ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள்!
ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள் சீனா, சோசலிச கருத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகார நாடு. அதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா, இப்போதைக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் என்பது பெயரளவுக்கேனும் உள்ளது. சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னைகள் சுதந்திரமடைந்த காலம் தொட்டே உண்டு. இப்போது சீனா, திபெத்தை முழுக்க கையகப்படுத்தி, அங்கு அவர்களின் அரசியல் கருத்துக்கு ஏற்ற தலாய் லாமா ஒருவரை நியமித்து ஆட்சி செய்து வருகிறது. திபெத்திற்கு பார்வையாளர்கள் வரவோ, அங்குள்ளவர்கள் இந்தியாவில் உள்ள ஆன்மிக தலைவரான அசல் தலாய் லாமாவைப் பார்க்கவோ செல்ல முடியாது. அதற்கு சீன அரசு அனுமதி அளிப்பதில்லை. சீனாவில் சோசலிச அரசுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாது. டெக் நிறுவனங்கள் மூலம் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அரசை விமர்சிக்கும் பதிவுகள் உடனே காவல்துறையால் நீக்கப்பட்டு வருகின்றன. நடப்பு காலமான 2024ஆம் ஆண்டு, திபெத்தில் மக்கள் சீன குடியரசு உருவாகி எழுபத்தைந்து ஆண்டு ஆனதையொட்டி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. உண்மையி...