இடுகைகள்

நொறுங்கும் குடியரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்!

படம்
        சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்! இந்தியாவில் வலதுசாரி மதவாத கட்சி ஆட்சிக்கு வந்தது தொடங்கி அடக்குமுறை சட்டங்களில் மனித உரிமை போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்யப்படுவதுஅதிகரித்தது. கைதானாலும் விசாரணை முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் சிறையில் தள்ளி சட்ட உரிமைகளைப் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை எழுதும்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரான மனிஷ் சிசோடியாவுக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருக்கிறார். அவரை அமலாக்கத்துறை, பல்வேறு போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்து வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளின் வெற்றியை, விமர்சனங்களை பொறுக்கமுடியாத மதவாத கட்சி, அரசு அமைப்புகளை பயன்படுத்தி தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது. இதற்கு ஏதுவாக புதிய குற்றவியல் சட்டங்கள் வடமொழியில் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவரின் அடிப்படை சட்ட, மனித உரிமைகளை பறிக்கும் அம்சங்கள் ஏராளமாக உள்ளன. இந்திய குற்றவியல் சட்டம் 1860 இன்படி, 32 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர...