இடுகைகள்

சர்வாதிகாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!

படம்
  சர்வம் ஸ்டாலின் மயம் மருதன் கிழக்கு பதிப்பகம் ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது. 139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை. ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும். லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற...

சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கூறும் நூல்!

படம்
 ஆன் டைரனி டிமோத்தி ஸ்னைடர் இந்த நூல், சர்வாதிகாரம் எப்படி தொடங்குகிறது, அதற்கு ஆதரவு கிடைப்பது எங்கிருந்து, மக்கள் அதை ஏன் ஏற்கிறார்கள் என்பதை இரு உலகப்போர்கள் பின்னணியில் இருந்து ஆராய்கிறது. சர்வாதிகாரம் பற்றிய அடிப்படைக் கருத்து ஒன்றைக் கூறிவிட்டு வரலாற்று சம்பவங்களுக்கு நூல் செல்கிறது. இது படிக்க சற்று ஆறுதலைக் கொடுக்கிறது. எழுத்தாளர் டிமோத்தி, வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டுரை எழுதினால், அது நூலை பலநூறு பக்கங்கள் கொண்டதாக எளிதாக மாற்றியிருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. சர்வாதிகாரம் வளர்ந்து வரும் நாடாக இந்தியாவையும் எழுத்தாளர் டிமோத்தி குறிப்பிட்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. அவர் வரலாற்று ரீதியாக ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு நிறைய சம்பவங்களை விளக்குகிறார். அவற்றைப் படிக்கும்போதே நமக்கு திகைப்பாக உள்ளது. ஒரு போர் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவாக, எதிராக அணி திரள்வோருக்கு பல திட்டங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதைப்பற்றிய விவரிப்பு யூதர்களின் இனப்படுகொலையை எப்படி வல்லரசு நாடுகள் கண்டும் காணாமலும் இருந்தன என்பதை விளக்கிக் ...

கிளர்ந்தெழு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
 ராக்குட்டன் கோபோ, ஸ்மாஷ் வேர்ட்ஸ், விவலியோ, பாரோபாக்ஸ், டோலினோ, பேக்கர் அண்ட் டெய்லர், க்ளவுட் லைப்ரரி, ஓவர் ட்ரைவ், பேலஸ் மார்க்கெட் பிளேஸ் ஆகிய வலைத்தளங்களில் கிடைக்கும்  கிளர்ந்தெழு (kilarnthelu)       https://books2read.com/u/m2D611

சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

படம்
  சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? அனைத்து விதிகளையும் சட்டங்களையும் சர்வாதிகார அரசு உடைத்தெறியும் என சட்ட கோட்பாட்டாளர் கார்ல் ஸமிட்ச்ட் கூறினார். நாட்டை நிரந்தரமான அவசர நிலைமையில் வைத்திருக்க முயல்கின்றனர். அப்போதுதான் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக, அடிப்படை சுதந்திரத்தை விலைபேச முன்வருவார்கள். தீவிரவாதம் பற்றி இன்றைக்கு நிறைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மக்கள் அதை நம்பி விடக்கூடாது. அதில் எந்த உ்ணமையும் இல்லை. அடிப்படை உரிமைகளை இழந்தால் அரசு கொடுப்பதாக கூறும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதும் நடைபெறுவதுண்டு. அதிகாரத்திற்கு கீழ்ப்படிவது சற்று இணக்கமான பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம், பாதுகாப்பு என இரண்டையும் இழந்துவிடுகிறோம். பாசிஸ்ட் ஒருவருக்கு வாக்களித்தால், மோசமான நிலையே கிடைக்கும். சர்வாதிகாரிகள், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசும்போதெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள், தங்களுடைய கருத்துகளை எதிர்ப்பவர்களை, விமர்சனம் செய்பவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்...

