இடுகைகள்

சமணர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலையை ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கவேண்டும்!

படம்
    நேர்காணல் கலை ஆய்வாளர் சர்யூ வி தோஷி எழுத்து, பயணம், உரை, திட்டமிடல், வழிகாட்டுதல் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறீர்களே? சுற்றுலா துறையில் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்கான கமிட்டியில் கூட பங்காற்றியுள்ளேன். எனக்கு பல்வேறு செயல்பாடுகளை செய்யப்பிடிக்கும். உரை, பேச்சு, கண்காட்சி, கலை விழாக்கள், நாடகம், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கேற்றுள்ளேன். நிறைய மனிதர்களை சந்திப்பது பிடித்தமானது. எனது வீட்டில் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுவதற்கான இடமாகவே இருந்துள்ளது. என்னுடைய மாமியார் வீடு செவ்வியல் இசை, மராத்தி நாடகங்களை போற்றுபவர்கள். இது கலைக்கான காலம். கலையில் புதிய ஆற்றல் உருவாகி வருகிறது. இதன் காரணமாகவே துக்ளக் நாடகத்திற்கான உடை வடிவமைப்பை நான் செய்யும் சூழல் உருவானது. மும்பையைச் சேர்ந்த சபயாச்சி முகர்ஜி உங்களுக்கு கலை பற்றிய தொலைநோக்கு பார்வை உள்ளதாக கூறியுள்ளார்? நேரடியான பார்வையை தாண்டி கலைப்படைப்பில் மறைந்துள்ள மர்மங்களை கண்டறிய முயல்கிறேன். அதைத்தான் அவர் கூறியுள்ளார் என நினைக்கிறே...

சமணர்களின் வாழ்க்கையைச் சொல்லும் அருகர்களின் பாதை! - கடிதங்கள் கதிரவன்

படம்
  13.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மயிலாப்பூரில் வெள்ளப்பிரச்னை குறைவு. ஆனால் முதல்வர் தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியான ராதாகிருஷ்ணன் சாலை மழைநீரால் மூழ்கிவிட்டது. வடிகால் அமைப்புகள் சரியாக இயங்கவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் வடிகால் அமைப்பில் அடைத்துக்கொண்டுவிட்டன. சாலையில் தூய்மை பணியாளர் குப்பைகளை மழைநீரில் அகற்றிக்கொண்டிருக்கும்போதே, ஒருவர் அலுவலகத்தில் இருந்து குப்பையை எடுத்து சாலையில் வீசி எறிந்தார். என்ன சொல்வது இவர்களை? ஒவ்வாமைக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். ஊருக்குப் போய் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.  நாளிதழ் தொடங்குமா என்றே தெரியவில்லை. வேலை என்ற பெயரில் ஏதோ சமாளிப்பது போலவே தெரிகிறது. சீன சிறுகதைகள் -வானதி, அருகர்களின்  பாதை - ஜெயமோகன் என இரு நூல்களைப் படித்தேன். ஜெயமோகனின் எழுத்து பயணத்தின்போதும்,  காடுகளை விவரிக்கும்போதும் புத்துயிர் கொள்கிறது. சில இடங்களை காவிக்கட்சிக்கு ஆதரவாக வரிந்துகட்டி எழுதியிருக்கிறார்.  அதை தவிர்த்துவிட்டுப் படித்தால் பி...

அறையில் மலராக பூக்கும் பூஞ்சை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வரும் வாரத்தில் நாளிதழ் வேலைகள் தொடங்கவுள்ளன. தீபாவளி  அன்று தாமதமாக எழுந்தேன். இப்போது நான் இருக்கும் மூன்றாவது மாடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் நான்கு பேர்கள்தான் இருந்தோம். இப்போது பக்கத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை குளியலறை, கழிவறையைப் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு 7 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று விடுகிறேன்.  அந்திமழை இதழைப் படித்தேன். பெண்களின் மனத்தைப் பற்றி சிறப்பிதழாக செய்திருந்தார்கள். எழுத்தாளர் கலாப்ரியா எழுதியிருந்த கட்டுரை நன்றாக இருந்தது. நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டால் வாழ்க்கை மிக பரபரப்பாக மாறிவிடும். இப்போதே ஓரளவு எழுதி வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தில் அருகர்களின் பாதை  நூலை வாங்க வேண்டும். தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் அலுவலகத்தில் உள்ள கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றோம். அ...