இடுகைகள்

உயிரியல் கடிகாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூக்க குறைபாடுகளின் வகை, விமானப் பயண ஜெட்லாக் - மிஸ்டர் ரோனி

படம்
          அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி தூக்க குறைபாடு நோய்கள் வகைகள் உண்டா? அனைவரும் அறிந்த தூக்க குறைபாடு என்பது இன்சோம்னியா. இரவில் தூக்கமின்மை, தூங்காமல் விழித்திருப்பது, படுத்தாலும் ஓய்வே இன்றி எழுவது ஆகியவை இன்சோம்னியாவின் அறிகுறிகள். இக்குறைபாட்டிற்கு காரணமாக மன அழுத்தம், சோர்வு, மது அருந்துவது, காபி, தேநீர் அருந்துவதை காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஹைப்பர் சோம்னியா, பகல் இரவு என பாராமல் எப்போதும் தூங்கி வழிவது. இந்த வகையில் இக்குறைபாடு, இன்சோம்னியாவிற்கு அப்படியே எதிரானது. நார்கோலெப்சி, எப்போது ஒருவர் தூங்குவார் என்றே கூறமுடியாது. சில நிமிடங்களில் தூக்கத்தில் ஒருவர் ஆழ்ந்துவிடுவார். தூக்க செயலிழப்பு என மருத்துவர்கள் நார்கோலெப்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். உணர்ச்சிகரமான நிகழ்வுகள், திடீர் தூக்கத்தை தூண்டிவிடுகின்றன. கண்கள் விழித்திருக்கும், மூச்சுவிடுவார்கள், மூளை செயல்படும். ஆனால் உடல் செயலிழந்த நிலையில் இருக்கும். ஸ்லீப் அப்னியா, குறைபாட்டில் ஒருவர் தூங்கும்போது திடீரென மூச்சு நின்றுபோய்விடும்.இதனால், அவர் தூக்கத்தில் இருந்து எழ நேரிடும். பலருக்கு...

கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா?

படம்
              கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா ? சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழவேண்டியது ஆரோக்கியத்திற்கு முக்கியம் . ஆனால் இன்று நகரவாசிகள் நள்ளிரவில் படுத்து காலையில் 9.30 க்கு ஆபீஸ் செல்லவேண்டிய அவசரத்திற்கு வேகமாக எழுந்து வருகின்றனர் . இது அவர்களின் உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தை பாதிக்கிறது . உயிரியல் கடிகாரம் என்பது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குமுறைபடுத்துகிறது . இதுவே பகலா , இரவா எந்த நேரத்தில் உறங்குகிறோம் என்பதை கவனிக்கிறது . ஆனால் இந்த கடிகாரம் நாம் தூங்கவேண்டிய நேரத்திற்கு அலாரமடித்து நம்மை உஷார் செய்யாது . ஆனால் எழவேண்டிய நேரத்தை இதுவே தீர்மானிக்கிறது . இதுபற்றி சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது . அதில் ஒருவ்ர் தூங்கச்செல்வது அவரின் கலாசார அழுத்தம் சார்ந்தது . ஆனால் எழுவதை உயிரியல் கடிகாரம் தீர்மானிக்கிறது என்றார் ஒலிவியா வாட்ச் . இவர் , மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தூக்கம் பற்றிய ஆய்வை செய்து வரும் பட்டதாரி மாணவி . . இந்த ஆய்வில் நூறு நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பங்கேற்பாள...