இடுகைகள்

டைம் 100 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

time 100 - கென்ய மக்களை உயர்த்தும் லட்சிய மனிதன், மரங்களின் தகவல்தொடர்பு ரகசியம்!

படம்
              கென்னடி ஒடிடே kennedy odede தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் சிந்தனையால் சமூகத்தில் மாற்றங்களை சாத்தியப்படுத்த முடியும். மக்கள் கூட்டம் அதை நோக்கி ஈர்க்கப்பட்டு பின்தொடரும். அப்படியான ஒரு கதையே கென்னடியுடையது. கென்யாவின் கிபேராவில் அகதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர், கென்னடி. முறையான பள்ளிக்கல்வியும் அமையவில்லை. கென்யாவில் உள்ள சேரிகளில் ஒன்றான கிபேராவில் வளர்ந்த கென்னடி, அங்குள்ள மக்களின் தேவைகளை புரிந்துகொண்டார். இதற்குப் பிறகு அவர் செய்த செயல்பாடுகள் அவருக்கு மரியாதையை, பெருமையைத் தேடித் தந்தன. அவரைச் சுற்றி உள்ளவர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். வறுமை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பள்ளி, குடும்ப வன்முறையை எதிர்க்க, தடுக்க தற்காப்புபயிற்சி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகங்கள், மக்கள் நூலகம், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரமான குடிநீர் எந்திரம். மக்கள் கூட்டுறவு வங்கி என பலவற்றையும் அமைத்து இயங்கி வருகிறார். பொதுநல செயல்பாட்டில் இறங்கிய அவர் எதிர்கொள்ளாத சவால்களே இல்லை எனலாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கென்னடியின் லட்சியக் ...

டைம் 100 - மாற்றத்தை உருவாக்கிய மனிதர்களின் வரிசை

படம்
               நன்மையின் விசை - லெஸ்லி லோக்கோ lesley lokko கட்டுமானத்துறையில் சாதித்து வரும் நட்சத்திர அந்தஸ்தை உழைப்பால் அடைந்த ஆப்பிரிக்க பெண். ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கட்டுமானக்கலை படிப்பை படித்தவர். கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் கட்டுமானக்கலை சார்ந்த கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் நிர்வாகத்தில் முக்கியமான பொறுப்பு வகித்தவர் லோக்கோவும் கூடத்தான். அதில் தனது பங்களிப்பாக எதிர்காலத்திற்கான ஆய்வகம் என்ற பெயரில் படைப்பொன்றை வைத்திருந்தார். அந்த கண்காட்சியில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, அதே பாரம்பரியம் கொண்ட 89 கலைஞர்களை பங்கெடுக்க வைத்திருந்தார். லெஸ்லி லோக்கோ காதல், சாகசம் என்ற வகையில் டஜன் கணக்கிலான நூல்களை எழுதியுள்ள எழுத்தாளரும் கூடத்தான். கடந்த ஜனவரி மாதம், ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்சர் என்ற அமைப்பில் கட்டுமானக்கலை பணிக்காக தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அந்த அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு 1848. இதுவரை கருப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த விருதும் வழங்கப்பட்டதில்லை. முதல்முறையாக லெஸ்லி லோக்கோவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதை ...

டைம் 100 - அகதிகளுக்கு உணவகத்தில் வேலை கொடுத்து ஆதரிக்கும் மனிதநேய உணவக உரிமையாளர்

படம்
            அஸ்மா கான் உணவக உரிமையாளர், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் asma khan அஸ்மா கான், லண்டனில் டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான இந்திய உணவு வகைகள் சுவையாக கிடைக்கின்றன. அது விஷயமல்ல. அதை அவர் தனக்கு கிடைத்த பயிற்சி மூலம் கூட செய்யலாம். அந்த உணவுகளை தயாரிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அத்தனை பேருமே தெற்காசியாவில் இருந்து மேற்கு நாடுகளுக்கு பிழைக்க வந்த அகதிகள். அவர்களுக்கு முறையான உணவு தயாரிப்பு பயிற்சி கூட இல்லை. ஆனால், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தனது டார்ஜிலிங் உணவகத்தை தனித்தன்மை கொண்டதாக மாற்றி வருகிறார். டாப் செஃப் என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு சுவையான தனித்தன்மை  கொண்ட உணவு வகைகளை தயாரித்து வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது. பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார் அஸ்மா கான். தற்போது, டிஃபன் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்பட தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். இதில், அஸ்மா இந்திய உணவு வகைகளைப் பற்றி விளக்கி பேசுகிறார். அஸ்மா சிறந்த தொகுப்பாளர் மட்டு...

