறு பிரச்னைகளை முதல் இரண்டு அத்தியாயங்களில் நூல் எடுத்தாண்டு, பிறகு பேசும் மையப்பொருளுக்கு வேகமாக நகர்ந்துவிடுகிறது. நூலில், அரசின்மை கருத்துகளை விளக்கிய முக்கியமான தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை வாசகர்கள்தாம் தேடிப் படித்துக்கொள்ளவேண்டும். எடுத்துக்கொண்ட மையப்பொருளை விவரிக்க அதிக நேரம் தேவை என்பதால் எழுத்தாளர் அலெக்சாண்டர், முக்கிய சிந்தனையாளர்கள் பற்றி அதிகம் விளக்கவில்லை. கட்டற்ற ஆராய்ச்சி, ஆய்வு வலைத்தளங்களில் அனார்சிசம் பற்றி தேடினாலே ஏராளமான கட்டுரைகள், நூல்களின் சில பகுதிகள் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன. அவற்றைப் படித்து ஒருவர் இத்தத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். நூலில் தொழிலாளர்கள் மீது அத...

இன்டர்நெட் ஆர்ச்சீவ், பிரதிலிபி தமிழ் வலைத்தளங்களிலுள்ள இலவச மின்னூல்கள்

படம்
     

பெண்கள் சுய இன்பம் செய்வதை, உறவில் உச்சம் அடைவதை மைய நீரோட்ட திரைப்படங்கள் காட்ட மறுக்கின்றன!

படம்
    தர்சனா ஶ்ரீதர் மினி விஸ்கான்சின் பல்கலைக்கழக துணை பேராசிரியர் மென் ஆபாச படங்களை ஆராய்ச்சி செய்ய எப்படி எண்ணம் வந்தது? எம்பில் படிக்கும்போது, இளைஞர்கள் எப்படி பாலியல் கல்வியை புரிந்துகொள்கிறார்கள் என்று அறிய நினைத்தேன். இதைப்பற்றி சிலரிடம் பேசியபோது, அவர்கள் மென் ஆபாச படங்களைப் பார்த்து கற்றுக்கொண்டதாக கூறினர். சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் மென் ஆபாசப்படங்களை தயாரிக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. ஐந்து மாதங்கள் காத்திருந்தபோது, அத்துறை சார்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அப்படங்களின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி கூறுங்கள். தொண்ணூறு தொடங்கி இரண்டாயிரம் வரையிலான காலகட்டத்தில் மைய நீரோட்ட திரைப்படங்கள் பெரிய இயக்குநர்கள் இயக்கினாலும் வெற்றி பெறவில்லை. படுதோல்வியை தழுவின. அப்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் மென் ஆபாச படங்களை எடுக்கத் தொடங்கினர். இந்த படங்களில் கதை ஒரே மாதிரிதான் இருக்கும். மொத்தம் பதினைந்து பெண்கள் இப்படங்களில் நடித்தனர். இதில் புகழ்பெற்றவர் நடிகை ஷகீலா. இவருக்கு படத்திற்கான சம்பளம் என்று பேசாமல், தினசரி சம்பளம் பேசப்பட்டது. ஒரு...

புகையிலை அளவுக்கு சர்க்கரையும் ஆபத்தான பொருள்தான் - ஆராய்ச்சியாளர் டேவிட் சிங்கர்மேன்

படம்
    டேவிட் சிங்கர்மேன் ஆராய்ச்சியாளர், வர்ஜீனியா பல்கலைக்கழக பேராசிரியர் சர்க்கரை, தொடக்கத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரின் பொருளாக இருந்து பிறகே அனைத்து மக்கள் பயன்படுத்தும் பொருளாக மாறியது. அதைப்பற்றி விளக்கி கூறுங்களேன். வரலாற்று ரீதியாக பார்ப்போம். தொடக்கத்தில் சர்க்கரையை ஒருவர் பயன்படுத்தினால், அதில் செய்த உணவை சாப்பிடுகிறார் என்றால் அது, அவரின் செல்வ வளத்தைக் குறிப்பதாக இருந்தது. கடந்த ஐநூறு ஆண்டுகளாகத்தான் சர்க்கரை என்பது அனைவரும் பயன்படுத்தும் விதமாக விலை குறைந்து கிடைக்கிறது. தொடக்கத்தில் கரும்பில் தயாரிக்கும் சர்க்கரை எளிதாக அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. ஐரோப்பியர்கள், சர்க்கரை விலையில் கிடைத்த லாபத்தை பேராசையோடு அடையாளம் கண்டனர். லாபத்தை அதிகரிக்க அதை பெருமளவு தோட்டமாக போட முடிவெடுத்தனர். இப்படித்தான் ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்கா, லூசியானா, அட்லாண்டிக் தீவுகளான மெடெய்ரா ஆகியவற்றில் கரும்பு தோட்டங்களை அமைத்தனர். இதில் வேலை செய்ய அடிமைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர். இவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதமும் கொடூரமாக இருந்தது. மனித தன்மையோடு அடிமைகள்...

