இடுகைகள்

மோசடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை மக்கள் நம்புவது ஏன்?

படம்
  psychology  mr roni ஜான் வெய்ன் கேசி, ஜெப்ரி டாமர் ஆகிய தொடர் கொலைகாரர்களின் உளவியல் என்ன? குற்றச்சம்பவங்கள் பத்திரிகையில் சிறப்பாக விற்பதால், அதை பிரசுரித்து விற்க நாளிதழ்கள், டிவிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் பிரபலமானவர்கள்தான் மேலேயுள்ள இரு தொடர் கொலைகாரர்களும். கேசி எழுபதுகளில் பிரபலமானவர். டாமர் தொண்ணூறுகளில் பேசப்பட்ட ஆள். கேசி, பாலியல் ரீதியான முப்பது ஆண்களை தாக்கி கொன்றார். அவர் குழந்தை போல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஆளுமையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று குழந்தை போல ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பது. இரண்டாவது, கொடூரமான கொலைகாரர். டாமர் ஒரு குடிநோயாளி. உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். இளம் வயதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்டிருந்தார். டாமர், கேசி ஆகியோர் இருவருமே சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டனர்.  கெல்லி மைக்கேல் வழக்கு பற்றி தெரியுமா? சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டிய நர்சரி பள்ளி ஆசிரியர். எண்பது, தொண்ணூறுகளில் கெல்லி பற்றிய விவகாரம் வெளியே வந்தது. அவர் வேலை செய்ய பள்ளியில் 115 புகார்கள், பாலியல் சுரண்டல் தொடர்பாக வ...

சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?

படம்
 சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா? அண்மையில் சிங்கவலிமையை மனிதர்களுக்கு கடத்தும் பேரீச்சை பழ பிராண்டு ஒன்றை வாங்கினேன். கால்கிலோ பாக்கெட் 105 ரூபாய். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரீதியில் கடையில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தது. விவகாரம் என்னவென்றால், உண்மையில் அந்த பேரீச்சம்பழம் தரமானதா இல்லையா என்பதுதான். பாக்கெட் பளபளவென அழகாக உருவாக்கி இருந்தனர். விஷயம் வீக்காக இருந்தால் பப்ளிசிட்டி பீக்காக இருக்கும் என்ற தத்துவப்படியே பழ பிராண்டு இருந்தது.  தேயிலை, காபித்தூளுக்கு கொடுப்பது போல ஜிப்லாக் பாக்கெட்டை தயாரித்து இருந்தார்கள். ஆனால், ஈராக்கில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழம் பக்குவப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்டுகிறது. அது எந்தளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்? பழம்தான் புதிதாக இருக்குமா என்ன? அதற்கு எதற்காக ஜிப்லாக் பாக்கெட். வெட்டி விளம்பரம்தான். முக்கியமாக பழத்தை கழுவி சாப்பிடுங்கள் என பான் இ்ந்தியா லெவலில் பன்மொழி முன்னறிப்பு வேறு. ஆனால், தண்ணீரில் கழுவினால் பேரீச்சையில் கொட்டை மட்டுமே மிஞ்சியது. அந...

பங்குச்சந்தை மோசடியின் வலைப்பின்னல் - அதானி குழும மோசடியில் செபிக்கு உள்ள கூட்டுப்பங்கு

படம்
            பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில், மொரிஷியஸ் நாட்டில் உள்ள போலி நிறுவனங்களைப் பற்றி கூறப்பட்டிருந்தது. இந்திய அரசின் பங்குச்சந்தை அமைப்பான செபி ஆச்சரியமூட்டும் விதமாக, அதானி குழும மோசடி பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விசாரணையையும் முறையாக நடத்தவில்லை. கார்ப்பரேட் நிறுவன வரலாற்றில் மிகப்பெரும் மோசடியான அதில், மொரிஷியஸ் நாட்டில் பரிமாறிய பங்குகள், அரசிடம் தெரிவிக்கப்படாத முதலீடுகள், பங்கு முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் இருந்தன. அதற்குப்பிறகு, அந்த விசாரணையை எங்களோடு சேர்ந்து நாற்பது தனியார் ஊடக நிறுவனங்கள் புலனாய்வு செய்து விரிவாக்கின. இந்திய அமைப்பான செபி, அதானி குழுமம் செய்த முறைகேட்டை பெரிதாக லட்சியம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக செபி நிறுவனம், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹிண்டென்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், 106 பக்க புலனாய்வு அறிக்கையில் எந்த தகவல் பிழையும் உள்ளதாக கூறவில்லை. பதிலாக, கொடுத்துள்ள விவரங்கள் இன்னு...

தாய்நாட்டிற்கு வாழ்வதற்காக திரும்பும் கோகோ ஆராய்ச்சியாளன் எதிர்கொள்ளும் அனுபவங்கள்!

