இடுகைகள்

குழந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழையாத விருந்தாளி! - ஒரு பக்க கதை

கேசவன், பிரமாண்டமான தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அறைக் கதவைத் தட்டியதும், கம் இன் என்ற கம்பீரக்குரல் கேட்டது. மருத்துவர் ஜீவா என பெயர் பலகை கூற, நெற்றியில் சுருக்கங்களோடு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார். ''நீங்க, கேசவன்தானே?, ஐம் ரைட். உங்களுக்கு கை கால்ல இருக்கிற விறைப்புத் தன்மை, வலி, வீக்கம் பத்தி டெஸ்ட் பண்ணோம். முடிவு, ஒரே நோயைத்தான் குறிக்குது'’ ''என்ன நோய்ங்க சார்?’’ ''சுருக்கமா ஆர்ஏ. முடக்குவாதம். துரதிர்ஷ்டவசமா இதைக் குணப்படுத்த முடியாது. ஆனா, நோயோட தீவிரத்தைக் குறைக்க மருந்து இருக்கு. இது, மரபணு ரீதியாக வர்ற நோய்’’. அதிர்ந்த கேசவன், தழுதழுத்த குரலில் ''இந்த நோய், என்னோட குழந்தைக்கும் வருமா?’’ ''வாய்ப்பு இருக்கு. குழந்தைக்கும் உங்கள மாதிரியே 30 வயசுக்கும் மேல வரலாம். ட்ரீட்மென்டை எப்ப தொடங்கலாம்னு சொல்லுங்க’’, என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு மருத்துவர்,மற்றொரு நோயாளியைப் பார்க்க விடைபெற்று சென்றார். மனைவி பூங்கொடிக்கு கருப்பை நீர்க்கட்டி காரணமாக கரு தங்கவில்லையே என்ற மனக்குறை மறைந்து நிம்மதியும் பரவ, தளர்வாக பை...

பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையின் அறிகுறிகள்

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பாலியல் ரீதியான வன்முறை என்றால் என்ன? சிறுவன், சிறுமியை ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதை பாலியல் வன்முறை, சுரண்டல் என்று கூறலாம். முறையாக திருமணம் செய்யும் அல்லது வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள். இவர்களை இளையோர் என்று கூறலாம். பாலியல் ரீதியான வன்முறையை சிறுவன், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் தொடங்கி அறிமுகமில்லாத வழிப்போக்கர்கள் வரை வாய்ப்பு கிடைத்தால் செய்கிறார்கள். பொதுவாக பலவீனமானவர்களைக்  கண்டால் அவர்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவது மனிதர்களுக்கு பிடித்தமானது. உடல் ரீதியாக, உள்ள ரீதியாகவும் ஒருவரை பாலியல் வன்முறை பாதிக்கிறது.  பாலியல் சுரண்டல் என்பது வன்முறையை அடிப்படையாக கொண்டதா? அப்படி இருக்க வேண்டியதில்லை. இன்றைக்கு ஆபாச வலைத்தளங்களில் பெண்ணை உறவு கொள்வதாக காட்டும்போது கூட அவளின் கழுத்தை நெரித்தபடியே உறவு கொள்கிறார்கள். அது படப்பிடிப்பு, நடிகர்களை வைத்து ஆபாச படம் எடுக்கப்படுகிறது ஆனால் உண்மையில் ஒருவர் இதை முயன்றால் என்னாகும்? சம்பவ இடத்திலேயே ஒருவர் மூச்சு திணறி இறந்துவிடுவார். பாலியல் ரீதியான சுரண்டல் பல்வேறு திசை ...

கவர்ச்சியும் ஈர்ப்பும் கொண்ட பெண் இணையை எப்படி விவரிப்பது?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆண், பெண் இருவருக்குமான காதல், பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள பாசம் என இரண்டும் வேறுபட்டதா? பெற்றோர், பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள காதலை விட முந்தையது. மனிதர்களை விட விலங்குகள், தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் அதிக தீவிரம் கொண்டவை. அதில் இடையூறை விரும்புவதில்லை. ஏற்பதில்லை. அந்தவகையில், இரு பாலினத்தவரின் காதலை, பெற்றோராக பிள்ளை மீது காட்டும் பாச உறவோடு ஒப்புமைபடுத்த முடியாது. இரண்டுமே செயல்பாடு, அணுகுமுறை இரண்டிலுமே வேறுபட்டது.  ஆண், பெண் என இருபாலினத்தவருக்கான காதல் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறதா? காதலிப்பவர்கள் , அந்த காதலை உறவைக் காத்துக்கொள்ள முயல்வார்கள். பிள்ளைகள் பிறப்பது, அவர்களை வளர்ப்பது, அன்பை வெளிக்காட்டுவது ஆகியவை நடைபெறுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு, பொருளாதார பலம் ஆகியவை கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளலாம். தாய், தந்தையினரின் அன்பு, நேசம் பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் மாற்றத்தை உருவாக்குகிறது.  காதலில் வீழ்வது என்பது ...

திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா? பெரும்பாலான திருமணங்களில் பாலுறவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. திருமணம் செய்வதே வம்ச விருத்திக்குத்தானே? திருப்திகரமான பாலுறவு தம்பதிகளுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. ஆண், பெண் என இருவரும் உடல், சிந்தனை அளவில் வேறுபட்டவர்கள். பாலுறவில் ஏற்படும் திருப்தி, குறைகளை களைய உதவுகிறது. அனைத்து தம்பதிகளும் பாலுறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்றால் கிடையாது. வயது முதிர்ச்சி அடையும்போது, ஒருவரின் பாலுறவு ஆர்வம், வேகம், திறன் குறையும். பாலுறவு நல்ல முறையில் அமைந்தால் திருமண தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து போக வாய்ப்புண்டு. சுகர் டாடிக்கள் காசு கொடுத்து கல்லூரி பெண்களை தடவி மகிழ்வது கூட பாலுறவின் இன்பத்தை கொஞ்சமேனும் தொட்டுப் பார்க்கலாமே என்றுதான்.  திருமண உறவில் பாலின பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன? ஆண் மேலாதிக்க சமுதாயத்தில், ஆண்தான் குடும்பத்தலைவர். பெண், அவனுக்கு உதவி செய்யும் துணைப்பாத்திரம்தான். தமிழ் திரைப்படங்களில் வரும் கலையரசன், வாகை சந்திரசேகர் போல குடும்பத்திற்காக ...

விவாகரத்திற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி குடும்பம் என்றால் என்ன? பிறப்பு, தத்து எடுப்பது, திருமணம் ஆகிய உறவுகள் காரணமாக நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் நபர்கள், அவர்களி்ன் உறவை குடும்பம் என்று அழைக்கலாம். சட்ட அங்கீகாரம் இல்லாமலும் மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களையும் குடும்பம் எனலாம். மாற்றுப்பாலினத்தவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.  அமெரிக்காவில் குடும்ப அமைப்பு எப்படி மாறிவருகிறது? இப்போதும் திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் அதிகரித்து வருகிறார்கள். இன்னொருபுறம், திருமணம் செய்யாமலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தனிமனித சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்க்கும் சமூகம், அமெரிக்காவுடையது. எனவே, இங்கு திருமணம் செய்வதும், அதேபோல இணக்கம் இல்லாதபோது விவாகரத்து பெறுவதும் இயல்பானது. கிழக்கு நாடுகளில் நிலைமை வேறுபட்டுள்ளது.  குடும்ப அமைப்பு குழந்தைகளை எப்படி பாதிக்கிறது? ஒற்றைப் பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள், பொதுவாக இருவர் வளர்க்கும் பிள்ளைகளை விட அதிகமாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். வறுமை, குறைந்த கல்வி, எளிதா...

மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது? குழந்தைகள் பெற்றோர் வீட்டில் பேசும் மொழியை பழகிக்கொள்கிறது. பிறகு தனது தேவையைக் கூறுகிறது. அதுவரை அந்த குழந்தை கொஞ்சுமொழியில் செய்வது எல்லாமே முயற்சிகள்தான். அதற்கான அர்த்தம் வேறாக உள்ளது என புரிந்துகொள்ளலாம். மொழி என்பது கருத்தை சொல்வதற்கான வாகனம். எனவே மொழி என்பது முக்கியமானதுதான். சொற்கள், வார்த்தைகள் மொழியில் முக்கியமானவைதான். குழந்தையாக இருக்கும்போது சொல்லும் சொல்ல நினைக்கும் சொற்கள், வார்த்தைகள் அந்தளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.  குழந்தைகள் மொழியை எப்படி பேசி பழகுகின்றன? பிறந்து முதல் இரண்டு மாதங்களில் குழந்தைகள் எழுப்ப முடிவது ஒலியை மட்டுமே. அந்த நிலப்பரப்பு சார்ந்த மொழியைக் கேட்டு அதை நகல் செய்து பேச முயல்வது, குறிப்பிட்ட சொல், வார்த்தையை பிரதிபலிக்க முயல்வது ஆகியவை நான்கு மாதங்களில் நடக்கிறது. முதல் ஆண்டின் இறுதியில் தாய்மொழியின் சிக்கலான சொற்களை, வார்த்தைகளை பேச முயல்கிறது. ஏறத்தாழ இந்த காலகட்டத்தில் பிறர் பேசும் பேச்சுகளிலுள்ள சொற்களை பிரதியெடுப்பது...

உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது?

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது? உலகை புரிந்துகொள்ள குழந்தை தொடங்கும்போது கீழே விழுவது, எழுவது பற்றிய பதற்றம் குறைகிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் அதிக பயமின்றி தெருக்களில் ஓடித்திரியும். பெற்றோருக்கு அதைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். குழந்தைக்கு அப்படியான பயம் ஏதுமில்லை. உலகின் மீதான காதல் இப்படித்தான் தொடங்குகிறது. சூப்பர் மார்க்கெட்டில் மகிழ்ச்சியோடு கத்திக்கொண்டே ஓடுவது, தள்ளுவண்டியில் ஏற்றவேண்டும் என அடம்பிடித்து அலறுவது எல்லாம் உலகின் மீது கொண்ட காதலால்தான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  உணர்வு ரீதியான முரண்பாடுகள் எந்த வயதில் தோன்றுகின்றன? குழந்தைக்கு இரண்டு வயதில் உணர்வு ரீதியான முரண்பாடுகள் தோன்றுகின்றன. இந்த வயதில், அவர்களுக்கு தங்களை பாதுகாக்கும் தாய் மீது குறையும், நிறைவும் என இரண்டு எண்ணங்களுமே தோன்றுகிறது. பாசமும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. அதேநேரம் எதிர்மறை உணர்வால் அம்மாவின் பாசத்தை இழந்துவிடக்கூடாதே என்ற எண்ணமும் ஓங்கும். கோபமும் ஒருங்கே உருவாகும். இந்த முரண்பாடான உணர்வுநிலை அவர்களது வாழ்க்கை முழுக்கவே தொ...

தோற்றுப்போன உளவுத்துறை ஆபரேஷனுக்கு காரணமான துரோகியை கண்டுபிடிக்க உதவும் குடியிருப்புவாசி அமைப்பு!

படம்
   மை சீக்ரெட் டெரியஸ் கே டிராமா 16 எபிசோடுகள் எம்பிசி டிவி தேசதுரோகி என்ற குற்றம்சாட்டப்பட்ட என்ஐஎஸ் ஏஜெண்ட், தோற்றுப்போன தனது ஆபரேஷன் பற்றி துப்பறிந்து துரோகியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை. தொடரின் நாயகன் டெரியஸ். அவனை உளவுத்துறை ஏஜென்ட் என பில்டப் செய்கிறார்கள். ஆனால், அவனை விட எதிரி பலசாலி. டெரியஸ் எத்தனை முறை தாக்கப்பட்டார், துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று கைவிரல்களை விரல் விட்டு எண்ணவேண்டும். அத்தனை முறை நாயகன் அடிபடுகிறார். பரிதாபம். தொடர் முழுக்க என்ஐஎஸ் அமைப்பை விட கிங் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்அப் குரூப் சிறப்பாக இயங்குகிறது. நாயகி இரண்டு குழந்தைகளின் தாய். அதேநேரம் அவளுக்கு டெரியஸ் மீதும், டெரியசுக்கு அவள் மீதும் காதல் வருகிறது. அதுபோன்ற காட்சிகள் நன்றாக உள்ளன. கணவர் இறந்தபிறகு இரு குழந்தைகளை வளர்க்க நாயகி ஆரின் படும்பாட்டை நன்றாக காட்டியிருக்கிறார்கள். சில நேரம் ஆரின் பாத்திரம் நடிப்பது மிகை நடிப்பாக மாறுகிறது. அனிமேஷன் பாத்திரத்தின் நடிப்பை பின்பற்றுகிறாரோ.... நாயகனைப் பொறுத்தவரை அதிக உணர்ச்சிகளை கொட்டி நடிப்பவரல்ல. டெரியஸ் பாத்திரமே சிந்...

