இடுகைகள்

ஊடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் ஊடகங்கள் என்றால் என்ன, அதன் விதிமுறைகளைப் பற்றிய கையேடு!

 டிஜிட்டல் ஜர்னலிசம் ஹேண்ட்புக் சேஜ் பதிப்பகம் இந்த நூலைப் பற்றி சற்று விரிவாக பேசவேண்டும். ஏற்கெனவே, இதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.அதை நினைவில் கொண்டிருக்கிறேன் நண்பர்களே. நூல் ஆய்வு நூல் என்பதால் 600 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. இந்த நூல் முழுக்க உலகம் முழுக்க பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன, எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன, பெரும் ஊடகங்கள் இயல்பான வணிகத்தை மாற்ற முயன்ற நிறுவனங்களை எப்படி நசுக்கின என்று விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.  டிஜிட்டல் ஊடகங்கள் என்றால், இணையத்தில் உள்ள செய்தி வெளியீட்டு வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம். இன்று வெறும் வலைத்தளங்கள் என்று இல்லாமல் தனியாக செய்திகளை வெளியிட்டு அதிலும் பெரும் சம்பாத்தியத்தைக் காட்டும் நிறுவனங்கள் உண்டு. வேடூநியூஸ், ஒன்இந்தியா ஆகிய தளங்கள் டிஜிட்டல் தளங்களை வெகுசனமயாக்கின. நல்லவிதமாக அல்ல.  எலன் மஸ்க் எப்படி நான் எக்ஸில் வெளியிடும் வீடியோக்கள் ஒருவரை அங்கேயே அதிகநேரம் தங்க வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா, அதேபோல்தான். எந்தளவு மட்டமாக தலைப்பை வைக்க முடியுமோ அந்தளவு வைப்பார்கள். வியாபா...

திரைப்பட திருட்டுக்கு எதிராக தனிநபராக போராடும் நாயகன்!

படம்
    நேடு விடுதலா ஆசிப்கான், மௌர்யானி தெலுங்கு திரைப்படங்களை சட்டவிரோதமாக வலைத்தளங்களில் வெளியிடுவதைப் பற்றிய படம். அவ்வளவே. கதை எளிமையானது. அதை சொன்ன விதத்தில் எந்த புதுமையும் இல்லை. அப்படியே நேர்கோட்டு வடிவம். சலிப்பு தட்டுகிற படம். படத்தில் நாயகன், கல்லூரி படிப்பை 99 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முடிக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையில், அப்பாவின் சிபாரிசின் பெயரில் ஹெச்எம் டிவியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு சினிமா நிகழ்ச்சிப்பிரிவில் வேலை செய்யக் கூறுகிறார்கள். அப்படி வேலை செய்யும்போது, நடக்கும் சம்பவம் ஒன்றால் பாதிக்கப்பட்டு அதை தீர்க்க முயல்கிறார். இறுதியில் என்னானது என்பதே கதை. தெலுங்கு திரைப்படங்களை திருட்டுத்தனமாக சிதைப்பவர்கள், அதன் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறது படம். ஆனால் அப்படி திரைப்படத்திருட்டை காட்டியவர்கள் அதை சுவாரசியமாக சொல்ல மறந்துவிட்டார்கள். இதனால் படம் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது. படத்தில் வேகமாக நடக்கும் விஷயம், நாயகி நாயகனை காதலிப்பதுதான். நடிகை மௌர்யானி அழகாக இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை...