டைம் 100 - சிக்கில் செல் நோயைத் தீர்க்கும் சிகிச்சையைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்!

படம்
            ஸ்டூவர்ட் ஆர்கின் stuart orkin மரபணு தொடர்பான நோய்களை தீர்ப்பது, குணப்படுத்துவது, குறைந்தபட்சமான வலி, வேதனையை குறைப்பது கடினமான ஒன்று. உலகமெங்கும் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்கள் விடாமுயற்சியோடு செயல்பட்டு, சிகிச்சையை மேம்படுத்த, தீர்வுகளைக் கண்டறிய முயன்று வருகிறார்கள். அவர்களில் முக்கியமான ஆராய்ச்சியாளர், ஸ்டூவர்ட் ஆர்கின். இவர் சிக்கில் எனும் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஹீமோகுளோபின் மரபணுவில் உள்ள டிஎன்ஏவில் ஏற்படும் மாறுதலால் சிக்கில் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்த செல்களின் வடிவம் மாறி, உடலில் ரத்தவோட்டத்தில் தடை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான நிலை. ஆர்கின், கிரிஸ்பிஆர் நுட்பத்தை சிக்கில் நோயைத் தீர்க்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார். கிரிஸ்பிஆர் சிகிச்சையாளர்கள், வெர்டெக்ஸ் பார்மசூட்டிகல் நிறுவனம் ஆகியோர் இணைந்து ஆர்கினின் கண்டுபிடிப்பை சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெற்ற அனுமதி மூலம், சிக்கில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் கிரிஸ்பிஆர் ...

டைம் 100 - நீரிழிவு, உடல் பருமன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்

படம்
              ஸ்வெட்லானா மோஜ்சோவ், ஜோயல் ஹேபனர், டான் டிரக்கர் ஆராய்ச்சியாளர்கள் svetlana mojsov joel habener dan drucker நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான விஷயம் என்றால், அந்நோய் காரணமாக அதிகரிக்கும் உடல் எடை இன்னொரு பெரிய பிரச்னை. எனவே, உடல் எடையைக் கட்டுப்படுத்துவது பற்றி அமெரிக்கா, ஐரோப்பா என உலகமெல்லாம் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீரிழிவு நோய்க்கும் அதோடு தொடர்புடைய இன்சுலின், இன்கிரிடின்ஸ் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன் வழியாக குளுகாகோன்ஸ் என்ற ஹார்மோனுக்கும் உடல் எடைக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் குடல் அறுவை சிகிச்சையொன்று நடைபெற்றது. அதில், குளுகாகோன், இன்சுலின் அளவை அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர் ஜென்ஸ் ஜூல் ஹோஸ்ட் அடையாளம் கண்டார். இந்த நேரத்தில் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த டான் டிரக்கர், ஜோயல் ஹேபனர் ஆகியோர் ஜிஎல்பி -1 எனும் குளுகாகோன் வடிவத்தைக் கண்டறிந்தனர். டிரக்கர், ஜிஎல்பி-1 வடிவத்தை துல்லியமாக கண்டறிந்து இன்சுலினை அதிகரிப்பத...

Time 100 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சியாளர்!

