உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது? உலகை புரிந்துகொள்ள குழந்தை தொடங்கும்போது கீழே விழுவது, எழுவது பற்றிய பதற்றம் குறைகிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் அதிக பயமின்றி தெருக்களில் ஓடித்திரியும். பெற்றோருக்கு அதைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். குழந்தைக்கு அப்படியான பயம் ஏதுமில்லை. உலகின் மீதான காதல் இப்படித்தான் தொடங்குகிறது. சூப்பர் மார்க்கெட்டில் மகிழ்ச்சியோடு கத்திக்கொண்டே ஓடுவது, தள்ளுவண்டியில் ஏற்றவேண்டும் என அடம்பிடித்து அலறுவது எல்லாம் உலகின் மீது கொண்ட காதலால்தான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உணர்வு ரீதியான முரண்பாடுகள் எந்த வயதில் தோன்றுகின்றன? குழந்தைக்கு இரண்டு வயதில் உணர்வு ரீதியான முரண்பாடுகள் தோன்றுகின்றன. இந்த வயதில், அவர்களுக்கு தங்களை பாதுகாக்கும் தாய் மீது குறையும், நிறைவும் என இரண்டு எண்ணங்களுமே தோன்றுகிறது. பாசமும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. அதேநேரம் எதிர்மறை உணர்வால் அம்மாவின் பாசத்தை இழந்துவிடக்கூடாதே என்ற எண்ணமும் ஓங்கும். கோபமும் ஒருங்கே உருவாகும். இந்த முரண்பாடான உணர்வுநிலை அவர்களது வாழ்க்கை முழுக்கவே தொ...