தீவிரவாதிக்கு மதமில்லை, ஊழல் அரசியலுக்கு கட்சி பேதமில்லை

படம்
              ஊழல்களுக்கு கட்சி பேதமில்லை!  பல காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 2ஜி ஊழல் என்பது இதில் முக்கியமாக குறிப்பிடலாம். ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி, பெருமளவு விவாதங்களில் ஈடுபட்டுவருகிறது. இதில் ஈடுபட்ட சிலரைக்காப்பாற்ற பெரும் தலைவர்களின் அறிக்கைகள் போதுமானதல்ல. இதோடு நின்றுவிடப்போவதுமில்லை. சராசரி இந்தியர்களுக்கும் அரசியலில் அறமின்மை புகுந்தது கண்டு வெறுப்பு கொள்வதற்கான காரணமாக இவை அமைந்துவிட்டது. பல்வேறு ஊடகங்களின் சம்மட்டி அடி போன்ற ஊழல்களின் மீதான செய்திதொகுப்புகள், தெருவில் உள்ள கடைசி மனிதர் வரைக்குமான விழிப்புணர்வை தந்துவிட்டிருக்கிறது.  உண்மையில் ஊழல் செய்திகளை,  டி.வியில் பார்ப்பது பெரும் பொழுதுபோக்காக மாறிவருகிறது. சேனல்களுக்கான நிகழ்ச்சிக் கருக்களை அரசியல்வாதிகளே தந்துதவுகிறார்கள். டி.வி பார்க்கும் பார்வையாளர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்ட தலைவரை அப்பாவி என்று நம்புவதில்லை. அரசியல்வாதிகள் யார்தான் குற்றம் செய்யவில்லை என்று கூறப்படும் வழக்கமான செவ்வியல் வாக்க...

நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்!

படம்
              நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்! கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்திருப்பீர்கள். உடனே களமிறங்கிய கூலிப்படை ஊடகங்கள் அதை வைத்து கல்லா கட்டா தொடங்கிவிட்டன. மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக வல்லுறவு படுகொலையை தற்கொலையாக மாற்ற முயன்ற மாநில அரசும் கூட நீதி வேண்டி பேரணி நடத்தியது.  அதிகாரத்தில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, யாரிடம் நீதியை வேண்டுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து மாநில ஆட்சியை பிடிக்க மதவாத கட்சியின் சார்பு கொண்ட ஆளுநர், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். குடியரசுத் தலைவரை சந்திக்கவும் விரைந்தார். இதெல்லாம் படிக்கும்போது ஏதோ நம்மைச் சுற்றி அவல நகைச்சுவை நாடகம் நடப்பது போல தோன்றுகிறதா?  இந்து பார்ப்பன பாசிச தத்துவத்தில் புழங்கிய புதிய இந்தியா இப்படித்தான் இயங்குகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த அவரவர் தங்களால் முடிந்த பிரயத்தனத்தை செய்கிறா...

ஊடகச் செல்வாக்கில் இந்தியாவை முந்திச்செல்லும் சீனா!

படம்
              ஊடக செல்வாக்கில் கொடிகட்டிப் பறக்கும் சீனா! அற மதிப்பீடுகள், பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் குழுக்கள், ஆன்மிகம், மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது, நல்லிணக்கம், அறிவு, நேர்மை, விசுவாசம் ஆகிய அம்சங்கள் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பொதுவானவை. இவற்றின் அடிப்படையில்தான் இவ்விரு நாடுகளிலுள்ள அதிகாரம் தன்னை வலுப்படுத்திக்கொண்டு வாழ்கிறது. இந்தியாவில், உலகம் என்பது ஒன்று என்ற கொள்கையில் தனது வேர்களைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மக்களின் பொறுப்புணர்வு, கடமைகள் கூறப்படுகின்றன. சீனாவில் உலகம் என்பது ஒரே குடும்பம் (தியான்ஷியா யிஜியா) என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆர்வம், விருப்பம், மனிதகுலத்தின் பாதை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இதில், நமக்கு ஏற்படும் சவால்கள் பொதுவானவை, அதற்கு தீர்வுகளை கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. சீனா, கலாசார ரீதியாக மேம்பட்டது என பிரசாரம் செய்யப்படுகிறது. அதன் பாதை, அமைப்புமுறை, கோட்பாடு என்பதற்கு அடிப்படையாக சோசலிசம் இருக்கிறது, ஆனால், ஜனநாயகம் என்று வரும்போது, இக்கொள்கைகள் பொருந்துவதில்லை. அமெரிக்கா, ...

ஏஐ வரவால் மாறும் ஊடக செய்தியறை!