படம்
           யோசுவா பென்ஜியோ செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் yoshua bengio யோசுவா, 2018ஆம் ஆண்டு டூரிங் விருதை தனது செயற்கை நுண்ணறிவு விருதுக்காக பெற்றார். இவருடன் ஹின்டன், யான் லெகன் ஆகியோரும் இந்த விருதை இணைந்து பெற்றனர். யோசுவா, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை பல்லாண்டுகளாக செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சியின் விளைவாக, ஆழ்கற்றல் நுட்பம் புகழ்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு வெகுஜனத்தன்மை கொண்டதாக மாறுவதில் யோசுவா முக்கிய பங்காற்றியுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை செய்துவிட்டு புகழ்பெற்றுவிட்டு விருதுகளைப் பெற்றுவிட்டு சென்றுவிடவில்லை. அதன் இன்னொரு பக்கம், பாதகமான விஷயங்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்து வருகிறார். இந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமைக்கப்பட்ட மாநாடுகளுக்குக் கூட பல்வேறு ஆலோசனைகளை அளித்து வருகிறார். வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என உலகின் பல்வேறு நாட்டு அரசுகளுக்கும் தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகிறார். டைம் 100 ஜியோஃப்ரீ ஹின்டன்

செயற்கை நுண்ணறிவில் சாதித்த தொழிலதிபர்கள் அறிமுகம்!

படம்
  ராபின் லீ, இயக்குநர், பைடு ராபின் லீ இயக்குநர், தலைவர், துணை நிறுவனர் – பைடு சீனாவின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை கணிக்கும் தொழில்நுட்பவாதி. கூகுளை பிரதியெடுத்து பைடு எனும் தேடுதல் எந்திரத்தை உருவாக்கியவர், இப்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு பாட்களில் அமேஸானின் அலெக்ஸா போல ஷியாவோடு என்ற பாட்டை உருவாக்கி பைடு விற்று வருகிறது. 2000ஆம் ஆண்டு தொடங்கி ஏஐ ஆராய்ச்சியில் ராபின் லீ இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, எர்னி பாட் என்பதை ராபின் லீ உருவாக்கினார். இந்த கருவி, சீன அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது மகிழ்ச்சியான விஷயம். ராபின் லீ அரசின் செயற்கை நுண்ணறிவு திட்ட அமைப்பில் கூட உறுப்பினராக இருக்கிறார். பைடுவிற்கு தற்போது மாதம்தோறும் 677 மில்லியன் பயனர்கள் உள்ளனர். 48 மில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் பைடு, தொடக்கத்தில் மைக்ரோசிப்களுக்கு அமெரிக்க நிறுவனமான என்விடியாவை சார்ந்தே இயங்கியது. ஆனால் அமெரிக்க அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக இப்போது உள்நாட்டில் தனக்கு தேவையான சிப்களை தானே தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறத...

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் அணிவரிசை

படம்
  டைம் 100 கண்டுபிடிப்பாளர்கள் வரிசை காட்டுதீயைக் கட்டுப்படுத்துவோம் கிறிஸ்டினா தாஹ்ல் 45 அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதை விட்டுவிடுகின்றனர். தீயை அணைக்கவேண்டும். தீ பற்றாமலிருக்க முயலவேண்டும் என ஊடகங்கள் நாசூக்காக கூறி, தம் விளம்பர வருமானத்தை காப்பாற்றிக்கொள்கின்றன. அரசியல்வாதிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு பெருநிறுவனங்களை நம்பியுள்ளதால் அவர்களின் செயல்பாட்டை குறைகூறுவதில்லை. ஆனால் முப்பத்தேழு சதவீத காட்டுத்தீ சம்பவங்களுக்கு கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களும், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும்தான் காரணம் என கிறிஸ்டினா தைரியமாக கூறுகிறார். தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, காலநிலை மாற்றத்தின் இயல்புகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதன்மூலம் நமது நடவடிக்கைகளை சற்று முன்னதாக திட்டமிட்டுக்கொள்ளலாம். மாசுபாட்டிற்கு கட்டுப்பாடு அனஸ்டாசியா வால்கோவா 32 காலநிலை மாற்றத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, உணவு உற்பத்தி தடுமாறுகிறது. ரீகுரோ ஏஜி என்ற நிறுவனம், வேளாண்மைத்துறையில் உள்ள பெருநிற...

