இடுகைகள்

பரிசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்

படம்
      6 பாயும் பொருளாதாரம் ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிப...

அறமதிப்பீடுகளை பின்பற்றும் பழக்கம் எப்படி தொடங்குகிறது?

படம்
  லாரன்ஸ் கோஹ்ல்பர்க்  lawrence kohlberg ஒருவரிடம் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எப்படி உள்ளன என்பதை லாரன்ஸ் அறிய நினைத்தார். இதற்கென 72 சிறுவர்களை பங்கேற்க வைத்து இருபது ஆண்டுகளாக சோதித்தார். இவர்களின் வயது வரம்பு 10 முதல் 16 வரை. இதை எளிமையாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒருவரிடம் காசு இல்லை. ஆனால் அவரது நோயுற்ற மனைவிக்கு மருந்துகள் தேவை. அதை மருந்தகத்தில் இருந்து திருடவேண்டும் அல்லவா?  இப்படி திருடுவதில் மூன்று அம்சங்கள் உள்ளன. பரிசு, தண்டனை, பழிக்குப்பழியாக கிடைக்கும் தண்டனைகள் என அம்சங்களை ஒருவர் யோசித்துப் பார்க்கலாம்.  மக்கள் நிறையப் பேர் ஏன் திருட்டுகளில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அதற்கு முக்கியக் காரணம், அரசின் கடுமையான சட்டங்கள், அதிகாரத்தின் மீது கொண்ட பயம் காரணமாக வரும் கீழ்ப்படிதல். இதன் காரணமாக குற்றங்கள் குறைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு அடுத்ததாக, சரி, தவறு என்பதற்கு கிடைக்கும் பரிசுகள் வருகின்றன. மூன்றாவது நிலையாக ஒருவர் என்னை அடித்தால், நான் அவரைத் திருப்பி அடிப்பேன் என்று கூறுவது வருகிறது. இந்த நிலை பின்விளைவுகளை/எதிர்வினையை அடிப்படையாக...

நட்பை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்!

படம்
  நட்பு நட்பை வளர்த்துக்கொள்ள மேற்குலகில் எப்போதும் போல ஏராளமான நூல்கள் உள்ளன. உண்மையில் மனிதர்கள் தனியாக இருக்கும்போது பல விஷயங்களையும் தானே கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சுய உதவி, முன்னேற்ற நூல்களின் சாதனை விற்பனை அதைத்தான் விவரிக்கிறது. நட்பை துணையா கொள்ள என்ன செய்யலாம்… அதிர்ஷ்டம் உதவாது நட்பை உருவாக்குவதில் எதிர்பாராத விஷயங்கள், அதிர்ஷ்டம் என்பது உதவும் என ஒரு காலத்தில் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல. நட்பு என்பது உருவாக்கப்படவேண்டியது. அது தானாக உருவாகாது என எழுத்தாளர் சாஸ்தா நெல்சன் கூறுகிறார். இவர் ஹவ் டு டீப்பன் ஃபிரண்ட்ஷிப் ஃபார் லைஃப்லாங் ஹெல்த் அண்ட் ஹேப்பினஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். நம்பிக்கை அதுதான் எல்லாம் நம்பிக்கையோடு ஒருவரை சந்திப்பது, அவருக்கு சிறு பரிசுகளை அளிப்பது நட்பை புத்துயிர்ப்பு செய்யும் என பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. பரிசு என்பதன் கூடவே பாராட்டையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைக்கு ஒருவரைப் பாராட்டுவதை கூட குழுவாதம் அடிப்படையில் தனக்குப் பிடித்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வ...

சுதந்திரமான செக்ஸை அனுமதிக்காத ஆண்களுக்கு ஆர்சனிக் விஷமே பரிசு!

படம்
  நாஜிரெவ் என்ற ஊரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திஸா என்ற ஆற்றின் வழித்தடத்தில் உள்ள புதாபெ|ஸ்டிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நாஜிரெவ் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் ஒரே ஒரு பெண்தான். அவர் பெயர், ஜூலியா ஃபாஸேகஸ். கணவர் இறந்துவிட்டார் என கிராமத்திற்கு திரும்பி வந்தவரான   ஜூலியாவிடம்,   உறவினர்கள் கணவரின் இறப்பு பற்றி அதிகம் விசாரிக்கவில்லை. அதை சரியாக அறிந்திருந்தால் சற்று கவனமாக இருந்திருக்கலாம். செவிலியராகப் பணியாற்றிய காலத்திலேயே ஜூலியா, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு கருக்கலைப்புகளை செய்தார். அதன் விளைவாக, நீதிமன்றத்தால் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். ஆனால் பெண் என்று நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது சற்று தயை காட்டினர். பிறரின் கருணை பற்றியெல்லாம் ஜூலியா எப்போதும் கவலைப்படவில்லை. பிரச்னை என வருபவர்களுக்கு, கணவர் பற்றி புலம்புபவர்களுக்கு கையிலேயே நிரந்தரமான தீர்வை கொடுத்துவிட்டார். இதற்கான விளைவாக ஏராளமான மரணங்கள் நடந்தன. முதல் உலகப்போரில் பிடிபட்ட வீர்ர்களை அடைத்து வைக்க நாஜிரெவ் கிராமம் சரியான இடமாக ராணுவத்தினர...