சர்வாதிகாரம் - அமைப்புகளை காப்பாற்றுதல்

படம்
    சர்வாதிகாரம் அமைப்புகளை காப்பாற்றுதல் அரசு அமைப்புகள் நாகரிகத்தை ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுகின்றன. அவற்றுக்கு மக்களின் உதவியும் தேவைப்படுகிறது. அமைப்புகளுக்காக அதனால் பயன்பெறும் மக்கள் ஆதரவாக நின்று பேச வேண்டும் போராடவேண்டும். அமைப்புகளுக்கு சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கிடையாது. அவை பாதுகாக்கப்படாதபோது ஒன்றன்பின் ஒன்றாக வீழ்வதைப் பார்ப்போம். இதற்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றம், நாளிதழ், சட்டங்கள், தொழிலாளர் சங்கங்களைக் கூறலாம். பெரும்பாலான சர்வாதிகார ஆட்சி என்பது மக்களால் வழங்கப்படுவதுதான். இத்தகைய நெருக்கடியான சூழலில் முன்னமே தங்களை அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதாக ஒப்புக்கொடுக்க கூடாது. 1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அரசை அமைத்துவிட்டார். அப்போது பிப்ரவரி மாதம் வெளியான யூதர்களின் நாளிதழில், ஹிட்லர் தனது பிரசாரத்தில் கூறிய யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என நம்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், சர்வாதிகாரி சொன்னதை செய்து முடித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அனைத்து அரசு அமைப்புகளும் நாஜி கட்சியினரால், அதன் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது. நாட்டில் ...

சர்வாதிகார அரசுக்கு எதிரான போராட்டம்!

படம்
      மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள், வன்முறையை கையாளக்கூடியதாக கருதுகின்றன. போராட்டத்தில் அதுவும் ஒருவகை பாணி. மற்றபடி யாராவது தனிநபர்களை படுகொலை செய்வதோ, காவல்துறையை தாக்கி வீழ்த்துவதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை. பெருநிறுவனங்களை தாக்குவது கூட முதலாளித்துவத்தை எதிர்க்கும் கருத்தை வெளிப்படுத்த மட்டுமே. அதிலுள்ள ஊழியர்களை, தாக்குவதோ கொல்வதோ நோக்கமல்ல. மேலாதிக்கம் கொண்ட அரசுகள், தங்களை விமர்சிக்கும் தனிநபர்கள் அல்லது பத்திரிகை நிறுவனங்களை தாக்குவது, நெருப்பிட்டு எரிப்பது, இணைய இணைப்பை தடுப்பது என பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலை விடுக்கின்றன. ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்த முன்னாள் நடிகர் தொடங்கிய கட்சி, தனது கட்சியை விமர்சித்த ஆங்கிலப் பத்திரிகையை குண்டர்கள் விட்டு தாக்கியது. அச்சு எந்திரங்களை அடித்து உடைத்தது. மேலதிகமாக, அங்குள்ள பெண் பணியாளர்களை மானபங்கம் செய்ய முயன்றது. இதுபோன்ற ஆட்களிடம் நீங்கள் அகிம்சை போராட்டம் சாத்தியம் என நினைக்கிறீர்களா என்ன? இதனால்தான் ரௌடிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பேசுவோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். இதில் வெளிப்படும் செய்தி பற்றி சொல்பவருக்...

பன் பட்டர் ஜாம் 2 - இநூல் வெளியீடு

படம்
     சர்வாதிகார அரசுக்கு துணையாக நிற்பவர்கள் இடது, வலதுசாரி ஆட்கள் அல்ல. அரசு கூறும் செய்திகளை உண்மையா, பொய்யா என்று தெரியாமல் குழம்புபவர்கள், நம்புபவர்கள்தான். இம்மாத காலச்சுவட்டில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய கட்டுரையில் வரும் இறுதி பத்திவரிகள் இவை. இந்த இநூலுக்கும் பொருந்திப்போகிற ஒன்று.   https://open.substack.com/pub/anbarasushanmugam/p/2-40d?r=396v6&utm_campaign=post&utm_medium=web&showWelcomeOnShare=true

சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்!

படம்
        சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்! இந்தியாவில் வலதுசாரி மதவாத கட்சி ஆட்சிக்கு வந்தது தொடங்கி அடக்குமுறை சட்டங்களில் மனித உரிமை போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்யப்படுவதுஅதிகரித்தது. கைதானாலும் விசாரணை முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் சிறையில் தள்ளி சட்ட உரிமைகளைப் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை எழுதும்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரான மனிஷ் சிசோடியாவுக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருக்கிறார். அவரை அமலாக்கத்துறை, பல்வேறு போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்து வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளின் வெற்றியை, விமர்சனங்களை பொறுக்கமுடியாத மதவாத கட்சி, அரசு அமைப்புகளை பயன்படுத்தி தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது. இதற்கு ஏதுவாக புதிய குற்றவியல் சட்டங்கள் வடமொழியில் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவரின் அடிப்படை சட்ட, மனித உரிமைகளை பறிக்கும் அம்சங்கள் ஏராளமாக உள்ளன. இந்திய குற்றவியல் சட்டம் 1860 இன்படி, 32 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர...

ஈகோ சோசலிசம் - முதலாளித்துவத்ததிற்கு மாற்றா?