ஓநாய்களை பிடிப்பதே இப்போதைக்கு தாக்குதலை தடுக்கும் ஒரே வழி!

படம்
      உத்தரப்பிரதேசத்தில் மக்களை ஓநாய்கள் தாக்கியுள்ளதன் காரணம் என்ன? ஓநாய்கள், குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஓநாய்களை அரசு நிர்வாகம் வேட்டையாடினால்,ஓநாய்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே அங்கு ஓநாய்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, இயற்கையாக கிடைக்கும் இரைகள் அழிவது, குட்டிகளுக்கு உணவிட முடியாத சிக்கல் ஆகியவை காரணமாக ஓநாய்கள் மாற்று வழிகளைத் தேடி மனிதர்களைத் தாக்குகின்றன. புல்வெளியில் தங்களை மறைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடி காத்திருக்கும் ஓநாய்கள், வீடுகளில் உள்ள குழந்தைகளை வேட்டையாடியுள்ளன. குழந்தைகள் விலங்குகளை குறைந்தளவிலேயே எதிர்த்து போராட முடியும் என்பதை ஓநாய்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளன. ஓநாய்கள் குறைந்துவரும் சூழலில் ஓநாய் - நாய் இணைந்த கலப்பினம் உருவாவது ஆரோக்கியமானதல்ல. இது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் அபாயத்தையே தரும். உபியில் இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெறுவது அவசியம். ஓநாய்களின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது பிரச்னையாக மாறியுள்...

ப்ரீடெர்ம் (preterm) குழந்தைகள் இறப்பு!

படம்
                 மருத்துவம் ப்ரீடெர்ம் என்றால் என்ன? தாயின் வயிற்றிலுள்ள குழந்தை 37 வாரங்களுக்கு முன்பாகவே பிறப்பதை ப்ரீடெர்ம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் குழந்தைகள் உயிரோடு இருந்தாலும், அவர்களை பாதுகாப்பது நெடிய போராட்டமாகவே இருக்கும். குழந்தை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக பிறப்பது ஆபத்தானது. அதில் சில பிரிவுகள் உள்ளன. அதீதம் இருபத்தெட்டு வாரங்களுக்கு குறைவாக பிறப்பது அபாயம் இருபத்தெட்டு வாரங்களில் பிறப்பது. மத்திமம் முப்பத்தி இரண்டு அல்லது முப்பத்து ஏழு வாரங்களில் பிறப்பது இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கணக்குப்படி 13.4 மில்லியன் குழந்தைகள் முழுமையாக பிரசவகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே பிறந்துள்ளன. அதாவது பத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. 2019ஆம் ஆண்டு மட்டும் ஒன்பது லட்சம் குழந்தைகள் முன்கூட்டியே பிறந்து பிறப்பு சிக்கல்களால் இறந்து போயுள்ளன. காரணம் என்ன? அடுத்தடுத்த கர்ப்பங்கள், குழந்தை திருமண கர்ப்பம், நோய்த்தொற்று, நீரிழிவு, ரத்த அழுத்தம், மரபணு பிரச்னைகள், மோசமான ஊட்டச்சத்து நிலை

பாகுபாடு இல்லாத பார்வையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்!

படம்
                  பெண்களுக்கு பணியில் சமத்துவம் வேண்டும் சென்னையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம், திருமணமான பெண்களை பணியில் சேர்ப்பதற்கு எதிரான விதிகளை உருவாக்கி வருவதாக செய்தி வெளியானது. இதுபற்றி அரசு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பல லட்சம் பெண்கள் உள்ள வேலைவாய்ப்பு சந்தையில், இப்படியான செய்திகள் முக்கியமானவை. அரசியலமைப்பு ரீதியாக பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கு உறுதி உள்ளது. ஆனால் நடைமுறையில் சட்டங்கள் பெரிதாக பயன்தருவதாக இல்லை. நிறைய இடங்களில் பெண்கள் பாகுபாடாக நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக தொழில்துறை சார்ந்த பணிகளில்...வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதில், பெண்களின் குடும்ப வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிப்பதை கூறியாக வேண்டும் 2021-2022 காலகட்டத்தில் 32.8 சதவீத பெண்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் பணியைத் தேடி வருகிறார்கள் என ஆய்வுத்தகவல் கூறுகிறது. பதினைந்து வயதுக்கு மேலுள்ள பெண்கள்  இதில் உள்ளடங்குவார்கள். உலகளவில்  47 சதவீதமாக உள்ளது. காலம்தோறும் பெண்களின் வேலைவாய்ப்பு சதவீதம் அதிகரித்து...

நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை!

படம்
  நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை! கில் இட்  கொரிய டிராமா 12 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி  ரஷ்யாவில் இருந்து கொரியா வரும் கூலிக்கொலைகாரன், ஆதரவற்ற குழந்தைகளின் உறுப்புகளை திருடி பணக்காரர்களுக்கு  வழங்கி வரும் குழுவை அறிந்து அதை அழிக்க முயல்வதே கதை. இப்படி செய்வதில் அவனுடைய கடந்த கால வரலாறும், பறிகொடுத்த அன்புக்குரிய உயிர்களும் உள்ளன.  நாயகன் கிம் சோ ஹியூனுக்கு அதிக வசனங்கள் இல்லை. அவனுக்கும் சேர்த்து அவனுடைய தோழி ஹியூன் ஜின் பேசிவிடுகிறாள். அவள் பேசாதபோது கிம்மின் துரோக நண்பன் பிலிப் அதை செய்கிறான். எனவே வசனம் இல்லையே என கவலைப்படவேண்டியதில்லை. பிலிப் தனது நண்பன் கிம்முக்கு செய்யும் துரோகம் சாதாரணமானதில்லை. கிம் காக்க நினைக்கும் அவனது தங்கை போன்ற சிறுமியை காசுக்காக கொல்ல காட்டிக்கொடுக்கிறான். ரஷ்யாவில் இருந்து கொரியாவுக்கு நாயகன் கிம் வருவதற்கு, அவனது வளர்ப்பு அப்பா வாங்கிக்கொண்ட சத்தியமும், அவர் துப்பாக்கிக் காயம் பட்டு இறந்துபோவதுமே முக்கிய காரணம். அதோடு, அவனது கடந்த கால வரலாறுக்கும் கொரியாவிற்கும் சம்பந்தம் உள...

வன்முறையை ஒத்திகை செய்து பார்த்து பின்தொடரும் குழந்தைகள்!

படம்
  albert bandura குழந்தைகளின் வன்முறை பற்றி பார்த்தோம். வன்முறையை ஒருவர் செய்வதைப் பார்த்து நாம் கற்கிறோமா அல்லது பொழுதுபோக்காக பார்க்கும் திரைப்படங்கள், விளையாடும் விளையாட்டுகளில் இருந்து கற்கிறோமா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. ஆல்பெர்ட் பாண்டுரா, குழந்தைகளின் மனதில் வன்முறை எப்படி படிகிறது என்பதை அறிய பொம்மை சோதனை ஒன்றை நடத்தினார். 36 சிறுவர்கள், 36 சிறுமிகள் என கூட்டி வந்து அவர்களை மூன்று பிரிவாக பிரித்தார். இதில், ஒரு குழுவுக்கு பெரியவர்கள் பொம்மையை அடித்து உதைத்து திட்டுவது ஆகியவற்றை செய்வதைப் பார்க்க வைத்தனர். அடுத்து, இன்னொரு பிரிவினருக்கு பொம்மையை மென்மையாக கையாள்வதைக் காட்டினர். இதில் வயதில் மூத்தவர்கள் பொம்மைகளை திட்டி, அடித்து உதைத்து சேதப்படுத்துவதைப் பார்த்த குழந்தைகள் அதை அவர்களும் நினைவில் வைத்துக்கொண்டு திரும்ப செய்தனர்.  டிவி சேனல்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகளில் முன் அறிவிப்போடு வன்முறையான அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை ஒருமுறை விளையாடுபவர்கள் அதிலுள்ள சுவாரசியத்திற்காக திரும்ப விளையாடுவார்கள். இப்படி வெற்றியடைந்த திரைப்படங்கள், விளையாட்டுகள்,...

மொழி என்பது மனிதர்களுக்கே உரிய சிறப்பு அம்சம் - நோம் சாம்ஸ்கி

படம்
  நோம்ஸ் சாம்ஸ்கி மொழியியலாளர், தத்துவவாதி, அறிவுத்திறன் சார்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் யூதப்பெற்றோருக்குப் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்  தத்துவம், மொழியியல் என இரண்டு பாடங்களை படித்தார். முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார். 1955ஆம் ஆண்டு, எம்ஐடியில் சேர்ந்தவர் 1976இல் அங்கு பேராசிரியரானார்.  நவீன மொழியியல் சிந்தனை மக்களுக்கு பரப்பியதில் முக்கிய பங்காற்றிய ஆளுமை. அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசுவது, அரசதிகாரத்தை தீவிரமாக எதிர்ப்பது என நோம் சாம்ஸ்கி எதையும் விட்டுவைக்கவில்லை. அதனாலேயே இவரது பெயரைக் கூறினாலே சர்ச்சையும் கூடவே வந்துவிடும். அறிவியல் பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மொழியியல் அறிஞர் கரோல் ஸ்காட்ஸ் என்பவரை மணந்தார். இவரது மனைவி 2008ஆம் ஆண்டு மரணித்தார்.  முக்கிய படைப்புகள்  1957 சின்டாக்டிக் ஸ்ட்ரக்சர்ஸ்  1965 கார்டீசியன் லிங்குயிஸ்டிக்ஸ் 1968 லாங்குவேஜ் அண்ட் மைண்ட் நோம் சாம்ஸ்கி, மொழி என்பது மனிதர்களுக்கான சிறப்பான அம்சம் என்று கருத்து கூறினார். இதி...

குழந்தைகளின் மனதில் வளரும் வன்முறை - ஏன் எப்படி எதற்கு?

படம்
  ஆல்பெர்ட் பண்டுரா ஆல்பெர்ட், குழந்தைகளின் மனதில், செயலில் வெளிப்படும் வன்முறையை ஆராய்ந்தார். அன்றைய காலத்தில் பலரும் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அதைப்போலவே தாங்களும் செய்ய முயற்சி செய்கிறார்கள் என ஆல்பெர்ட் கூறினார். இந்தவகையில் அவர்களின் வன்முறை செயல்பாடுகள் போலச்செய்தல் என்ற முறையில் மனதில் பதிகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை செயல்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்பாடு என்பது பிறரைப் பார்த்து மாதிரியாக கொண்டே உருவாகிறது என்றார்.  ஆல்பெர்ட்டின் காலத்தில் குழந்தைகள் பரிசு கொடுப்பது, தண்டனை அளிப்பது வழியாக பல்வேறு விஷயங்களைக் கற்கிறார்கள் என்று நம்பப்பட்டது. ஆல்பெர்ட் இதற்கு மாற்றாக, ஒருவரைப் பார்த்துத்தான் பிறர் குண இயல்புகளை பழக்க வழக்கங்களைக் கற்கிறார்கள். இதற்கு கவனம், ஒத்திகை பார்ப்பது, ஊக்கம், திரும்ப உருவாக்குவது ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கூறினார். ஒரு செயலைப் பார்த்து அதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும். பிறகு, ஊக்கம் கிடைக்கும்போது அதை திரும்ப செய்துபார்க்க முடியும்....

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப...

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் ப...

தாயில்லாத சூழலில் குழந்தைக்கு ஏற்படும் மன நெருக்கடி

படம்
  Mary ainsworth 1950ஆம் ஆண்டு, மேரி, உளவியலாளர் ஜான் பௌல்பையின் ஆய்வுக் கோட்பாட்டை ஒட்டிய ஆய்வுகளை செய்தார். மேற்குலகில் பெற்றோர் பிள்ளைகளோடு குறைந்தளவு ஒட்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு நாடுகளில் தாய், குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது என புரிந்துகொள்ளலாம். குழந்தையின் உடல்மொழியை புரிந்துகொண்டு அதற்கு உணவு வழங்குவது, குளிக்க வைப்பது,உடை மாற்றுவது, உறங்க வைப்பது என அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் தாயுடன் பாதுகாப்பான ஒட்டுதலைக் கொண்டுள்ளன.  வினோத சூழ்நிலை என்ற ஆய்வை மேரி செய்தார். அதன்படி, ஒரு அறையில், அம்மா குழந்தை என இருவர் இருக்கிறார்கள். குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை அம்மா கவனித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இப்போது அந்த அறையில் வெளிநபர் ஒருவர் உள்ளே வருகிறார். இந்த சூழ்நிலையில் குழ்ந்தை எப்படி உணர்கிறது, அதன் உடல்மொழி எவ்வாறு மாறுகிறது என்பதை மேரி ஆய்வு செய்தார்.  அடுத்து, ஒரு அறையில் குழந்தையோடு அம்மா இருக்கிறார். க...

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்ப...