புத்தாண்டு பரிசாக நகுலன் சிறுகதைகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  22.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமா? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார். புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன். பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது. ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது. பெண்களின் மேம்பாடும், கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறது. இடதுசாரிகள், வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர்.  பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து, அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எனக்கு பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன். நன்றி! அன்பரசு  27.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, ...

பழக்கங்களின் நதிமூலம், ரிஷி மூலம்! - நல்ல பழக்கங்களை எப்படி தொடர்வது?

படம்
          பழக்கங்கள் எப்படி உருவாகின்றன ? குழந்தைகளாக இருக்கும் யாரும் பழக்கத்தை தானாக வே பழகுவதில்லை . கர்லான் மெத்தையில் குழந்தையை படுக்க வைத்திருக்கு்ம்போது கூட அதற்கு அதன் தேவை என்னவென்று முதலில் தெரியாது . ஆனால் தினசரி அதில் படுத்து தூங்குபவர்களுக்கு அதன் பயன்பாடு என்னவென்று தெரிந்துவிடும் . பல்வேறு பழக்கங்களை குழந்தைகள் வீட்டில்தான் கற்கிறார்கள் இவற்றைக்கூட பெற்றோரைப் பார்த்துதான் கற்கிறார்கள் . அதிலும் குழ்ந்தைப்பருவத்தில் கற்கும் பல்வேறு பழக்கங்களை அவர்கள் வயது முதிரும்போது கைவிடுகிறார்கள் . அப்படியும் நல்ல பழக்கங்கள் நீடித்திருந்தால் , பின்னாளில் அவை வாழ்க்கைக்கு உதவலாம் . இப்போதும் கூட சிலர் குழந்தையாக இருக்கும்போது கற்ற கைவிரல்களை சூப்புவது , காது மடல்களை இழுத்துக்கொண்டே நடப்பது ஆகிய பழக்கங்களை சிலர் எப்போதும் செய்வார்கள் . அனைத்து நல்ல பழக்கங்களுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும்தான் . இதனை புரிந்துகொண்டு அதற்கேற்ப மனவலிமையோடு பழக்கங்களை தொடர்ந்தால் மட்டுமே அதற்கான விளைவுகளைப் பெறமுடியும் . நல்ல பழக...

நல்ல பழக்கங்களை குழந்தைகள் பின்பற்ற பரிசு கொடுங்கள்!

படம்
            குழந்தைகளின் மூளை வளர்ச்சி வேகம் ! குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருக்கிறது . ஆனாலும் கூட அவர்கள் உலக அனுபவங்களைப் பெற்றும் முதிர்ச்சி அடையும் வரை அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது . இதனால்தான் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து அழுவது , கோபம் கொள்வது , வருத்தப்படுவது , பொறாமையுறுவது ஆகியவற்றை வெளிப்படையாக காண்பிக்கிறார்கள் . இதே விஷயங்கள் முதிர்ச்சியுள்ள மனிதர்களுக்கு உண்டுதான் . ஆனால் ஏன் வெளிப்படுவதில்லை ? காரணம் அப்படி வெளிப்படுவது நமது சமூக அந்தஸ்துக்கு பொருத்தமானதில்லை எனநம்புகிறோம் . குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற அல்லது வெளியிடங்களில் பார்க்கும் , கேட்கும் , பேசும் விஷயங்களை கவனிக்கிறார்கள் . அதனை கற்றுக்கொள்வதை இன்டக்டிவ் லேர்னிங் என்று கூறுகிறார்கள் . குழந்தைகளின் மூளைவளர்ச்சி பெறாத நிலையில் வெடிக்கும் எரிமலை போல உணர்ச்சிகளை கொட்டுவார்கள் . ஆனால் அவர்களின் வயது மூன்று அல்லது நான்கு என ஆகும்போது , கவனம் , உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாடு இருக்கும் . நின...

புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

படம்
            இலக்கு நோக்கிய பயணம் வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும் . அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார் . குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும் . முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும் . இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை . பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும் . தூண்டுதல் பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம் . சுத்தமான பற்கள் , நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள் . இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும் . உடற்பயிற்சி , நல்லுணவு , தூயஆடை , ஆளுமை மாற்றங்கள் ஆகியவ...