படம்
ஜனநாயகப் பாதை வழியாகவே சர்வாதிகாரம் உள்ளே நுழைகிறது. இதை தவறு என்று சொல்ல முடியாது. அந்தந்த காலகட்ட மக்கள் சர்வாதிகாரியை அவர்களாகவே வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். பின்னாளில் செய்த தவறின் விளைவை அனுபவிக்கிறார்கள். அரசும் அதன் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. இந்தியா போன்ற நாட்டில் என்ஜிஓ அரசு என்பது சற்று புதிது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்றை காங்கிரஸ் காலத்தில் வலதுசாரி ஆளுமைகள் நடத்தினர். அந்த போராட்டத்தின் வழியாக ஆம் ஆத்மி கட்சி தோன்றியது. இந்த கட்சியின் செயல்பாடு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒத்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தாலும் கூட அக்கட்சி தலைவர், தவறான குற்றச்சாட்டில் சிறைபடும்போதுகூட மக்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை, சாலையில் நின்று தாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வரை விடுவியுங்கள் என்று கோஷமிடமில்லை. அமைதியாக அரசு காரியங்கள் நடைபெறுகின்றன. இப்படிக்கூட அரசு செயல்பட முடியும் என்ற ஜனநாயக அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நாட்டில் எதற்கு போராட்டம் நடைபெறுகிறது? மக்களின், விவசாயிகளின், தொழில்துறையினரின், சிறுபான்மையினரின் கோரிக...

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன...

தனிநபர் சுதந்திரத்திற்கு மதிப்பளித்த உளவியலாளர் சாலமன் ஆச்!

படம்
  தனிநபர் சுதந்திரம்  வெளிநாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக மதிப்புண்டு பிற மூன்றாம் உலக நாடுகளை விட அங்கு கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கிறார்கள். ஆனால் அதேசமயம் மறைமுகமாக கண்காணிப்பும் களையெடுத்தலும் உண்டு. இன்று வலதுசாரிகளின் தலையெடுப்பால் கண்காணிப்புச் சட்டங்களும், சர்வாதிகார நிர்வாக முறைகளும் என நிலைமை வெகுவாக மாறிவருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து சுதந்திரம் சார்ந்த பாதைக்கு வந்து சேர பலநூறு ஆண்டுகள் பிடித்தன இந்த நாடுகளில் குழுக்களை விட தனிநபர்களுக்கே அதிக மதிப்புண்டு. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஃபிஜூ ஆகிய நாடுகளில் குழுக்களுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்புண்டு.  தொடக்க கால அமெரிக்காவில், கம்யூனிசம் பேசினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்வது வழக்கம். சொந்தகருத்துகளை பேசியவர்களை, மனித உரிமைக்கு குரல் கொடுத்தவர்களை தேசதுரோகி என்று கூறிவிடுவார்கள். இப்படி மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படையாக பேசும் தனிநபர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகளை கைது செய்யும் வழக்கத்தை தொடங்கியவர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் மெ...

ஜனநாயகம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

படம்
  ஜனநாயக வழியில் என்னை தூக்கி எறிய முடியாது - ஷேக் ஹசீனா என்னை அழிக்கவேண்டுமென்றால் கொல்லவேண்டும். மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார் என்று  கூறி தனது வழியில் நாட்டை ஆட்சிநடத்திக் கொண்டு செல்கிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. 170 மில்லியன் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியாக, நாட்டின் பிரதமராக எழுபத்து நான்கு வயதிலும் உறுதியாக நிற்கிறார்.  மத்திய கிழக்கு நாடுகளை விட அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு. அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் ராணுவ ஆட்சி காலம், நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டுக்குள் கூட்டிச்சென்றது. இதெல்லாம் கடந்து 2009ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலமாக அங்கு ஆட்சி செய்வது ஹசீனாதான். எனது பெரும் பலமே மக்கள்தான். என்னுடன் மக்கள் நிற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறுபவர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்கரேட் தாட்சர் ஆகியோர் செய்த தேர்தல் சாதனைகளை கடந்து நிற்கிறார்.  வங்கதேசத்தில் புகழ்பெற்ற வலிமை பெற்ற இரு கட்சிகள் உண்டு. ஒன்று, ஹசீனாவின் ஆவாமி கட்சி, அடுத்து வங்கதேச தேசியவாத கட்சி. அண்மையில் தேசியவாத கட்சி, வங...

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை த...

செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?

படம்
  ஹியூமன் கம்பாட்டிபிள் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் வைகிங் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள், அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார். அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின் டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு உதாரணம். செயற்கை நுண்ணறிவை அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம் முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக பிடித்து ஒழித்துக்க...