இடுகைகள்

பெரியார் ஆயிரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதத்தைக் காப்பாற்றி தீண்டாமையை விலக்கிவிட முடியாது!

படம்
            பெரியார் ஆயிரம் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும் அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன, தோஷமென்ன, எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியமில்லை. மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக்கூடாது. காரியத்தில் உறுதியாக நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத்தனத்தால் நாடு முன்னேற முடியாது. நன்றி பெரியார் ஆயிரம் வினா விடை நூல் தொகுப்பாசிரியர் கி வீரமணி திராவிட கழக வெளியீடு    https://in.pinterest.com/pin/215891375886010962/ https://in.pinterest.com/pin/510806782749306029/

தாய்மொழி என்பது நமது போர்க்கருவி!

      பெரியார் ஆயிரம் பாட புத்தக கமிட்டியில் உள்ளவர்கள், தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரத கதைகளை சரித்திரத்தில் சேர்க்க சம்மதிப்பார்களா? நம் பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ் வகுப்பில் இருந்து தெரிந்துகொள்ள வழி செய்தால் ஒழிய எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும்போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக்கூடிய, முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றைக் கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. பள்ளியில் தமிழர் திராவிடர் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை. அங்கு அய்யர், பிராமணன் போன்ற வார்த்தைகள் மட்டுமே காணப்படுகின்றன. மேல்வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், அசோகன், முஸ்லீம், வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே  தவிர திராவிடர் தமிழர் ஆட்சியைப் பற்றி காண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவது காணப்பட்டாலும் அது பெரும் பித்தலாட்டமும், மோசடியுமாக இருக்கும். தமிழ் ம...