இடுகைகள்

இயற்கை பேரிடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு!

படம்
    வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு! மதவாத நாடான இந்தியாவில் எப்போது  வேண்டுமானாலும் கலவரங்கள், கும்பல் வல்லுறவு, இந்து குண்டர்கள் கொள்ளை என எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இதுபோல பருவ காலங்களில் நடைபெறும் இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகிறது. அப்படியான சூழலில் ஒருவர் தன்னை எப்படி காத்துக்கொள்வது என்று பார்ப்போம். உணவு, மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள், போகும் இடம், வழிப்பாதை ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியம். கோவிட் வந்தபிறகு நிறையப்பேர் தனியாக இஎம்ஐ கட்டியேனும் வண்டி வாங்கிவிட்டார்கள். நமது மக்கள், நாம் செத்தாலும் கூடவே நான்கு பேரை இழுத்துச்செல்லவேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவர்கள். தும்மும்போதும் இருமும்போதும் கூட கைக்குட்டை பயன்படுத்த மறுப்பவர்கள். எனவே, உயிர்பிழைக்கவேண்டிய நேரத்தில் நீங்கள் பிறரது வாகனங்களை எதிர்பார்க்க கூடாது. எந்தளவு வேகமாக செல்கிறீர்களோ, அந்தளவு நல்லது. தாமதம் செய்தால், சாலையில் கூட்டம் சேர்ந்துவிடும். அப்போது நீங்கள் என்ன முயன்றாலும் வேகமாக செல்லமுடியாது. அவரவருக்கு அவரவர் உயிர், சொந்தம், பிள்ளை குட்டி கருப்பட்டிதானே ஐயா... வயதானவர்கள், குழந்தைகள் ...

வெப்ப அலையை இயற்கை பேரிடர் பட்டியலில் சேர்ப்பதற்கு தயக்கம் என்ன?

படம்
        வெப்ப அலைகள் பேரிடராக அறிவிக்கப்படக்கூடுமா? நாடு முழுக்க வெப்ப அலைகளின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. பள்ளி திறப்பு கூட தள்ளி வைக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் வெப்ப அலை தாக்குதலை, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் பேரிடராக அறிவிக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் உருவாகியுள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசுகள் தம் சொந்த நிதியையே இப்போதுவரை செலவிட்டு வருகின்றன. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெப்ப அலை வந்தால், நிதி ஒன்றிய அரசிடமிருந்து வர வாய்ப்புள்ளது. 1999ஆம் ஆண்டு ஒடிஷாவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி சம்பவம் ஆகியவற்றின் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் உருவாக்கப்பட்டது. இயற்கை அல்லது மனிதர்கள் உருவாக்கிய செயல்பாடு என இரண்டு வகையிலும் ஒன்றிய அரசின் உதவியை பேரிடர் காலத்தில் பெறலாம். இயற்கை பேரிடரில் சொத்துகள் இழப்பு, மக்கள் உயிரிழப்பு பேரளவில் ஏற்படும். அதை ஈடுகட்ட ஒன்றிய அரசு உதவுகிறது. ஒரு மாநிலத்தில் இயற்கை பேரிட...

நிலநடுக்கத்தை முன்னரே அறிந்து இழப்பைத் தடுக்க உதவும் கருவிகள், முறைகள்!

படம்
  நிலநடுக்கத்தை அறிய உதவும் பல்வேறு முறைகள்!  பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National ...

நிலநடுக்கத்தை முன்னறிவோம்!

படம்
  நிலநடுக்கத்தை முன்னறிவோம்! பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National Center for Seismology ...