இடுகைகள்

பெரியார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திராவிட இயக்கம், கட்சி ஆகியவற்றின் போராட்டம் நிறைந்த நெடிய சமூகநீதிப் பயணம்!

படம்
      தெற்கிலிருந்து ஒரு சூரியன் இந்து தமிழ்திசை ஆசிரியர் குழு - அசோகன், கே.கே மகேஷ், சமஸ், ரங்காச்சாரி, ஏஎஸ் பன்னீர்செல்வம் இந்து தமிழ்திசை, சென்னை திராவிட இயக்கத்தின் செயல்பாடு, திமுக அரசியல் அதிகாரம் பெற்று செய்த சாதனைகள், அதன் பிரச்னைகள், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி என மூன்று தலைவர்களின் ஆளுமை, தமிழ்நாட்டின் தனித்துவம், திராவிட ஆட்சியில் நடைபெற்ற சமூகநீதி திட்டங்கள் என ஏராளமான தகவல்களைக் கொண்டதாக நூல் உருவாகியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படியான நூலை உருவாக்கியிருப்பது சமூகநீதிக்கு எதிராக இருந்த பார்ப்பன பத்திரிகைக் குழுமம் என்பதுதான். திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக நின்ற பத்திரிகைகளோ, பத்திரிகையாளர்களோ கூட இப்படியான நூலை தொகுக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எதிர்க்குழுவோ, ஆதரவான குழுவோ திராவிட இயக்கம் சார்ந்து கருணாநிதி அவர்களை புத்தக அட்டையாக போட்டு நூல் ஒன்று தயாராகிவிட்டது. நூல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். நூல் தொடக்கத்தில் நீதிக்கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்டுரைகள் வழியாக தம...

தாய்மொழி என்பது நமது போர்க்கருவி!

      பெரியார் ஆயிரம் பாட புத்தக கமிட்டியில் உள்ளவர்கள், தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரத கதைகளை சரித்திரத்தில் சேர்க்க சம்மதிப்பார்களா? நம் பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ் வகுப்பில் இருந்து தெரிந்துகொள்ள வழி செய்தால் ஒழிய எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும்போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக்கூடிய, முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றைக் கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. பள்ளியில் தமிழர் திராவிடர் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை. அங்கு அய்யர், பிராமணன் போன்ற வார்த்தைகள் மட்டுமே காணப்படுகின்றன. மேல்வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், அசோகன், முஸ்லீம், வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே  தவிர திராவிடர் தமிழர் ஆட்சியைப் பற்றி காண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவது காணப்பட்டாலும் அது பெரும் பித்தலாட்டமும், மோசடியுமாக இருக்கும். தமிழ் ம...

பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது!

படம்
      பெரியார் ஆயிரம் தர்மம் என்று இதிகாசங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பகவத் கீதையிலும் அதற்கு முன் பழக்கத்திலிருந்த வேதங்களிலும் கூறப்பட்டது வர்ண தர்மத்தையே ஆகும் மனிதர்களை பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரித்து பிராமணர்களுக்கு சலுகையும் சூத்திரர்களுக்கு அநீதியும் வழங்குவது மனுதர்மம். எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கு இருக்கவேண்டிய குணங்கள்- அவர்கள் செய்யும் பொதுநலப் பணியால் பிழைப்பவர்களாக இருக்கக்கூடாது. செய்யும் பொதுப்பணியில் பதவி பெருமை, இலாகா, தனி அந்தஸ்து போன்ற எந்த பலனும் பெற நினைக்கக்கூடாது. ஒரு பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது. எந்த காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தப்பா என்பதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு. நீதி கெட்டது யாரால் என்ற நூலில் பார்ப்பனர் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்கிற...

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் - சமூகநீதி நாள்

படம்
               சேரன்மாதேவியில் வ வே சு அய்யர் நடத்திய குருகுலம் மாணவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு சாதி பேதத்தை ஏற்படுத்தியது குருகுலத்தை ஒழிக்க பெரியார் கையாண்ட முறை என்ன? தமிழ் மக்கள் அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தச் செய்தார். காங்கிரசிலிருந்து பெரியார் விலக காரணம் வகுப்புவாரி உரிமைக் கொள்கையை ஏற்காமை வைக்கம் போராட்டம் என்பது கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க உரிமை வேண்டி நடத்தப்பட்ட போராட்டம் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் கண்ணம்மாள் - நாகம்மையார் எங்களது நோக்கம் பதவிக்கோ - பெருமைக்கோ ஆட்சி பீடத்தில் அமரவோ அல்ல. காங்கிரசாரே ஆளட்டும். அவர்களே சட்டசபைக்குப் போகட்டும். ஆனால், வடநாட்டானுக்கு அடிமைப்பட்டிருந்தால் நாங்கள் அவ்வாட்சியை எதிர்த்தே தீருவோம் - தந்தை பெரியார் எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று தனி மதம், தனி சாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது சாதி, தனது வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்? -குடி அரசு 8.11.193...

பிராமணாள் ஹோட்டல் பெயர்ப்பலகை! - பெரியார் ஆயிரம் நூலில் இருந்து....

படம்
            பெரியார் வாக்கு! இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்று கூறியதைக் கேட்ட ஒருவர், இந்து மதத்திற்கு மாற்றாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு பெரியார் சொன்னது என்ன? வீட்டிற்குள் அசிங்கம் இருக்கிறது. எடுத்து எறியுங்கள் என்றால் அதற்கு மாற்றாக அந்த இடத்தில் எதை வைக்கலாம் என்பது சரியா என்று கேட்டார். கடவுள் இல்லை என்று கூறுறீர்களே, கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டவருக்கு பெரியார் கூறியது என்ன? வந்துவிட்டால் கடவுள் உண்டு என்று ஒத்துக்கொள்வேன் என பதிலளித்தார். பிராமணாள் ஹோட்டல் பெயர்ப்பலகையை ஏன் அழிக்கவேண்டும் என பெரியார் நினைத்தார்? தெருவில் உள்ள ஒரு வீட்டில் இது பதிவிரதை வீடு என்று  எழுதினால் பக்கத்து வீடுகள் தேவடியாள் வீடுகள் என்பது போல பிராமணாள் என்று எழுதினால் மற்றவர்கள் சூத்திரர்கள் என்றுதானே அர்த்தம் என பொருள் சொன்னார். படிப்பறிவின்மையை முற்றிலும் நீக்க பெரியார் பரிந்துரைத்த யோசனை? ஆறு மாதத்திற்குள் கையெழுத்து கூடப் போட தெரியாதவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அளிக்க வேண்டும்.  மனுதர்மத்தில் சாதிக்கு ஒரு நீதி இருந்ததைக் ...

சாதி அரசியல் செய்து மக்களைப் பிரிப்பது பாமகவும், பாஜகவும்தான்! - தொல்.திருமாவளவன்

படம்
                தொல் . திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சாதி அரசியல் தமிழ்நாட்டை பிரித்துவிடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ? ஆம் . நாங்கள் சாதி அரசியலுக்கு எதிரானவர்கள்தான் . சாதி அரசியல் செய்யும் கட்சிகளான பாமக , பாஜக ஆகியவற்றை இதற்குள் உள்ளடங்கியவையாக குறிப்பிடுகிறோம் . இக்கட்சிகள் மிக ஆபத்தானவை . பாஜக கட்சி , பிற்படுத்தப்பட்டவர்கள் ., தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது . வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்கள் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் . இப்படி கோரிக்கையை வைத்து கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து தாங்கள் நினைத்த சீட்டுகளை பெற நினைக்கிறார்கள் . இந்த தந்திரமான நடவடிக்கை ஏறத்தாழ நடைமுறைக்கு ஏற்ற கோரிக்கையல்ல . இது மிரட்டல் அரசியலாக உள்ளது . அவர்கள் கோரிக்கைக்கு நாங்கள் எதிரியல்ல . ஆனால் அவர்கள் வன்னியர்களை முதன்மைப்படுத்துவதாக கூறுவது போலியானது . நீங்கள் ஈ...

பெரியார் சொன்னதை அன்றே மக்கள் ஏற்கவில்லை!

படம்
ஹரிஹரன் ராஜா சர்மா என்றால் பலருக்கும் புரியாது . ஹெச் . ராஜா என்றால் அனைவரும் புன்னகை பூப்பார்கள் . அந்தளவு பா . ஜ . கவின் புகழை தமிழகத்தில் பரப்ப பாடுபட்டு வருபவர் இவர் . பெரியாரை அவதூறு செய்வது , உயர்நீதிமன்றத்தை ஏக வசனத்தில் திட்டுவது என எப்போதும் சர்ச்சையின் மையத்தில் இருப்பது இவரது பாணி . அவரிடம் பேசினோம் . உள்ளாட்சித் தேர்தலில் பா . ஜ . க சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லையே . தமிழகத்தில் ஏன் உங்கள் கட்சி இன்னும் தடுமாறி வருகிறது ? இது கற்பனையான வாதம் . நாங்கள் சில இடங்களில் மட்டும்தான் போட்டியிட்டோம் . நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள வாக்குகளைப் பார்த்தாலே தெரியும் . நாங்கள் மெல்ல முன்னேறி வருகிறோம் . தமிழகத்தில் பா . ஜ . கவிற்கு எதிராக இருக்கும் மனநிலையைப் பற்றி .... அது உண்மை அல்ல . நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு மனநிலை இருப்பதாக தோற்றத்தை உருவாக்கினார்கள் . இது மாறிவிடும் தன்மை கொண்டதுதான் . பெரியார் இறந்து நாற்பது ஆண்டுகளுக்கும் பிறகு அவரைச்சுற்றி அரசியல் அமைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? ...

ரஜினியை பின்னாலிருந்து இயக்குகிறார்கள்! - கே.வீரமணி

படம்
சாதி பிரிவினைகளை ஆதரிக்க ராமாயணத்தை அடையாளம் காட்டுகிறார்கள்! பிரிவினையின் லாபம் அடையும் கட்சிகள் அதற்காக நவீன இந்திய சிற்பிகளை அவமானப்படுத்துவதும், அதற்காக பாடநூல்களை கூட மாற்றுவதும் நடந்து வருகிறது. இப்போது கூடுதலாக, பிரபலமாக உள்ள நபர்களை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் பிரிவினைப்படுத்த மதவாத கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதற்கான செயல்பாடுகளில் பெரியார் சிலைகள் உடைப்பு, அவரது கருத்துகள் திரிக்கப்படுவது என நடந்து வருகிறது. பிரபல நடிகரான ரஜினிகாந்த் துக்ளக் வார இதழில் பெரியார் பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருகிறார் என்று இதற்கு பதில் சொல்லுகிறார்   திராவிடர் கழக பொதுச்செயலாளரான கி.வீரமணி. மக்களிடையே பிரிவினை விதைக்கும் பிளவு செயல்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு ஜோதிடம் தெரியாது. இதுபோன்ற யூக கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. ரஜினி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று கூறியதற்காக பெரியாரிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நினைக்கிறீர்களா? இல்லை. அவசியம் கிடையாது. ரஜினி போன்ற நபர்கள் ...