இடுகைகள்

மனித உரிமை மீறல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம்

படம்
            சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம் சீனாவுக்கு, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. குறிப்பாக, ஷின்ஜியாங் என்ற பகுதியில் பெருமளவு உய்குர் இன முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தாலிபன், பிற இஸ்லாமிய பிரிவினைக் குழுக்களோடு தொடர்பு இருக்கிறது என சீன அரசு சந்தேகப்பட்டது. தீவிரவாதம், பிரிவினைவாதம், வன்முறை ஆகியவற்றை அழிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதைத் தொடங்கியது. இதில் ரஷ்யா, கசக்கஸ்தான், உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான் என பல நாடுகள் சேர்க்கப்பட்டன. தீவிரவாத எதிர்ப்பு முகமைக்கான தலைமை அலுவலகம் சீனாவில் அமைக்கப்பட்டது. பிராந்திய அலுவலகங்கள் உறுப்பினர் நாடுகளில் அமைந்தன. தொடக்க காலத்தில் இந்தியாவை இதில் இணைத்துக்கொள்ள சீனா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் ரஷ்யாவின் உறவைப் பெற்று மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பெருக்கிக்கொள்ள நினைத்தது. ரஷ்யா, சீனாவின் அமைப்பில் இந்தியாவை உள்ளே கொண்டு வர நினைத்தது. அன்று பாகிஸ்தான், இரான், மங்கோலியா இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவுடன் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டின. நவீன க...

சிறப்பு ஆயுதப்படை சட்டம் - நடைமுறைக்கு வந்த தகவல்கள் அறிவோம்

படம்
  சிறப்பு ஆயுதப்படை சட்டம் 1958ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் கால சிறப்பு சலுகைகள் கொண்ட ஆயுதப்படை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாகலாந்தில் ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை சமாளிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை உருவாகி மக்களவையில் அனுமதி பெற்றது. நான்கு மாதங்களில் அதனை அமல்படுத்தியது.  எப்படி அமல்படுத்துகிறார்கள்? மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், அதை சமாளிக்க சிறப்பு ஆயுதப்படை சட்டம் உதவுகிறது. இதற்காக அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? டிஸ்டர்ப்டு ஏரியாஸ் என்று. இந்திய அரசின் உள்துறை அமைச்சர்தான் ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துகிறார். சில சமயங்களில் இதுபற்றிய முடிவை மாநில அரசும் எடுக்கலாம்.  என்ன அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு கிடைக்கும்? மக்களில் யாராவது ஆயுதங்களை கையில் எடுத்தால், சட்டத்தை மீறினால் உடனே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட ராணுவத்தினருக்கு அனுமதி உண்டு. ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடியிருந்தால் அதை கலைக்க ராணுவத்தினருக்கு அதிகாரம் உண்டு. யாராவது மேல் சந்தேகம் இருந்...

ஒரு கி.மீ. தூரத்தில் ஆட்களை அடையாளம் காணும் அமெரிக்கா!

படம்
முகமறிதல் சோதனையில் முன்னேறும் அமெரிக்கா! அமெரிக்க ராணுவம் முகமறிதல் சோதனையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ராணுவத்துறை உருவாக்கிய சிறிய கருவி, ஒரு கி.மீ. தூரத்திற்கு முன்பாகவே ஒருவரை அடையாளம் கண்டுவிடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிறப்பு பணிகளைச் செய்யும் சோகாம் எனும் அமைப்பு இதற்கான பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு முகமறிதல் சோதனைக்கான மாதிரி கருவியை உருவாக்கி விட்டனர். மேலதிக தகவல்களை ராணுவ அமைச்சகம் வெளியிடவில்லை. குற்றச்செயல்பாடுகளில் தொடர்புடையவர்களை கண்டறிய இக்கருவி ட்ரோன்களின் பொருத்தப்படவிருக்கிறது. இவற்றை சட்ட ஒழுங்குத் துறைக்கு ராணுவ அமைச்சகம் வழங்கப்போகிறது. இதன்மூலம் குற்றம் செய்பவர்களை எளிதாக ட்ரோனை பறக்கவிட்டே பிடித்துவிடலாம். அமெரிக்காவிலுள்ள செக்யூர் பிளானட் எனும் அமைப்பு, எஸ்எல்ஆர் கேமரா பொருத்தப்பட்டு மக்களை கண்காணிக்க ஏற்பாடானது. ஆனால் இதில் கேமராவின் திறன் மற்றும் ட்ரோன் ஏற்படுத்திய இரைச்சல் தொல்லையாக இருந்தது. இதில் பல்வேறு மேம்பாடுகளை ராணுவ அமைச்சகம் உருவாக்கி வருகிறது. மேற்சொன்ன திறனில் ஒருவரை பாஸ்போர்ட் சைஸ்...