பிஸினஸ்! விட்டுக்கொடுக்காத போராளிதான் வெற்றியாளர் ! விட்டுக்கொடுக்காமல் போராடும் போராளி ஒவ்வொரு வெற்றியாளரிடம் இருக்கிறார் என்பதை அனுபவமொழியாக கூறும் மானவ்ஜீத்சிங் , இமாச்சலப்பிரதேச வாரிசு . ஜலந்தரிலுள்ள டிஏவி பள்ளியில் படித்தவருக்கு சிறுவயதிலேயே நிதிசார்ந்த விஷயங்களில் தீவிர ஈடுபாடு . 25 ஆண்டுகால வங்கி அனுபவத்தை ( யெஸ் , சிட்டி , எஸ்பிஐ , ரிலையன்ஸ் ) ரூபிக் என்ற நிதிநிறுவனம் மூலம் அறுவடை செய்து வருகிறார் . "2014 ஆம் ஆண்டு ரூபிக்கைத் தொடங்கும்போது நுகர்பொருள் , குறுந்தொழில் வாணிபம் , வர்த்தக வாகனங்களுக்கான கடன்கள் ஆகியவற்றில் இடைவெளியை எங்களுக்கான தொழில்வாய்ப்பாக அடையாளம் கண்டோம் " என்கிறார் மானவ்ஜீத்சிங் . ரூபிக்குக்கு முன்னோடியாக பெஸ்ட்டீல் ஃபினான்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தை சந்தீப் நம்பியார் என்ற நண்பருடன் இணைந்து தொடங்கினார் . வங்கியின் கடன் கொடுக்கும் முறையை அப்டேட் செய்த வடிவம் , ஆனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை . இப்போது புதிய மாடலான ரூபிக்கில் கிரடிட் கார்டு வாங்கி அணுகினால் இருபதிற்கும் மேற்பட்ட வங்கிகளின் கட்டணம் , வசதிகள் , தகுதி...