பங்கு முறைகேட்டை விசாரிக்க வேண்டிய செபியின் தலைவரே குற்றவாளியானால்... ஹிண்டென்பர்க் அறிக்கை 2024
ஐபிஇ பிளஸ் பண்ட் நிதி நிறுவனத்தின் முதலீட்டு அதிகாரியின் பெயர் அனில் அகுஜா. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகள் தலைவராக பணியாற்றியுள்ளார். பணி விலகிய ஆண்டு, 2017. அதானி பவர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். செபியின் தற்போதைய தலைவரான மாதபி புச், அவரின் கணவர் ஆகியோர், அதானியின் வெளிநாட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அதானி, முறைகேடான பங்கு வர்த்தகத்தை செபியின் விசாரணை, தண்டனை பற்றிய பயமின்றி எப்படி செய்கிறார் என ஹிண்டென்பர்க் நிறுவனம் யோசித்தது. அதானி குழுமத்தில், செபி தலைவரான மாதபி புச்சின் பங்கு முதலீடு பற்றி தெரிய வந்ததும் விவகாரத்தை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. பெர்முடா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள வினோத் அதானியின் போலி நிறுவனங்களில் செபியின் தலைவரான மாதபி புச், அவரின் கணவர் தாவல் புச் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் ஹிண்டென்பர்க் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் தேதி, சிங்கப்பூரில் ஐபிஇ பிளஸ் பண்டில் புச் தம்பதியினர் செய்த முதலீடு பற்றிய தகவல் தெரியவந்தது. பங்கு முதலீட்டிற்கான நிதி ...