படம்
  நவீன ஏஐகளால் செயல்வேகம் கூடும் ஊடகங்களின் செய்தியறைகள் தமிழகத்தின் இதயத்துடிப்பு, நம்பர் 1 வார இதழ் என தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் வார இதழ்கள் எல்லாமே வலதுசாரி கட்சிகளால் வாங்கப்பட்டு, அஜண்டாவிற்கு ஏற்ப போலிச்செய்திகளை, மக்களை மடைமாற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. காசு கொடுக்கிறவனே கண்கண்ட தெய்வம் என மாறிவிட்டன. அதேசமயம் காலத்திற்கேற்ப எழுதும் செய்திகளை மேம்படுத்தி பல்வேறு வழிகளில் மக்களை அடைய முயற்சிக்கும் புதிய பாதைகளுக்கும் பஞ்சமில்லை.  அமெரிக்காவிலுள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற நாளிதழ், டிக் டாக் அல்காரிதம் பற்றி ஆராய்ச்சி செய்தது. அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பெரும்பாலும் டிக்டாக்கில் பயனர்களாக இருக்கிறார்கள். சிலர் அதில் வியாபாரம் செய்கிறார்கள். நடிக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அந்த ஆப்பில் இணைந்திருக்கிறார்கள். அதைவிட்டு விலகாமல் இருக்கிறார்கள். அப்படியென்ன சிறப்பம்சம் மனதை கட்டிப்போடும்படி இருக்கிறது என நாளிதழ் ஆசிரியர் குழு யோசித்தது. 2021ஆம் ஆண்டு, பதிமூன்று வயதான பயனர் ஒருவர் டிக்டாக்கில் கணக்கு தொடங்கினார். ஒன்லி பேன்ஸ் என்ற டிக்டாக்கின் கணக்கில் இ...

இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!

படம்
  இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!  அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், கூட்டாக சேர்ந்து பெரிய விஷயங்களை சாதிக்கலாம் என்று கூறுபவர்களை விட இந்தியாவில் பிரிவினைவாதிகள் கிராக்கி அதிகம். ரிசர்வ் வங்கி, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், காவல்துறை, உளவு அமைப்புகள் என அனைத்திலும் பாகுபாடு பார்க்கும் ஆட்களே அதிகமாக உள்ளனர்.  அதிலும் ஆர்எஸ்எஸ் தொண்டரான மோடியே பிரிவினைவாதிகளுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது ஆட்சியின் நிர்வாக செயலின்மை பற்றி பேசினால் உடனே ரூ.500 கோடி ராமர்கோவில், காசியில் செய்த வழிபாடு, உண்ணாநோன்பு இருந்து செய்த கோவில் தரிசனம், முந்தைய பிரதமர்கள் செய்த தவறு என பேசுவாரே ஒழிய பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து என்ன செய்தார். அவரது அமைச்சரவைக் குழு செய்த மக்களுக்கான நன்மை என எதையும் பேசமாட்டார். செய்த அனைத்துமே கலவரங்கள், படுகொலைகள், சிறுபான்மையினரின் சொத்துகளை அழித்ததுதான். பிறகு என்ன சொல்வது? முஸ்லீம்களை ஜென்ம எதிரியாக கருதும் பயங்கரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ். வெளியில் தன்னை கலாசார அமைப்பாக காட்டிக்கொண்டு கலவரம், பிரிவினை, மசூதிகளை இடிப்பது, சி...

தற்கொலை செய்துகொண்ட கொலைக்குற்றவாளித் தந்தையை நிரபராதி என நிரூபிக்கப் போராடும் மகன்! ஹீலர்

படம்
  ஹீலர் கொரிய டிவி தொடர் ராகுட்டன் விக்கி தொண்ணூறுகளில் அரசுக்கு எதிராக வேன் ஒன்றில் சென்றபடி செய்திகளை ஒலிபரப்பும் புரட்சி பத்திரிகையாளர்களாக இருந்த ஐவர்களில் மூவர் மட்டுமே உயிரோடு இருக்கின்றனர். இருவர் இறந்துவிடுகிறார்கள். அதிலும் ஒருவர், அவரது ஆருயிர் நண்பராலேயே கொலை செய்யப்பட்டார் என காவல்துறை குற்றம் சாட்டுகிறது. அந்த குற்றச்சாட்டு விலக்கப்படுவதற்கு முன்னரே, குற்றம் சாட்டப்பட்ட நண்பர் ஜியோன் சிக் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் என்ன நடந்தது என யாருக்கும் தெரிவதில்லை. நண்பரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒ ஜில் என்பவரின் மனைவி, அந்த நண்பர்கள் கூட்டத்தில் உள்ள கிம் மூன் சிக் என்பவரை மணந்துகொள்கிறார். அவளுக்கும் கொல்லப்பட்ட ஓ ஜில் என்பவருக்கும் பிறந்த பெண் குழந்தை, கிம் மூன் சிக் காரில் கூட்டிவரும்போது திடீரென   தொலைந்துபோகிறது. கிம் மூன் சிக், குப்பைக்கிடங்கு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார். ஆனால், அவரது ஆருயிர் நண்பர்கள் இறந்தபிறகு கொரியாவில் மகத்தான அரசியல் சக்தியாக, ஊடக தொழிலதிபராக மாறுகிறார். இது அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவர் மேல் சந்தேகத்...

