இடுகைகள்

குகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டின் தரைக்கு கீழே தோண்டப்பட்ட குகை - ஜெயமோகனின் குகை குறு நாவல்!

 குகை - ஜெயமோகன் குறுநாவல் இக்கதையில் வரும் மனநல குறைபாடு கொண்டவர், புதிதாக வாங்கிய வீடு ஒன்றின் கீழே குகை வழிப்பாதை செல்வதைக் கண்டறிகிறார். அந்த வழிப்பாதையின் மர்மத்தைக் கண்டுபிடித்து என்ன செய்தார் என்பதே குறுநாவலின் மையம். நாவலை நடத்திச்செல்ல பெரிய பாத்திரங்களின் தேவை இல்லை. இதில் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. அம்மா, மகன், மருமகள் என மூன்றே பாத்திரங்கள்தான். கதை உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து உருவானது. ஆனால், அதை சாகச கதையாக எழுத்து திறமையால் மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். கதையை சொல்பவராக வரும் மகன், மனநல குறைபாடு கொண்டவர். அவருக்கு திருமணமாகிவிட்டிருக்கிறது. ஆனால், மனைவியோடு பேச்சு முறிந்து ஆறுமாதகாலமாகிறது என்றொரு தகவல் கூறப்படுகிறது. இப்படியான மனநல குறைபாடு கொண்டவருக்கு எப்படி மணமாகியிருக்க கூடும். கதையை முழுதாக படித்தால், அவருக்கு சிறுவயது முதற்கொண்டு மனநல குறைபாடு உள்ளதை அறியலாம். மனநல குறைபாடு கொண்ட கணவன், வேலைக்கு செல்லும் நவநாகரிக மனைவி கதை என்பதை தனியாகவே எழுத முடியும். கதைக்கு அது பெரிய முக்கியத்துவம் தரும் விவகாரம் இல்லை. அப்படி பார்த்தால் மனைவி என்ற பாத்திரமே க...

அறிவியல் கேள்வி பதில்கள் - புவியியல்

படம்
  அன்டார்டிகாவில் உள்ள ஐஸ்கட்டியின் தடிமன் என்ன? தோராயமாக அதை கூறவேண்டுமெனில் , 6,600 அடி நீளத்திற்கு ஐஸ்கட்டி இருக்கலாம் என அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். சில இடங்களில் ஐஸ் மூன்று கி.மீ. அளவுக்கு தடிமனமாக உள்ளது. மேலும் உலகில் உள்ள தொண்ணூறு சதவீத ஐஸ்கட்டி, அன்டார்டிகாவில்தான் உள்ளது. அன்டார்டிகாவில் கால்பதித்த முதல் மனிதர் யார்? உலகின் பத்து சதவீத நிலப்பகுதி அன்டார்டிகா கண்டம் கூறலாம். ஐந்தாவது பெரிய கண்டம். யார் முதலில் கால்பதித்த மனிதர் என்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. 1773-1775 காலகட்டத்தில் கால்பதித்தவர் என பிரிட்டிஷை  சேர்ந்த கேப்டன் குக்கை கைகாட்டுகிறார்கள். இவருக்கு அடுத்து நாதேனியல் பால்மர், பால்மர் பெனிசுலா என்ற இடத்தைக் கண்டறிந்தார். அவருக்கு அப்போது அது ஒரு தனி கண்டம் என்பது தெரியாது. அந்த ஆண்டு 1820. அவருக்குப் பிறகு , அதே ஆண்டில், ஃபேபியன் காட்டிலெப் வோன் பெலிங்ஹாசன் என்பவர் அங்கு சென்றார். இவருக்கு அடுத்து 1823ஆம் ஆண்டு, ஜான் டேவிஸ் என்பவர், அன்டார்டிகாவிற்கு சென்று வெடல் சீ என்ற பகுதியை கண்டறிந்தார். 1840ஆம் ஆண்டு, அன்டார்டிகா சென்ற சார்லஸ் வில்கெஸ், அதை ஒ...

நிலநடுக்க பேரிடரில் தாயைக் காப்பாற்ற முயலாமல் மக்களைக் காப்பாற்றிய தந்தையை வெறுக்கும் மகள்!