இன்றைய உலகில் டிரெண்டாகும் காதல் வார்த்தைகள், டேட்டிங் டிரெண்டுகள்! - காதலே ஜெயம்

படம்
                காதல் டிரெண்டுகள் ஸ்லோ டேட்டிங் நிதானமாக ஆழமாக ஒருவரைப் புரிந்துகொண்டு காதலிப்பது . ஒருவரின் மீது இயல்பாக உணர்வுரீதியாக ஆர்வம் பிறக்க இதில் வாய்ப்புள்ளது . அட்வோ டேட்டிங் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்றுகூடிய சிலர் காதலாகி கசிந்துருகி கல்யாணம் செய்துகொண்டார்களே அந்த வகை . சமூகம் , அரசியல் தொடர்பான பிரச்னைகள் இரு மனங்களை் ஒன்றாக இணைத்து மூன்று முடிச்சு போடுவது . துன்பெர்க்கிங் சூழலுக்காக போராடி வரும் கிரேட்டா துன்பெர்க் எப்போது காதலுக்கு உதவினார் என்று உதவக்கூடாது . அவரால் உந்துதல் பெறு சூழல் தொடர்பாக இருபாலினத்தவருக்கும் ஆக்ரோஷம் பொங்கி போராடி காதலாகி பிறகு ஒரே அறையில் மல்லுக்கட்டி காதலின் பொருளை அறிவது… . ஸ்பீடு ரூமிங் பெருந்தொற்று காலத்தில் பல காதல் ஜோடிகள் முடிந்தவரை ஒன்றாக இருக்க நினைத்தார்கள் . அதைச்சொல்லுகிறார்கள் . காதலுக்கு எல்லை கிடையாது இன்று ஆபீஸ் வேலை கூட கணினியில் தான் நடக்கிறது . இந்த நேரத்தில் காதல் , கல்யாணமும் விரைவில் அதற்கு நகர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது . அப...

நாயிடம் எப்படி பழக வேண்டும்? - நடத்தை உளவியல் ஆய்வு

படம்
pixabay உளவியலும் பழகும் முறையும் ஒருவர் சமூகத்தில் பழகும் முறை சார்ந்து அவரின் உளவியலை ஆராய்ச்சி செய்கின்றனர். இதற்கு பிஹேவியர் சைக்க்காலஜி என்று பெயர். உங்களுடைய நண்பர் இருக்கிறார். அவரை நீங்கள் எப்படி நண்பராக ஏற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? அவரின் பழகும் முறை, கருத்து, வெளியில் நடந்துகொள்ளும் முறை இவை உங்களுக்கு அவரிடம் பிடித்திருக்கலாம். பொதுவாக நம் கருத்துக்கு இசைந்தவர்களையே நாம் நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறோம். இதைத்தான் நடத்தை உளவியல் என வரையறுக்கலாம்.  உலகில் ஒருவர் பார்க்கும் விதம், அவரின் கருத்து சார்ந்து நடத்தை உளவியல் உருவாகிறது. இதற்கான சோதனைகள் தனியே குறிப்பிட்ட இடத்தில் நடப்பவையே. இவற்றில் நடத்தை உளவியல் சாரந்த பல்வேறு அறிஞர்களின் கோட்பாடுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து ஒருவரின் நடத்தை உளவியல் தீர்மானிக்கப்படுகிறது.  1913ஆம் ஆண்டு ஜான் வாட்சன் என்ற ஆய்வாளர் நடத்தை உளவியல் என்ற பதத்தை உருவாக்கினார். இதன் செயல்பாட்டில் மனிதர்களின் பங்கு, மனம் பற்றி வரையறைகளை உருவாக்கினார். அவற்றை இன்றளவும் ஆய்வ...

பரிசு தரும்போது குழப்பம் ஏற்படுகிறதா?

படம்
மிஸ்டர் ரோனி பிறருக்கு பிறந்தநாள், திருமணம் என வரும்போது பரிசுகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் திணறுகிறேன். ஏன் இப்படி? எங்கள் அலுவலகத்தில் கூட ஒருவர் கல்யாணத்திற்கு ரெடியானார். அவர் பத்திரிகை வைக்கும்போதே அலுவலக சகா, நான் திருமணத்திற்கு வர முடியாது என்று சொன்னார். சொல்லிவிட்டு உடனே இன்டக்ஷன் ஸ்டவ்வை எடுத்து நீட்டிவிட்டார். அதை எதிர்பாரக்க நண்பர், சட்டென முகம் சுருங்கிவிட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு பரிசை ஏற்றுக்கொண்டார். இங்கு இரண்டு விஷயங்கள் நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று திருமணம் செய்பவருக்கும் பரிசளித்த நண்பருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இரண்டு, திருமணம் நடந்து முடிந்த பிறகு கூட அவர் இன்டக்ஷன் ஸ்டவ்வைத் தந்திருக்கலாம். உடனடியாக பரிசு தந்து  அதன் வழியாக நான் வரவில்லை என்பது நாகரிகமான முறை அல்ல. உங்களுக்கு நேருவதும் இதுதான். நீங்கள் பரிசளிக்கப் போகிறவர் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால எளிதாக பரிசைத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால் அவருக்கு என்ன பிடிக்கும், அமேசானில் விஷ் லிஸ்ட் என எதைத்தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் என பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் கஷ்டம...