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள் வரிசை

படம்
  மோரி சாக்கோ, சமையல் கலைஞர் கலாசாரத்தை சமைக்கும் கலைஞர் மோரி சாக்கோ 30 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு வெளியே பிறந்து வளர்ந்தவர். மங்கா காமிக்ஸ் மேல் அபரிமிதமான ஆர்வத்தோடு படித்தவர், ஜப்பான் நாட்டு கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டார். ஆப்பிரிக்காவில் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவருக்கு டிவி சேனல்கள்தான் உலகமாக இருந்தன. டாப் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் சாதித்தவர், மோசுகே என்ற உணவகத்தை பாரிசில் நடத்தி வருகிறார். மோரி சமைக்கும் உணவுகள் அனைத்துமே அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டவைதான். பிரான்ஸ், ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய கலாசாரத்தை பின்னணியாக கொண்டவை. தனது சமையலில் அவர் யார் என்பது இதுவரை விட்டுக்கொடுக்காதவர். ஓமர் சை   மீரா முராட்டி 34 செயற்கை நுண்ணறிவில் தேடல் மீரா முராட்டி, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட குழுக்களை உருவாக்கி அவர்களை நிர்வகிப்பது, செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்துவது என இயங்கி வருகிறார். ஓப்பன் ஏஐயின் வளர்ச்சியில் மீரா முராட்டிக்கு முக்கிய பங்குண்டு. எளிமை...

தடை செய்யப்பட்ட நூல்களை படிக்க உதவிய நூலகர்! - டைம் 100 போராளிகள்

படம்
  நிக் ஹிக்கின்ஸ் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் நிக் ஹிக்கின்ஸ்   45 புத்தக விற்பனையாளர் சங்கமே மாஃபியா குழு போல நடந்துகொண்டு சில நூல்களை விற்க கூடாது என மிரட்டும் சூழல் இருக்கிறது. சில இடங்களில் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கொண்ட நூல்களை விற்க கூடாது என காவல்துறை அதிகாரமீறல்களை செய்வது உண்டு. இந்த சூழலில் நூல்களை காப்பாற்றி வைத்து அதை வாசகர்களுக்கு கொண்டு செல்வது வேறு யார்? நூலகர்கள்தான். ப்ரூக்ளின் பொது நூலக தலைவரான நிக் ஹிக்கின்ஸ், பல்வேறு மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட நூல்களை சேகரித்து அதை டிஜிட்டலாக சேமித்து வாசகர்கள் படிப்பதற்கு உதவுகிறார். பொதுவாகவே உலகின் பல்வேறு நாடுகளில் பழமைவாதிகள், பழமைவாத அரசுகள் அமைந்து வருகின்றன. எனவே, ஏராளமான நூல்களை தடை செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக நிக் ஹிக்கின்ஸ் நிற்கிறார். நிக்கும் அவரது குழுவினரும் தடை செய்யப்பட்ட நூல்களை வாசகர்கள் படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தணிக்கை செய்வது, தடை செய்வது என்பது குழந்தைகள், வயது வந்தோர் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே ஆகும். இப்படி...

உலகை மேம்படுத்தும் முக்கியமான போராளிகள், செயல்பாட்டாளர்கள் - டைம் 100

படம்
  ஷாய் சுரூய் 26 பழங்குடி நிலங்களைக் காப்பவர் சுரூய் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். பால்டர் சுரூய் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்துள்ளார். தனது படிப்பை அடிப்படையாக வைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை அனுசரிக்காத தனது நாட்டு அரசு மீதே வழக்கு போட்டுள்ள தைரியசாலி. ரோண்டோனியாவில் இளைஞர்களுக்கான அமைப்பை நிறுவி சூழலைக் காக்க பாடுபட்டு வருகிறார். மேலும் முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காக இயங்கும் அமைப்பையும் ஆதரித்து வருகிறார். ஜிபிஎஸ், கேமரா ஆகியவற்றை இணைத்து தனது பழங்குடி நிலத்தை அரசிடமிருந்தும், பெருநிறுவனங்களிடமிருந்தும் காக்க முயன்று வருகிறார். “நாம் பூமித்தாயின் பிள்ளைகள். உலகம் அழிவதற்கு எதிராக பல்வேறு தீர்வுகளை கண்டுபிடித்து அதை கூறிவருகிறோம்” என்றார். அர்மானி சையத்   பூமெஸா நந்திதா நந்திதா வெங்கடேசன், 33 பூமெஸா சிலே, 33 நோயாளிகளுக்காக போராடும் போராளிகள் மேற்சொன்ன இருவருமே காசநோயில் விழுந்து எழுந்தவர்கள்தான். அதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவால் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதற்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்துகளில் உள்ள நச்சு...