நேர்மை, சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை எனும் மூன்று நம்பிக்கை கொள்கைகள்! - இதழியல் அறம்

படம்
  உலக நாடுகளிலுள்ள பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நிலப்பரப்பு, உள்ளூர் கலாசாரம் சார்ந்து சில அம்சங்கள் மாறுபடலாம். உலகளவில் புகழ்பெற்ற மதிக்கப்படும் ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ், பின்பற்றும் இதழியல் கொள்கைகளுக்கு ட்ரஸ்ட் பிரின்சிபல் என்று பெயர். இந்த நம்பிக்கை கொள்கைகளில் சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை, நேர்மை ஆகியவை அடங்கியுள்ளன. இந்த மூன்று கொள்கைகளையும் நிருபர் / செய்தியாளர், ஆசிரியர் ஆகியோர் அனைத்து செய்திகளிலும், கட்டுரைகளிலும் கடைபிடிப்பது அவசியம். இப்போது பத்து முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். 1.     செய்திகளில் எப்போதும் துல்லியம் இருக்கவேண்டும். 2.       நேரும் தவறுகளை வெளிப்படையாக ஏற்று சரி செய்யவேண்டும். 3.     பாகுபாடற்ற தன்மையை சமநிலையாக பராமரிக்க வேண்டும். 4.     ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி மேலாளர் / மூத்த ஆசிரியரிடம் கூறவேண்டும். 5.     ரகசியமான செய்திகளை எப்போதும் மதிக்க வேண்டும். 6.     செய்தி...

சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?

படம்
  ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக் காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர் / செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள், வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை வெளிப்படுத்துவது ...

என்கிரிப்சன் செய்யப்பட்ட கொலைத்தகவல்கள் - ஸோடியாக் கொலைகாரர்

படம்
  வாழ்க்கையே பா.வெங்கடேசன், கோணங்கி ஆகியோரின் நாவல்கள் போல இருக்கிறதென்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் ஜோடியாக் என்ற கொலைகாரர் தனது கொலைகளை அப்படித்தான் செய்து வந்தார். அமெரிக்காவில் குறிப்பாக பெண்களைக் கண்டால் மட்டும் குத்துக்கு பத்து என்பது போல கத்தியால் கூடுதலாக குத்திக் கொன்றார். அவரை காவல்துறை என்ன முயற்சி செய்தும் பிடிக்கமுடியவில்லை. இன்று ஜோடியாக் என அமேசானில், கூகுள்பிளே புக்ஸில் டைப் செய்து தேடினால் நிறைய நூல்கள் கிடைக்கும். ஜோடியாக் கொலைகாரர் புகழ்பெற்ற காலம் 1968 முதல் 1984 காலகட்டமாகும். ஜோடியாக் கொலைகாரர் தான் யார், செய்த கொலைகளைப் பற்றிய தகவல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் காரியங்களை செய்தார். ஆனால் கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் என்ன, அவர் கோடிங் பற்றி தெரிந்த ஆள். எனவே தனது கடிதங்களைக் கூட கோடிங்காக எழுதி அனுப்புவார். கூடவே பாழும் பத்திரிகளை இன்று வரை இரண்டுபிரதி நூல் அனுப்புங்கள். படித்து விமர்சனம், மதிப்புரை எழுதுகிறோம் என்பார்களே என்று ஸ்டாம்புகளையும் கூடவே அனுப்பி வைத்த நல்ல மனிதர்தான் ஜோடியாக். ஆனால் என்ன கோபம் வந்தால் மட்டும்...

சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  நேருவை மறக்கும் ஊடகங்கள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும் . இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது . மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும் . ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது . நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன் . வெ . சாமிநாதசர்மா எழுதிய நூல் . நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார் . இந்த ஆண்டு நேருவின் 132 ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது . இந்துத்துவ அரசு தாக்குதல் , மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர் . சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர் . இந்து ஆங்கிலம் நாளிதழ் , தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது . அதைப் படித்தேன் . நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை . நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை . இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்க...