அகடெமியா வலைத்தளம் - அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான பொக்கிஷம்

    அகடெமியா இணையதளத்தில் அறிவியல் சார்ந்த ஏராளமான ஆய்வு அறிக்கை, ஆராய்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. அங்கு அறிவியல் சார்ந்த இரு மொழிபெயர்ப்பு கட்டுரைகள் ஆரா பிரஸ் சார்பாக பதிவேற்றப்பட்டுள்ளன. ஆர்வம் இருப்பவர்கள் வாசிக்கலாம். நன்றி!   https://independent.academia.edu/arasuk8

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...

மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் அதிகாரம்!

      தொழிலாளர் சங்கம் என்பது அடிப்படையில், அதிலுள்ள உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுதான் அதன் இயல்பான கடமையும் கூட. சிலர் சங்கத்தில் சேராமல் இருப்பார்கள். அதற்கு ஆலையின் மிரட்டல் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சங்கத்தின் தலைவர்கள் செய்யும் ஊழல், துரோகம், சங்க செயல்பாட்டில் நேர்மையின்மையே முக்கியமான சிக்கல்கள். போராட்டம் குறிப்பிட்ட துறையில் நடைபெற்றால், அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அப்பகுதி மட்டுமல்ல நாடு முழுக்கவே ஆதரவு தெரிவித்து இயங்கவேண்டும். அதாவது,அவர்களும் வேலைநிறுத்தம் செய்யவேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் வெற்றி பெறும். அரசியல் அதிகாரத்தை முற்றாக ஒருங்கிணைத்து ஒழித்தால்தான் நாம் எதிர்பார்த்த பயன்களைப் பெற முடியும். சர்வாதிகாரம், அடக்குமுறை, அதிகாரம் ஆகியவற்றை இங்கு இப்படிக் குறிப்பிடலாம். சொத்துக்களை உருவாக்குபவர்கள் தொழிலாளர்கள், அவர்கள் கையில் உள்ள பேரளவு பலத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். பியர் ஜோசப் புரவுட்தோன் என்பவர், நவீன மக்கள் அதிகார கருத்தை உருவாக்கியவர். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் உருவான தத்துவங்கள...

உங்களது கிரியேட்டிவிட்டியை வளர்க்க உதவும் அற்புத நூல்!

படம்
        ஸ்டீல் லைக் என் ஆர்டிஸ்ட் ஆஸ்டின் கிளியோன் வொர்க்மேன் பதிப்பகம் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால், கார்ட்டூன் கலைஞர் எழுதியிருக்கிறார். அதனால் நூலை வாசிக்கும்போது, படங்கள் அதிகமாகவும் எழுத்து குறைவாகவும் உள்ளது. வாசிக்க அதுவே ஆர்வம் தருவதாகவும் அமைவது ஆச்சரியம்தான். பொதுவாக படம் வரைபவர்கள், அதாவது கார்ட்டூன் போடுபவர்களால் எழுதவும் முடியும். அதற்கு அவர்கள் சற்று நூல்களை படித்து பயிற்சி செய்யவேண்டும். அவ்வளவேதான். அந்தவகையில் ஆஸ்டின், தன்னுடைய அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். நூல் முழுக்க புகைப்படங்கள், எழுத்துகள் என அவரது கைவண்ணம் அழகாக உள்ளது. ஒருவர் தன்னுடைய திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என எளிதாக கற்றுக்கொடுக்கிறார். அனைத்துமே எளிமையான சின்ன சின்ன விஷயங்கள்தான். குறிப்பாக, தினசரி நடக்கும் அனுபவங்களை நோட்டில் எழுதுவது, வேலை செய்யும் இடங்களை டிஜிட்டல் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என சிலவற்றை செய்தாலே நிறைய வேறுபாடுகளை பார்க்கமுடியும் என விளக்கிக் கூறுகிறார். கூடுதலாக நிறைய எழுத்தாளர்கள். ஓவியர்கள், ஓவியக்கலைஞர்களின் மேற்கோள்களு...

