வெப்ப அலையை இயற்கை பேரிடர் பட்டியலில் சேர்ப்பதற்கு தயக்கம் என்ன?
வெப்ப அலைகள் பேரிடராக அறிவிக்கப்படக்கூடுமா? நாடு முழுக்க வெப்ப அலைகளின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. பள்ளி திறப்பு கூட தள்ளி வைக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் வெப்ப அலை தாக்குதலை, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் பேரிடராக அறிவிக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் உருவாகியுள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசுகள் தம் சொந்த நிதியையே இப்போதுவரை செலவிட்டு வருகின்றன. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெப்ப அலை வந்தால், நிதி ஒன்றிய அரசிடமிருந்து வர வாய்ப்புள்ளது. 1999ஆம் ஆண்டு ஒடிஷாவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி சம்பவம் ஆகியவற்றின் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் உருவாக்கப்பட்டது. இயற்கை அல்லது மனிதர்கள் உருவாக்கிய செயல்பாடு என இரண்டு வகையிலும் ஒன்றிய அரசின் உதவியை பேரிடர் காலத்தில் பெறலாம். இயற்கை பேரிடரில் சொத்துகள் இழப்பு, மக்கள் உயிரிழப்பு பேரளவில் ஏற்படும். அதை ஈடுகட்ட ஒன்றிய அரசு உதவுகிறது. ஒரு மாநிலத்தில் இயற்கை பேரிட...