படம்
  லைட் சேசர் ரெஸ்க்யூ சீனதொடர் யூட்யூப் 40 எபிசோடுகள் அறுவை சிகிச்சை மருத்துவர், அவரது தந்தை என இருவருக்குமான வெறுப்பு, பாசப்போராட்டம்தான் முக்கிய கதை. நாயகன் வக்கீல், நாயகி மருத்துவர். இருவருக்குமான மோதல், காதல் எல்லாம் பிறகு வருகிறது. லைட் சேசர் ரெஸ்க்யூ என்ற மீட்பு அமைப்பு தன்னார்வமாக இயங்கி வருகிறது. அதற்கான நிதியை கேப்டன் குயின்சன் வழங்கி வருகிறார். அவர்தான் அதில் தலைவர்,பயிற்சியாளர். தனது அமைப்புக்கு தன்னார்வமாக பயிற்சி பெற வருபவர்களுக்கு மாதச்சம்பளம் கொடுக்கமுடியாவிட்டாலும் முறையான பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றை வழங்குகிறார். கேப்டனின் மீட்பு படையில் உள்ள அனைவருமே பிழைப்புக்கு கூடுதல் வேலை ஒன்றை செய்து வருகிறார்கள். மீட்பு பணி என்பது உயிரைக் காப்பாற்றும் பெருமை என்பதால் அதிலுள்ளவர்கள் அனைவருமே அதை விரும்பி செய்கிறார்கள். நாயகன், பெருநிறுவனங்களுக்கான வக்கீல். நல்ல சம்பளம் தரும் சட்டசேவை நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு வாய் பேச முடியாத தங்கை ஒருத்தி இருக்கிறார். அவர் ஏன் வாய் பேசமுடியாமல் போனார் என்பதற்கு பின்கதை உள்ளது. அதை தொடர் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர...

விடுமுறையில் கேம்ப் அடித்து உற்சாகம் கொள்ளும் சீனர்கள்!

படம்
        விடுமுறையைக் கொண்டாட கேம்ப் அடிப்போம்! காட்டுக்குள், மலைப்பகுதிக்குள், பாலைவனத்திற்குள் வேலையாக செல்பவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு டெண்ட் கொட்டாய்களை அமைப்பார்கள். இதை அனைவரும் பார்த்திருப்போம். சில இடங்களில் கேம்ப்புகளில் தங்கியும் இருப்பீர்கள். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டால், மக்கள் உடனே மலைப்பகுதி, காடுகளின் அருகில் சென்று கேம்புகளை அமைத்து தங்கி ஓய்வெடுக்கிறார்கள். இதற்காகவே சீனாவில் கேம்புகளை அமைத்துக்கொடுக்க ஏராளமான தனியார் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிறுவனங்கள், டெண்ட்கொட்டாய் துணிகளை மட்டும் வழங்குவதில்லை. பிறந்தநாள் விருந்து, காதலைச் சொல்லப் போகும் தம்பதிகளுக்கான முன் ஏற்பாடுகள் என காலத்திற்கேற்ப மாறியிருக்கிறார்கள். கேம்பில் தங்குபவர்களுக்கான உணவுகளையும், அந்த இடத்திலேயே புதுமையாக அமைத்துக் கொடுத்து காசு வாங்கி கல்லா கட்டி வருகிறார்கள். கேம்புகளை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் போட்டியும் கூடி வருகிறது. குடும்பங்களாக சென்றால் குழந்தைகளை சமாளிக்கவேண்டுமே அவர்களுக்கென மண்பானை செய்வது, தோல் பொருட்களை செய்வது என பல...

மக்களின் நோய் தீர்க்க மருந்து தேடி ஆபத்தான கல்லறையைத் திறக்க செல்லும் பொக்கிஷக் குழுவின் கதை!

படம்
  moutain porter சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் இதுவும் கொடூரமான குணம் கொண்ட ராணியின் கல்லறையைத் திறக்கும் கதைதான். ஆனால் அதை திறக்கும் காரணம், பொக்கிஷமல்ல.  கிராமத்து மக்களை பாதிக்கும் நோயைத் தீர்க்க மருந்து தேடி கல்லறைக்கு வருகிறார்கள்.இவர்களைக் கொல்ல பின்தொடர்ந்து கொள்ளைக்கூட்டம் ஒன்று வருகிறது. இறுதியில் அனைவரும் இறந்துவிட நாயகனும் நாயகியும் மட்டும் பிழைக்கிறார்கள். இறுதியாக கூட மருந்து கிடைப்பதில்லை. அதைத்தேடி அலைவதோடு கதை முடிகிறது.  இந்த கதை தொடங்கும்போது, நாயகன் ஒரு கண்ணாடி ஒன்றைத் தேடி வருகிறான். அதை இன்னொரு இளம்பெண் திருடிக்கொண்டு செல்கிறாள். அவள் ஒரு அடிமை. கடவுள் திருவிழாவில் பலியிடுவதற்காக அவளை கட்டிவைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத்தான் நாயகன் காப்பாற்றுகிறான். ஆனால் அவள் உண்மையில் யார் என்பது இறுதியாக தெரியும்.  இந்த படத்தில் சுவாரசியம், அவரின் அப்பா, அவரின் நண்பர் ஆகியோர் ராணியின் குகைக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அதில், நாயகனின் அப்பா காணாமல் போகிறார். நண்பர் எப்படியோ காயங்களோடு தப்பித்துக்கொள்கிறார். இதனால், நாயகனுக்கும் அவனது அப்...

அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்! அல்டிமேட் நோட் சீன டிராமா 34 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் 1976ஆம் ஆண்டு குயின் மதர் என்ற தொன்மை கால ராணி வாழ்ந்த இடங்களை ஆராய்ச்சி செய்யப்போன ஆராய்ச்சியாளர்கள், காணாமல் போகிறார்கள். உயிருடன் வந்தவர்களில் மிகச்சிலரே  இருக்கிறார்கள். காணாமல் போன ஆராய்ச்சியாளர்கள் பற்றிய வீடியோ டேப்புகள் மூன்று நபர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதை துப்பாக கொண்டு பலரும் குயின் மதர் மாளிகையை அடையாளம் காண தேடிச்செல்கிறார்கள். இந்த பயணத்தில் மிஸ்டிக் நைன் எனும் பழைய புகழ்பெற்ற குழு உறுப்பினர்களின் புதிய தலைமுறை ஆட்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் என்ன உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதே கதை.  தேடல் பயணத்தில் பலருக்கும் பல நோக்கம் இருக்கிறது. பெரும்பாலான ஆட்கள் நல்ல காசு கிடைக்கும், பொக்கிஷம் கிடைக்கும் என நம்பி வருகிறார்கள். ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை அமரத்துவம் பற்றிய உண்மைகள் கிடைக்கும் என வருகிறார்கள். அப்படியான உண்மையைத்தான் அல்டிமேட் என்கிறார்கள். இதை அறிந்தவர்கள் யாரும் சுயநினைவுடன் இருப்பதில்லை. பிறரைக்...

தனது காணாமல் போன மாமாவைக் கண்டுபிடிக்க உயிரைப் பணயம் வைக்கும் புலனாய்வாளர் ரீயூனியன் - சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ்

படம்
  ரீயூனியன் – தி சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ் சீன டிவி தொடர் 2020 -july to  august 32 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் இயக்குநர் பான் அன் ஸி வூ குடும்பம் கலைப்பொருட்களை சீன தொல்பொருள் துறையுடன் அகழ்ந்து எடுத்து அதை வியாபாரம் செய்து வருகிறது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் வூசி இவன் தொல்பொருட்களை கண்டறிந்து புலனாய்வு செய்து மர்மத்தை கண்டறிபவன். இவன் எதிரிகளே இவனை சொல்லுவது போல கடவுளை நம்பாத நாத்திகன். கண்ணால் பார்ப்பது, அதிலிருந்து கற்றுக்கொள்வதை மட்டுமே நம்புவன். இவனது நண்பர்கள் குண்டு வாங், அதிரடி கைலன். இதில் வாங், பேசிக்கொண்டே இருப்பான். வூசி பேசுவது காரண காரியமாகத்தான். கைலன் பெரும்பாலும் பேசாத ஆள். தொடரில் அவனுக்கு வசனம் குறைவு. ஆனால் தன் இரு நண்பர்களுக்கு ஆபத்து வரும்போது யோசிக்கவே மாட்டான். எதிரிகளை மண்டை உடைத்து மாவிலக்கு ஏற்றிவிடும் தீரன். வூசியின் தாய்மாமாக்கள் மூவர். இதில் இரண்டாவது மாமா சொல்படி தான் வூசி கேட்டு நடக்கிறான். இவர்களுடையது பணக்கார குடும்பம். பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட்டதால் வூசியை இரண்டாவது, மூன்றாவது மாமா ஆகிய இருவரும்தான் பார்த்துக்கொள்கிறார்கள்...

குகைளை ஒளிர வைக்கும் புழுக்கள்!