டைம் 100 - எய்லீன் கு, வாலெரி மாசன், டெல்மோடே அண்ட் பான்மாவோ ஜாய், எமிலி ஆஸ்டர், துலியோ டி ஆலிவெய்ரா, சிக்குலில்லே மோயோ

படம்
  Eileen gu டைம் 100 வளர்ந்து வரும் ரோல்மாடல்  எய்லீன் கு ஒலிம்பிக்கில் எய்லின் கு மூன்று மெடல்களை வென்றுள்ளார். இன்று விளையாடும் விளையாட்டு வீரர்களில் அவரைப் போல ஒழுங்கு கொண்ட விளையாட்டு வீரரைப் பார்ப்பது மிகவும் கடினம். அந்தளவு தனது விளையாட்டு மீது ஆர்வமாக இருக்கிறார். ஒருமித்த கவனம், கடின உழைப்பு, அதற்கான அர்ப்பணி என அத்தனை திறமையான அம்சங்களையும் அவர் கொண்டிருக்கிறார்.  பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக அவர் என்னிடம் விளையாட்டு தொடர்பாக ஆலோசனை கேட்டு வந்தார். அவர் அப்போது தனது விளையாட்டில் புகழ்பெற்று வந்தார். அதுவே விளையாட்டில் அவருக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது.அவர் தான் பிறந்து வளர்ந்தபோது இருந்த பெண்களோடு தான் நட்புணர்வு கொண்டிருந்தார். பிறகு தான் அவர் புகழ்பெற்று ஏராளமான மாத, வார இதழ்களின் அட்டைப்படங்களில் இடம்பிடித்தார். பிறகு ஃபெண்டி, குசி ஆகிய நிறுவனங்களில் சில உலகளாவிய பிரசார திட்டங்களில் இடம்பெற்றார். அவர் தனக்குப் பிடித்த விளையாட்டில் சாதிக்க ஆசைப்பட்டார். அதேசமயம், தனது கல்லூரியையும், அதிலுள்ள நண்பர்களையும் விரும்பினார்.  நான் அவரிடம் பேசிய சில ம...

Time magazine 100 peoples- Amanda sefried, ariana debose, Nathan chen

படம்
  டைம் 100 - அரியானா டிபோஸ்  ஆச்சரியமூட்டும் கலைஞர்  அரியானாவை நான் க்வாட்ரூபல் த்ரெட் என்றுதான் கூறுவேன். அவர் வெறும் நடனக்கலைஞர் மட்டுமல்ல சிறந்த நடிகை, பாடகி என்பதோடு கருணையும் கொண்டவர். நான் அவரை முதன்முதலாக ஹாமில்டனில்தான் அவரது நடிப்பைப் பார்த்தேன். அதில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் மிக மெதுவாக நகர்ந்து வரவேண்டும். அதற்கு உடல் வலிமையும், நடிப்புத் திறனும் வேண்டு்ம். அதை அரியானா மிக அற்புதமாக சமாளித்திருந்தார். அவரை நான் மீண்டும் அதேபோலான பாத்திரத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறது. அண்மையில் நாங்கள் ஸமிகாடூன் என்ற டிவி நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அதில் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம். அரியானாவைப் பொறுத்தவரை சிறுபிள்ளைத்தனமாக, வேடிக்கையாக நடந்துகொண்டார். அவரது செயல்பாட்டைப் பார்த்தபோது பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதவர் என புரிந்துகொண்டேன். எந்த பயமுமில்லை. அவர் எனது பாத்திரத்தைப் புரிந்துகொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டார்.  வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற நடிகை. தன்னை வெளிப்படையாக பால் புதுமையின...