இடுகைகள்

நெருக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்றாகச் சேர்ந்து காதலிக்க என்ன தேவை?

 ஒன்றாக சேர்ந்து... உறவுகளைப் பொறுத்தவரை எதுவுமே உறுதி கிடையாது. உறவே எளிதாக உடையக்கூடியது என ஜே கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இருவர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் சில தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அப்படி இருக்கலாம். மனப்பூர்வமாக ஒன்றாக இணைந்து இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. உடல் அளவில் ஒன்றாக இருந்தாலும் மனம் என்ற அளவில் பல கி.மீ. தொலைவில் உள்ள மனிதர்கள் ஏராளமானோர் உண்டு. ஒரே வீட்டில் வசித்தாலும் வேறு வேறு உலகில் இருப்பார்கள்.  டேட்டிங் விஷயத்தைப் பொறுத்தவரை ஆணும், பெண்ணும் மனம் என்ற அளவில் நெருங்கி வருவதையே முக்கியமாக கருதலாம். அப்படியான நெருக்கம், விருப்பங்களின் ஒற்றுமை அளவில் நட்பு உருவாகி பின்பு காதலாக மாறி திருமணமாக அடுத்த நிலைக்கு செல்லலாம். உங்களுடைய உறவில் நட்புத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் பின்னாளிலே அதில் சிக்கல் வந்தாலும் தீர்த்துக்கொள்ள முடியும். உடல், மனம் சார்ந்த ஊக்கம் பரவசம் என்பது மாறக்கூடியது. எப்படி பருவகாலங்கள் மாறும்போது அதையொட்டி நமது உணவு மாறுகிறதோ அதைப்போலவேதான். காதலில் ஏற்படும் காயங்கள் ஆறுவது கடினம். ஆனால், நட்பில் அப்படி பெரிய...

திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா? பெரும்பாலான திருமணங்களில் பாலுறவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. திருமணம் செய்வதே வம்ச விருத்திக்குத்தானே? திருப்திகரமான பாலுறவு தம்பதிகளுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. ஆண், பெண் என இருவரும் உடல், சிந்தனை அளவில் வேறுபட்டவர்கள். பாலுறவில் ஏற்படும் திருப்தி, குறைகளை களைய உதவுகிறது. அனைத்து தம்பதிகளும் பாலுறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்றால் கிடையாது. வயது முதிர்ச்சி அடையும்போது, ஒருவரின் பாலுறவு ஆர்வம், வேகம், திறன் குறையும். பாலுறவு நல்ல முறையில் அமைந்தால் திருமண தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து போக வாய்ப்புண்டு. சுகர் டாடிக்கள் காசு கொடுத்து கல்லூரி பெண்களை தடவி மகிழ்வது கூட பாலுறவின் இன்பத்தை கொஞ்சமேனும் தொட்டுப் பார்க்கலாமே என்றுதான்.  திருமண உறவில் பாலின பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன? ஆண் மேலாதிக்க சமுதாயத்தில், ஆண்தான் குடும்பத்தலைவர். பெண், அவனுக்கு உதவி செய்யும் துணைப்பாத்திரம்தான். தமிழ் திரைப்படங்களில் வரும் கலையரசன், வாகை சந்திரசேகர் போல குடும்பத்திற்காக ...

இணையத்தில் வழியே பெருக்கெடுக்கும் காதலும், நெருக்கமும் - மெட்டாவர்ஸ் நாகரிகம்

படம்
1 இன்று இணையம் நமது உடலின் இன்றியமையாத பாகம் போல ஆகிவிட்டது. இணையம் இல்லாத ஸ்மார்ட்போன், கணினி என்பது உயிரில்லாத உடல்போல. இணையம் அனைத்தையும் தந்தாலும் உறவைத் தருமா, ஒருவர் தொடுவது போன்ற சுகத்தை தருமா என்றால் கொஞ்சம்  போலியாக இருந்தாலும் அதையும் தரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவற்றைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.  தட் சாஸி திங் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளது. இதன் நிறுவனர், சாச்சி மல்ஹோத்ரா. இது டிஜிட்டல் வடிவிலான செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்ட். இதனை தொடங்கியவர், தனது காதலருடனான காதலை பகிர்ந்துகொள்வதும் இணையம் வழியாகத்தான். சில சமயங்களில் நாம் மனதிலுள்ள  ஆசைகளை பகிர்ந்துகொள்வது கடினமானது. அதற்கு செக்ஸ்டிங் வழிமுறை உதவுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் டிஜிட்டல் வழியாக நாம் விரும்புபவருடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது என்றார் சாச்சி.  தனாயா நரேந்திரா, செக்ஸ் கல்வியாளர் பேஸ்புக், ட்விட்டர், இன்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் என அனைத்துமே மக்களுடன் தொடர்புகொள்ளும் சாதனங்கள்தான். முன்பை விட டிஜிட்டல் வழியாக ப...