படம்
புழுக்களால் ஒளிரும் குகை!  நியூசிலாந்தின் வடக்கு தீவுப்பகுதியில் வெயிட்டோமோ (Waitomo) என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் குகைகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இவைதான், உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.  வெயிட்டோமோ குகைகளின் சிறப்பு அம்சம், அதன் சுவர்களும் மேற்புறங்களும்தான். இவை குளோவார்ம் (Glowworms) எனும் ஒளிரும் புழுக்களால் நீலநிறத்தில் ஒளிர்கின்றன. இக்காட்சியைப்  பார்க்கவே உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குகைகளைப் பாதுகாக்க அதன் வெப்பநிலையும் அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவும் அரசால் சோதிக்கப்பட்டு வருகிறது. வெயிட்டோமோ குகையின் மேற்புர கூரையிலிருந்து வளரும் பாறைகளுக்கு விழுதுப்பாறை (Stalactites) என்று பெயர். கீழ்ப்புறத்திலிருந்து செங்குத்தாக வளருபவைக்கு புற்றுப்பாறை (Stalagmites) என்று பெயர். மழைநீர் மற்றும் பாறைகளிலுள்ள கனிமங்களின் சேர்க்கையால், வினோதமான பாறை அமைப்புகள் உருவாகின்றன.  ஒளிரும் புழுக்கள் முழு வளர்ச்சி பெற்றால், ஃபங்கஸ் நாட் (Fungus gnat) இன வகை பூச்சியாக ...

இந்திய குகைகளிலுள்ள ரகசியங்களை சொல்லும் ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  இந்திய குகைகளிலுள்ள ரகசியங்கள்! இந்தியாவில் உள்ள குகைகள் பல்வேறு ரகசியங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ளன.  ஆயிரக்கணக்கிலான நுண்ணுயிரிகள் வாழும் குகைகளில்,  குறைவான ஆராய்ச்சிகளே நடைபெற்றுள்ளன. தற்போது குகைகளையும், அதில் உள்ள உயிரினங்கள் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.  குகைளை ஆய்வு செய்யும் துறைக்கு, ஸ்பீலியோலஜி (Speleology) என்றுபெயர். இந்தியாவில் 9  ஆராய்ச்சியாளர்கள்  ஒன்றாக இணைந்து குகைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களை உயிரியல் ஆராய்ச்சியாளர் *************** வழிநடத்துகிறார். ********* தமிழ்நாட்டிலுள்ள ********பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில்  உயிரியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் அனைவரும் இணைந்துதான் குகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், ஸ்பீலியோலஜி சங்கத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளனர்.  மேகாலயா, அந்தமான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள குகைகள் ஆராய்ந்து வருகின்றனர். இக்குகைகளில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துமே காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின...

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண...

புவியியல் - துணுக்குகள்!

படம்
  ப்ரூசைட் 1824ஆம் ஆண்டு, அமெரிக்க கனிமவியலாளர் ஆர்ச்சிபால்ட் ப்ரூஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்ட கனிமம். புரூசைட் என்பது, மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை. வெள்ளை, பச்சை, பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களின் கலவையாக இருக்கும்.  காணவேண்டிய குகைகள் ஆர்டா குகை, ரஷ்யா கடல் நீருக்கடியில் உள்ள குகை. உலகில் கடல் நீருக்கடியில் அமைந்த நீளமான குகைகளில் இதுவும் ஒன்று. உலகளவில் ஆழ்கடல் நீச்சல்வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இதுவே.  ஹாங் சன் டூங், வியட்நாம் குகையில் மழைக்காடுகளில் உள்ள மரங்கள் வளர்ந்துள்ளன. உலகில் உருவான இயற்கையான பெரிய குகைகளில் இந்த குகை, முக்கியமானது. மரங்கள் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக உயரத்தில் வளர்ந்துள்ளன.  டாப்சின்ஸ்கா ஐஸ் கேவ், ஸ்லோவேகியா இந்த குகையில் உள்ள சுவர்கள் எல்லாமே ஐஸால் ஆனவை. 26 மீட்டர் உயரத்திற்கு ஐஸ் உருவாகியுள்ளது. வெளியிலுள்ள காற்று குகையின் வெப்பநிலை மைனஸ் 3.8 டிகிரி செல்சியசாக பாதுகாக்கிறது.  ஜெயன்ட் காஸ்வே (Gaint causeway) அயர்லாந்தின் வடக்குப்பகுதியில் ஜெயன்ட் காஸ்வே அமைந்துள்ளது. இங்கு கற்களால் அமைந்த தூண்கள் போன்ற வடிவில் பாறைகள...