இலவச மின்னூல்கள் - ஃப்ரீதமிழ் இபுக்ஸ்

படம்
      இலவச மின்னூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸில் தேடி வாசிக்கலாம். கூடுதலாக, இன்டர்நெட் ஆர்ச்சீவிலும்,பிரதிலிபி தமிழிலும் சில நூல்கள் கிடைக்கின்றன.  வாய்ப்பிருப்பவர்கள் தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!

சமூகப் புரட்சியில் அறிவுஜீவிகளுக்கு உள்ள பங்கு!

படம்
  அரசியல் ரீதியான புரட்சிக்கும் சமூகத்தை அடிப்படையாக மாற்றும் புரட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அரசியல் புரட்சியை ஒருவகையில் ரகசியமாக ஏகபோகமாக கூட நடத்திக் காட்டிவிட முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் என இருதரப்பும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை என்ற இரண்டு அம்சங்களிலும் கூட இருபிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் முக்கியம். இவர்கள் இல்லாமல் எந்த சமூக மாற்றங்களும் நடைபெறாது. இணையம் வந்தபிறகு போராட்டங்களை ஒருங்கிணைப்பு வேறு ஒரு தளத்திற்கு மாறியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பவர்கள், போராட்டங்களை எளிதாக தடுத்து நீக்க முடியும். எனவே, அவை இல்லாமலும் மக்கள் ஒன்றாக இணைந்து களத்தில் செயல்பட முயலவேண்டும். முதலாளிகளைப் பொறுத்தவரை லாபம் வந்தால்தான் ஒரு பொருளை நிர்வாகம் செய்வார். அரசு எதிர்த்தால், தொழில் இழப்பை சந்தித்தால், அதை எதிர்கொள்ளும்படி நிறைய கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்கிக்கொள்வார். அரசுகளின் கருத்தியலுக்கு ஏற்றபடி அல்காரிதங்களை கூட தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றியமைப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என...

எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்!

    1 மதிப்பிற்குரிய எழுத்தாளர் கே செல்வேந்திரன் அவர்களுக்கு வணக்கம். நகுமோ லேய் பயலே என்ற உங்களது நூலை வாசித்தேன். கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை சிறப்பாக உள்ளது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பார்த்தமுகம், தூஸ்ரா ஆகிய கட்டுரைகள் எனக்கு பிடித்திருந்தது.இலக்கியக் கட்டுரைகளில் மாசனமுத்து எழுதிய பொன்மொழிகள் கட்டுரை சிறப்பாக இருந்தது. நன்றி!    2   மதிப்பிற்குரிய எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் தங்களுடைய உறைப்புளி என்ற கட்டுரை நூலைப் படித்தேன். ஸ்டார்ட்அப் தொழில் தோல்வி, பழந்தின்னி வௌவால், எழுத்தாளர் க.சீ சிவக்குமாருடனான எழுத்தாளருடனான உறவு, நூல் வாசிப்பு பயன் என பலதரப்பட்ட வாசிப்புக்கு ஊக்கமளிக்கும், உற்சாகத்தோடு வாசிக்கும்படியான அம்சங்கள் நூலில் இருந்தன. நாளிதழை விநியோகம் செய்பவர்கள் பற்றிய கட்டுரை, குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்தாலும், ஒரு சிறுகதை போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது. அதில், ஆங்கில நூலொன்றையும் பரிந்துரை செய்திருந்தீர்கள். வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சி. இறுதிக்கட்டுரை, கல்லூரியில் ஆற்றிய உரை. நூல்களை வாசிக்கும், விரும்புகி...

அதிகாரத்தை, பலவந்தத்தை அழிப்பதன் மூலம் உருவாக்கும் மாற்றங்கள்!