படம்
            வேர் தி ரோட் ரன்ஸ் அவுட் ஆங்கிலம் ஈக்வடோரியா கினியா நாட்டைச் சேர்ந்த நாயகன், ஆராய்ச்சியாளராக வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார். அங்கு கிடைக்கும் பணத்தை தனது தாய்நாட்டுக்கு ஆங்கில நண்பர் ஒருவர் மூலம் அனுப்பி வைக்கிறார். ஆதரவற்றோர் காப்பகம், ஆராய்ச்சி நிலையம் இரண்டுக்குமான பணத்தை சம்பாதித்து அனுப்புபவர், ஒருநாள் கானாவுக்கு வருகிறார். அங்கு வந்து பார்த்தால் ஆதரவற்றோர் காப்பகம் புதுப்பிக்கப்படாமல் பழையது போலவே இருக்கிறது. ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்படவில்லை. அவரது ஆங்கில நண்பர் பணத்தை சுருட்டிக்கொண்டு மோசடி செய்துவிட்டார் என உணர்ந்துகொள்கிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாழடைந்த வீட்டை சீர் செய்து, வசிக்கத் தொடங்குகிறார். நேரம் கிடைக்கும்போது காப்பக பள்ளியில் சென்று கோகோ பற்றிய பாடம் எடுக்கிறார். அப்பள்ளியில் ஆங்கிலேய பெண்ணான கரினாவைச் சந்தித்து நட்பு கொள்கிறார். அந்த உறவு மெல்ல காதலாக கனிகிறது. கரினா,ஜார்ஜ் என்ற நாயகி, நாயகன் சந்திக்கும் இடர்ப்பாடுகள், அதிலிருந்து மீளுதலே படத்தின் இறுதிப்பகுதி. ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமை, பிரச்னைகள், அம்...

தடய அறிவியல் விசாரணை செய்ய போதுமான பணியாளர்கள், கருவிகள் உள்ளனவா? - தென்னிந்தியாவில் ஓர் அலசல்

படம்
              தடய அறிவியல் பரிசோதனை இதைப்பற்றி அறிய நீங்கள் கொரியா, ஜப்பான், சீன சீரியல்களைப் பார்த்திருந்தால் கூட போதுமானது. மலையாள மொழியில் கூட நிறைய திரைப்படங்கள் தடய அறிவியலை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பார்க்கவில்லை என்றாலும் கூட குற்றமில்லை. கொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை அறிவியல் முறைப்படி சோதிப்பதே தடய அறிவியல் பரிசோதனை அல்லது விசாரணை என்று கூறலாம். ஓடிடி தளங்களில் ஏராளமான படங்கள் தடய அறிவியல் சார்ந்து வெளிவந்துள்ளன. அதைப் பார்த்தால் ஓரளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். பென்ஸ் அல்லது போர்ச் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்கள் மீது ஏற்றிக்கொல்கிறார். மக்கள் இறப்பது, அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். அது, ஒருவர் வசதியானவரா, ஏழையா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தடய அறிவியலில் பார்க்கவேண்டியது ஓட்டுநரின் நிலையை... வாகன விபத்து குற்றவழக்காக பதிவானபிறகு, வாகனம் ஒட்டியவர் என்ன நிலையில் இருந்தார், மது அருந்தியிருந்தாரா, இல்லையா என ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து சோதிப்பார்கள். கைரேகை, டிஎன்...

அமெரிக்க வருமானத்துறை போல நாடகமாடி மோசடி செய்யும் அக்கா, தம்பி! மோசகல்லு - தெலுங்கு

படம்
  மோசகல்லு - தெலுங்கு மோசகல்லு தெலுங்கு விஷ்ணு, காஜல் அகர்வால், நவ்தீப் அர்ஜூன், அனு என இருவரும் சேரியில் பிறந்து   வளர்ந்தவர்கள். அக்கா, தம்பி என இருவருக்குமே அதிகளவு பணம் சம்பாதிப்பதே நோக்கம். இதில் அனு, பெண்களுக்கான நகைகளை தானே வடிவமைத்து இணையத்தில் விற்று வருகிறாள். வன்முறையான கணவரை விவாகரத்து செய்யும் மனநிலையில் இருக்கிறாள். அவள் கணவன், அவள் சம்பாதிக்கும் பணத்தை வீடு தேடி வந்து அடித்து உதைத்து பறித்து செல்கிறான். அர்ஜூன், கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறான். அமெரிக்க நாட்டிற்கு பல்வேறு சேவைகளை வழங்குவதே   அவனது கம்பெனி நோக்கம். அதேநேரத்தில் அவன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி அதை டார்க் வெப்பில் விற்று பணம் சம்பாதித்து வருகிறான். இதை அவனது கம்பெனி முதலாளி கவனிக்கிறார். அவனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார். ஆனால் அதை அவரால் எப்படி என கூற முடியவில்லை. அர்ஜூன், ஐஆர்எஸ் என அமெரிக்க வருமானத்துறை பற்றிய ஐடியாவைக் கொடுக்கிறான். அதை வைத்து சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அமெரிக்க மக்களுக்கு போன் செய்து அவர்...

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றி...

பேராசை பூதம் 2 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  முதல் பகுதி பேராசை பூதம் 1 என வெளியாகிவிட்ட நிலையில், இந்த நூல் இரண்டாவது பகுதியாக வெளியாகவிருக்கிறது.  இந்த நூலில் பங்குசந்தை மோசடி, நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதியில் வரி ஏய்ப்பு, மக்களின் மின்கட்டணத்தை அரசு விதிகளைப் பயன்படுத்தியே நூதனமாக உயர்த்தியது, பத்திரிகையாளர்களை மிரட்டி அதட்டி வழக்கு போட்டு ஒடுக்குவது என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீ...