இதயத்தை மீண்டும் இயங்க வைக்கும் சிபிஆர் முறையைக் கண்டறிந்தவர் - மிஸ்டர் ரோனி
அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி திடீரென நின்றுபோன இதயத்தை துடிக்க வைக்கும் சிபிஆர் முறையை கண்டறிந்தது யார்? சிபிஆர் என்றால், கார்டியோபல்மொனரி ரீசஸ்டிகேஷன் என்பது விரிவாக்கம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநரான வில்லியம் டோசாக், வாய் வழியாக பிராணவாயுவை செலுத்தி ஒருவரைக் காப்பாற்ற முயலும் முறையைக் கண்டுபிடித்தார். அக்காலகட்டத்தில் இம்முறை, பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. பின்னாளில், எட்வர்ட் ஸ்காஃபர், மூச்சு விடுவதற்கு மார்பில் அழுத்தம் கொடுக்கும் முறையை உருவாக்கினார். 1910ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், எட்வர்டின் மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கும் முறையை செயல்படுத்த முன்வந்தது. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தெல்லோ ஆர் லாங்வொர்த்தி, ஆர் டி ஹூக்கர், வில்லியம் பி குவென்ஹோவன் ஆகியோர் இணைந்து மார்பில் அழுத்தம் கொடுக்கும் இதயத்தை இயங்கச் செய்யும் முறையை மேம்படுத்தினர். இதயத்தில் நின்றுபோன ரத்த ஓட்டத்தை மார்பில் அழுத்தம் கொடுப்பது, மீண்டும் தடையை நீக்கி சீராக ஓடவைக்...