படம்
    ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றது. மக்களின் ஆதரவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த புரட்சி என்பது மக்களுக்கு பெரிய நியாயத்தை செய்துவிடாது. ரஷ்ய நிலத்தில் ஏராளாமான புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை எப்படி தோற்றுப்போயின என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிகள். அதற்கு பிறகு மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அதிகாரத்தை ருசிப்பதில் தங்களுக்குள் அடித்துக்கொண்டன. இதனால் அவர்கள் பெற்ற வெற்றியை எதிரிகளுக்கு தாரை வார்த்தனர். ஒரு நாட்டிற்கு அடிப்படையானது உணவு. மக்களின் ஆதரவோடு வென்றவர், திடீரென சர்வாதிகார பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கினால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியைப் பெற முடியாது. வெற்று சட்டங்கள் தொழில்துறையை இயங்க வைக்காது. உள்நாட்டு உற்பத்தி அதிகம் என்ற கூவல்கள், பசியோடு காயும் மக்களுக்கு வயிறார சோறு இட்டுவிடாது. அதற்கு சிந்தனை, செயல்திட்டம் என இரண்டும் தேவை. அரசின் வானொலி, நாளிதழ் விளம்பரங்கள், அறைகூவல்கள், கைக்கூலி ஊடகங்கள் சேர்ந்து உழைத்தாலும் கூட நாட்டை முன்னேற்ற ஆக்கப்பூர்வ செயல்திட்டம் தேவை, மக்களைப் பற்றி புரிந்துகொள்ள...

சமூக மாற்றங்களை அடிப்படையாக கொண்ட புரட்சி போராட்டம்!

      மக்கள் அதிகார தத்துவத்தில் கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டவர்களும் உண்டு. அதில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. இதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சமூகத்தில் உள்ள செல்வம், விடுதலை, நீதி, நலவாழ்வு அனைத்து மக்களுக்கும் புறக்கணிப்பின்றி கிடைக்கவேண்டுமென கம்யூனிச தத்துவம் வலியுறுத்துகிறது. இதில் நம்பிக்கை இல்லாதவர்களை தனித்துவவாதிகள் என்று கூறலாம். அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசு என்பது ஆக்கிரமிப்பு உணர்வு கொண்டது. மக்களை அழுத்தி நசுக்குவது, அநீதியை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொள்வர். தனிமனித வளர்ச்சியை அரசு அழித்தொழிக்கிறது. ஒரு சமூகத்தில் மனிதர்கள் மீது எந்த வித அழுத்தமும் உந்துதலும் இருக்கக்கூடாது. எனவே, அடிப்படையாக அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசை ஒழிப்பது என்ற கருத்தில் ஒன்றுபடுகிறார்கள். மியூசுவலிஸ்ட் என்ற பிரிவினர், மக்கள் அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள், அரசு என்ற அமைப்பை அடியோடு அறவே ஒழிக்க நினைப்பவர்கள். பிரெஞ்சு தத்துவவாதி ப்ரவுட்தோன் என்பவரை பின்பற்றுகிறார்கள். அரசு இல்லாத அமைப்பில் லாபநோக்கு இருக்காது என்பவர்கள். வட்டி இல்லாத கடன்...

வரி உட்பட அதிகபட்சவிலை என்பது நகைச்சுவையா?

படம்
      மதுரையைச் சேர்ந்த பல்பொடி நிறுவனம். பல்பொடி, அலுப்பு மருந்து என விற்று இன்று அதே பல்பொடியில் பற்பசை அளவுக்கு முன்னேறியுள்ளது. அந்த நிறுவனத்தின் பல்பொடி பிராண்ட் பத்து கிராம் அளவுகொண்ட பாக்கெட் ரூ.2 விலை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் ஐந்து ரூபாயில் விற்கிறார்கள். அப்போது ரூ.2 என விலையை அச்சிட்டுள்ளது நகைச்சுவைக்காகவா? ஐந்து ஆண்டுகள் என காலாவதி காலத்தை அச்சிட்டுள்ள துணிச்சலான நிறுவனம், விலையை ஏன் இப்படி மாற்றி விற்க வேண்டும் என்று தெரியவில்லை.  இந்த நிலையில் பல்பொடியை, சித்த மருத்துவம் என்று வேறு போட்டு அதையும் கீழான நிலைக்கு கொண்டுவருகிறார்கள். வியாபாரிகள் இன்று அரசியலில் வலிமை பெற்று வருவதால், குறைகளை சுட்டிக்காட்டினால் கூட சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து மிரட்டும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.   

சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம்?

படம்
              அடிப்படையில் ஒரு மனிதர் வேலை செய்து ஒன்றை உருவாக்குகிறார். அதை அவர் முழுக்க சமூகத்தின் உதவியின்றி உருவாக்கினார் என்று கூற முடியாது அல்லவா? அப்படி உருவாக்கியது சமூகத்தைச் சேர்ந்தது. அதை தனது சொத்து என கூறக்கூடாது. எனவே, அப்படி உருவாக்கிய பொருள் சமூகத்திற்கான சொத்து. நூல், வைரம், உடை ஆகியவற்றை உருவாக்கியவர்களுக்கு முக்கியமானதாக மதிப்புக்குரியதாக தோன்றலாம். மற்றவர்களுக்கு அதில் மதிப்பு இருக்காமல் இருக்கலாம். பசி நேரத்தில் ஒற்றை ரொட்டித்துண்டின் மதிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்? வைரமோ, தங்கத்தைவிட அதிகமாகத்தானே? பத்து ரொட்டிப் பாக்கெட்டுகளை இரண்டுபேர் வாங்க காத்திருக்கிறார்கள். எனில், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. இரண்டு பாக்கெட்டுகளுக்கு பத்துபேர் காத்திருந்தால் விலை அதிகரிக்கும். இதெல்லாம் விநியோகம், தேவையை அடிப்படையாக கொண்ட கணக்கு. ஒருவரின் உழைப்பை எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.அதற்கான அளவுகோலை பாரபட்சமில்லாமல் உருவாக்குவது எளிதான காரியமல்ல. லாபம், அதீத லாபம், குறைந்த கூலி என பாதையில் வேகமெடுத்தால் அதுதான் முதலாளித்துவப்பாதை. அங்கு, குறைந...

மழைப்பேச்சு பாட்காஸ்ட்!

  எதிர்வினை மழைப்பேச்சு பாட்காஸ்டில் கம்யூனிஸ்டின் உருவாக்கம் நூல் விமர்சனத்தைப் பற்றி திரு. கே வீரமணி அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ரகசியம் பேசுவது போல உள்ள குரல் கேட்க உகந்ததாக இல்லை. குரலை உயர்த்திப் பேசுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். அவருடைய கருத்துக்கு நன்றி. இனி வரும் பாட்காஸ்ட் ஒலித்தொகுப்பில் அவரது அறிவுறுத்தலை பின்பற்றி செய்ய முயல்கிறேன். மிக்க நன்றி! ரோனி மழைப்பேச்சு பாட்காஸ்ட்

திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன்?

படம்
      திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன் ? ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது உணவுக்கான தேடுதலை முடித்துவிட்டு குகைக்கு திரும்பி வரு வதில் பிரச்னைகள் எழவில்லை . அப்போது , மக்கள் தாம் கடந்து சென்ற வழித்தடத்தை மறந்துவிடவில்லை . அப்படி மறந்தால் உயிரை இழக்க வேண்டி வரும் . இன்று முன்பை விட வசதிகள் கூடி யுள்ளது . புதிய இடங்களுக்கு சென்று வர , செயற்கைக்கோளோடு இணைந்த வரைபட வசதிகள் உள்ளன . அவற்றைப் பயன்படுத்தியும் கூட மக்கள் வழிதவறி விபத்துகளை சந்தித்து வருகிறார்கள் . கிராமங்களில் வாயிருக்க வழி கிடைக்காமலா போகப்போகிறது என்பார்கள் . ஆனால் இன்று , மக்கள் பிறருடன் உரையாடுவதை விட தொழில்நுட்பத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள் . புதிய இடங்களுக்கு செல்வது என்றால் காரிலோ , இருசக்கர வாகனங்களோ உடனே அலைபேசியில் உள்ள வரைபட வசதியை சொடுக்கி இயக்குகிறார்கள் . அதில் கூறும் பரிந்துரைகளை மாறாமல் பின்பற்றுகிறார்கள் . இந்த வசதி பெரும்பாலான நேரம் சரியாக வழி காட்டுகிறதுதான் . மறுக்க முடியாது . ஆனால் சில சமயங்களில் தவறாக வழிகாட்டி விபத்து ஏ...