மறுபிறப்பெடுத்து எதிர்தரப்பில் நின்று தனது அண்ணனை பழிவாங்கும் தம்பி!
ரெக்கிரஸ்டு ட்யூக் சன் ஏஸ் எ அசாசின் மங்காகோ.காம். நிறைவுறாத கதை மங்கா காமிக்ஸ் வெர்ட் என்ற குடும்பம் உள்ளது. அரசருக்கு ஆதரவாக எல்லையில் போரிடும் குடும்பம். அதில், மூத்தவன் அசெல், மனச்சிதைவு கொண்ட பொறுக்கி. அவனுக்காக அதே குடும்பதில் உள்ள சியான் என்ற சகோதரன் செய்யும் உதவிகளும், இறுதியாக அவன் அசெல் செய்த துரோகத்தால் வீழ்வதுமே முன்கதை. அதை மாற்றுவதற்கு சியான் மறுபிறப்பில் முயல்கிறான். சியான் ஒரு தீயசக்தியைப் பின்பற்றுபவன். அந்த இனக்குழுவின் வாளை பெறும் முன்னுரிமை பெறுகிறான். பெயர் தீயசக்தி இனக்குழு என்று கூறப்பட்டாலும், அவர்கள் முக்கியப்பணி, சமூகத்தில் தீங்கிழைப்பவர்களை கொன்று களைவதே. ஆனால் ஒளிசக்தி என்ற இனக்குழு உள்ளது. காட் ஆப் லைட் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்படுபவர்கள், பெருமை புகழுக்காக எந்த இழிவையும் செய்ய தயங்காதவர்கள். தங்களுக்கு நல்லபெயர் வர மோசமான செயல்களை இவர்களே செய்து, அதை இவர்களே தடுத்து மக்களிடையே நாயகனாவது. அதன் வழியாக அதிகாரத்தை, செல்வாக்கை, பணத்தை அடைவது லட்சியம். துரோகத்தால் வீழ்த்தப்பட்ட சியான், தனது இறப்பிற்கு பிறகு பத்தாண்டுகள் பின்னோக்கி போகிறான். அதா...