இடுகைகள்

பதப்படுத்துதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....

படம்
              காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க..... மிளகாயின் காரம், உடலில் வெப்பத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட மக்கள் அதை உணவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக காரம் கொண்ட சிவப்பு மிளகாய், சீனி மிளகாய் என எந்த ரகம் வந்தாலும் அதில் தூள் வாங்கி அல்லது நேரடியாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த காரசார மோகம்? அண்மையில், டென்மார்க் நாட்டின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கொரிய நாட்டின் மூன்று வகை நூடுல்ஸ் வகைகளை விஷத்தன்மை கொண்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம், அந்த மூன்று வகை நூடுல்ஸ்களுமே அதீத காரச்சுவையைக் கொண்டவை. குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் வகைகளை உண்ணக்கொடுப்பது ஆபத்து. இதில் காப்சைசின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே காரத்தன்மையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர்.  தெற்கு, மத்திய அமெரிக்காவிலிருந்து மிளகாய் செடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் மூலமே காப்சிகம் என்ற அறிவியல் பெயர் கொண்ட மிளகாய், சந்தையில் இருக்கிறது. நம் உணவிலும் காரச...

பதப்படுத்துதல் முறையைக் கண்டுபிடித்து 160 ஆண்டுகள்!

படம்
  லூயிஸ் பாஸ்டர் அமுல் தாஸா என்ற பால் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது. 200 மி.லி. பதினைந்து ரூபாய்தான். இதனை காய்ச்சாமலேயே கடையில் வாங்கியவுடனே குடிக்கலாம். மொத்தம் 180 நாட்கள் கெடாது என கம்பெனியினர் சொல்லுகிறார்கள். எப்படி இந்த செயல்பாடு சாத்தியமானது.?  பதப்படுத்துதல்தான். அதன் முன்னேற்றம்தான் இந்த சாதனைக்கு காரணம். பாலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லவே அதனை கொதிக்க வைக்கிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாலை கொதிக்க வேண்டுமென யாருக்கும் தெரியாது.  பாலை 60 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்தால் அதிலுள்ள நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையை கண்டுபிடித்தவர், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் பாஸ்டர். இவர், 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். ஈகோல் நார்மலே சுப்பீரியர் எனும் இடத்தில் படித்தார். படித்து முடித்து தொடக்க பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.  1856ஆம் ஆண்டு லூயிஸைப் பார்க்க, உள்ளூர் மனிதர் ஒருவர் வந்தார். அவர் தான் தயாரித்த பீட்ரூட் ஜூஸ்  கெட்டுப்போனதைப் பற்றி சொன்னார். அத...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் ! சைக்கிள் 1817-1880 பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே சைக்கிள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன . அப்படித்தான் இரண்டு , நான்கு சக்கர வண்டிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் பாதுகாப்பான இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டன . 1817 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் வான் டிரெய்ஸ் , மரத்தினால் ஆன சக்கரங்களை இணைத்த சைக்கிளை உருவாக்கினார் . இதில் சீட்டும் கூட இருந்தது . 1860 ஆம் ஆண்டு பெடல்களைக் கொண்ட சைக்கிள் உருவானது . இதனை வெலோசிபெட் என்று அழைத்தனர் . இதனை பிரான்சில் உருவாக்கினர் . வடிவமைப்பு ஓகே என்றாலும் சைக்கிள் டயர் கடினமாக இருந்ததால் இதில் பெடல் போடுவது எலும்புகளை உலுக்கும் அனுபவத்தை கொடுத்தது . எனவே இதனை போன்சேக்கர் என்று அழைத்தனர் . பிறகு 1880 இல் உருவாக்கப்பட்ட சைக்கிள் தான் பெடல் அமைப்பும் , செயின் அமைப்பும் இணைந்து சைக்கிளை செலுத்துவதற்கு சமநிலையைக் கொடுத்தது . 1865 பதப்படுத்...

மம்மியின் வகைகள்

படம்
    மம்மியின் வகைகள் கி.பி 5 ஆம் நூற்றாண்டு ம ம்மிகள் இவை. இவற்றை ஐஸ் ம ம்மிகள் என்று அழைக்கலாம். ஐஸ்பெட்டியில் வைத்து புதைக்கப்ட்ட ம ம்மிகள் இவை. மறு உலகில் பசிக்கும் என்பதால், ஆறு குதிரைகளையும் கூடவே புதைத்த கருணை உலகம் எதிர்பார்க்காத ஒன்று. புதைத்த உடல் பெண்மணியினுடையது. அதில் ஏராளமான டாட்டூக்கள் புராண கால விலங்குகளில் உருவத்தில் இருந்தன. கானரி தீவு மம்மிகள் இ்வை ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள். இவற்றின் காலம் 15ஆம் நூற்றாண்டு. இந்த ம ம்மிகளின் உடல் விலங்கு தோலினால் போர்த்தப்பட்டு மணலைப் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தனர். இன்கா மம்மிகள் பெரு மற்றும் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள் இவை. கடவுளுக்காக தங்களை தியாகம் செ்யத குழந்தைகளின் உடல்கள்தான் ம ம்மிகள். 500 ஆண்டுகள் பழமையானவை. சாசபோயா என்று அழைக்கப்பட்ட மம்மிகள், வடக்கு பெருநாட்டின் பகுதியில் கிடைத்தன. இவை காட்டின் வறண்ட பகுதியில் இருந்தன. காபுசின் காடகாம்ப்ஸ் 16ஆம் நூற்றாண்டுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மம்மிகள் இவை. உடலை எப்படி பதப்படுத்தவேண்டும் என்பதற்கு இவை சிறந்த உதாரணம். உடலிலுள்ள...