இடுகைகள்

மல்யுத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூறு கிராம் முதுகெலும்பு!

படம்
        நூறு கிராம் முதுகெலும்பு! மல்யுத்த வீரருக்கு எதிராக பல கட்டுரைகள், விளக்கங்களை அம்பானி, அதானி வாங்கியுள்ள ஊடகங்கள், நாளிதழ்கள் முன்வைக்கின்றன. நாடாளுமன்றத்தில் மதவாத கட்சி எம்பிகள், இது விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர்களுக்கு ஒரு பாடம் என நக்கலாக பேசுகிறார்கள். மகளிர் ஆணையத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை, கடைசி சிரிப்பு எங்களுடையது என குறியீடாக பதிவொன்றை இடுகிறார். இந்திய ஆட்சித்தலைவர், மல்யுத்த வீரரின் வெற்றிக்கு பாராட்டவில்லை. தகுதிநீக்கத்திற்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக வந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர்,மல்யுத்த வீரருக்கு இதுவரை ஆன செலவுகளை எடுத்து படிக்கிறார். ஒரு நாடு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட வீழ்ச்சியை அடைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இவை.   என்ன எழுதினாலும் கேலி சித்திரக்கலைஞர் சந்தீப் அட்வார்யுவுக்கு நிகராக எதையும் சுருக்கமாக சொல்லிவிட முடியவில்லை. இதோ, மல்யுத்த வீரர் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். வலதுசாரி மதவாத சக்திகள் வென்றனர். இந்தியா தோற்றது.  

மல்யுத்தக்களத்தை குலைக்க நினைக்கும் தொன்மை விலங்கு! ஸ்கூபி டூ குழுவினரின் வேட்டை

படம்
                  ரெசில்மேனியா ஸ்கூபி டூ அனிமேஷன் ஹன்னா பார்பரா வார்னர் பிரதர்ஸ் டபிள்யூடபிள்யூஈ நிகழ்ச்சியில் திடீரென அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது . அங்கு ஏதோ விலங்கு ஒன்று வந்து வீர ர்களை அடித்துப்போடுகிறது . பல்வேறு அறைகளை அடித்து நொறுக்கிறது . அங்கு மல்யுத்தப்போட்டி தொடர்பாக நடத்தப்பட்ட டிவி டான்ஸில் ஸ்கூபிடூ போட்டியிட்டு வெல்கிறது . எனவே அவர்களுக்கு முழுப்போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் கிடைக்கிறது . சேகியும் ஸ்கூபிடூவும் தங்களது துப்பறியும் குழுவை சம்மதிக்க வைத்து போட்டி நடத்தும் இடத்திற்கு செல்கிறார்கள் . அங்கு இவர்கள் செல்வதற்கு முன்னரே வீரர் ஒருவர் படுகாயமுற்று இருக்கிறார் . தொன்மை விலங்கு உயிர்பெற்று வந்துவிட்டதா என வெல்மா தலைமையிலான துப்பறியும் குழு உண்மையைக் கண்டுபிடித்ததா , சாம்பியன் பெல்டை காப்பாற்ற முடிந்ததா என்பதையெல்லாம் மல்யுத்த களத்தில் பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள் .    இந்த தொடரில் ஸ்கூபிடூ மல்யுத்த வீரரின் யுக்தியைப் பயன்படுத்தி பெல்டை கடத்துகிறது . ஹிப்னாடிசம் மூலம்...