இடுகைகள்

டிவிதொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தற்காப்புக்கலை கற்ற விதவையின் புலனாய்வு திறமை!

படம்
  ஹவுஸ்ஒய்ப் டிடெக்டிவ் சீன தொடர் 20 எபிசோடுகள் யூட்யூப் நாயகி கு ஷியாங்கை மனதில் வைத்து எழுதப்பட்ட தொடராக பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால், தொடர் அப்படியாக செல்லவில்லை. பெண் ஆணின் தோளில் சாயவேண்டும், அவனை சார்ந்துதான் வாழவேண்டும் என்ற செய்தியை கொலை, வழக்கு, விசாரணை ரீதியில் கூறியிருக்கிறது. சீனத்தொடரின் கதை நடக்கிற காலம். சீனாவை பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா கூறுபோட்டு அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருந்த காலம். பிரெஞ்சு ஆட்களின் கீழ் காவல்துறை இயங்குகிறது. அதில் சீன ஆட்கள் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள். மேலதிகாரியாக பிரெஞ்சுக்காரர் இருக்கிறார். இக்குழுவினர் கொலை வழக்குகளை துப்பறிகிறார்கள். அப்படியான வழக்குரைஞரின் கொலைவழக்கில் அவரது மனைவியான நாயகி கு ஷியாங்க் மீது பழி விழுகிறது. அதில்தான் நாயகி கு ஷியாங்க், நாயகன் ருயி ஆகியோர் சந்தித்துக் கொள்கிறார்கள். பின்னர், வழக்கில் இருந்து கு ஷியாங்க் போதிய ஆதாரங்கள் இல்லையென்று விடுதலை ஆகிறார். தற்காப்புக்கலை, துப்பு துலக்குதல் என இரண்டிலும் திறமை கொண்டவர் என்பதால் அவருக்கு போராடி பெண் போலீஸ் மரியாதையை, வேலையை வாங்கிக்கொடுக்கிறார்கள். அதற்கு...

மாஃபியா உதவியுடன் குற்றவழக்குகளை ஆராயும் கேம்பிரிட்ஜ் பட்டதாரி!

படம்
  மை ரூம்மேட் இஸ் டிடெக்டிவ் சி டிராமா ராக்குட்டன் விக்கி 36 எபிசோடுகள் பார்க்க நன்றாகவே இருக்கின்றன. தலைப்பு சற்று பொருந்தி வரவில்லை. கொரிய டிராமாக்களைப் பார்த்து இப்படி தலைப்பு வைப்பார்கள் போல. லூ யாவோ என்பவரைத் தேடி காவல்துறை நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். தூங்கி எழுந்தவர், ஐயையோ என தப்பி ஓடுகிறார். ஆனால் எதிரே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சியோவோ, லூவின் மூக்கில் குத்தி அவரை லாக்கப்ப்பிற்கு அழைத்து செல்கிறார். வழக்கு இதுதான். அவர் தொழிலதிபர் ஒருவரை கொன்றிருக்கிறார் என காவல்துறை சந்தேகப்படுகிறது. முன்தினம் நடந்த விருந்தில், லூ கடன் கொடுத்த தொழிலதிபரை திட்டியது   அனைவருக்கும் தெரிந்த செய்தியாகிவிடுகிறது. எனவே, காவல்துறை லூவை முக்கிய குற்றவாளியாக கருதுகிறது. லூ, சாசோன் என்ற வெளிநாட்டு வங்கியில் பணியாற்றுகிறார். தனது மீதுள்ள குற்றத்தை அவரே துடைப்பதோடு குற்றவாளியையும் கண்டுபிடித்து கொடுக்கிறார். அதிலிருந்து இன்ஸ்பெக்ட்ர் சியோவோ, ஆலோசகர் லூ யாவோ, பத்திரிகையாளர் பாய் யூனிங் ஆகிய மூவரும் கூட்டணி போட்டு குற்றங்களை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற ...

நிர்வாணப்படம் எடுத்து சினிமா வாழ்க்கையை பலிகொடுத்து கொலையான நடிகர்!

படம்
  பாப் கிரேன் சினிமா, டிவி நடிகர்களின் வாழ்க்கையை திரையிலும் அதற்கு பின்னாலும் மக்கள் பின்தொடர்கிறார்கள். கவனிக்கிறார்கள். இப்படி கவனிப்பதில் மக்களுக்கு சுவாரசியம் கூடுகிறது. நடிகர்கள் அவர்களின் புகழுக்கு கொடுக்கும் விலையாக அந்தரங்க வாழ்க்கை உள்ளது. இந்த வகையில் அரிசோனாவைச் சேர்ந்த நடிகர் பாப் கிரேன் இணைகிறார். இவர் 1960களில் வெளியான ஹோகன்ஸ் ஹீரோஸ் தொடரில் முன்னிலை நடிகராக இருந்து பிரபலமானவர். பாலியல் சார்ந்த வினோத பழக்கங்கள் அவரது டிவி தொடர் வட்டாரத்தில் கசிய, வேலைவாய்ப்பை இழந்து, மனைவி விவாகரத்து செய்துவிட குடியில் பாதி அழிந்தார். மீதியை அவரது நட்புகள் அழித்தன. 1978ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று விண்ட்மில் டின்னர் தியேட்டருக்கு சொந்தமான கட்டிடத்தின் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கொலைக்கு காரணமானவர்களை யாரென இன்றுவரை கண்டறிய முடியவில்லை. இறந்துகிடந்தவரின் கழுத்தில் மின்சார வயர்கள் தொங்கின. இடது காதின் மேற்புறம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. நாற்பத்தொன்பது வயதில் பாப் கிரேனின் வாழ்க்கை பரிதாபமாக முடிவுக்கு வந்தது. பாப் கிரேனுக்கு இரண்டு மனைவிகள் உண்டு, ஒருவர், அவரது பள்ளிக...

வம்ச பெருமையைக் காப்பாற்ற தன்னையே தியாகம் செய்யும் அப்பாவியின் கதை! - ஷனாரா குரோனிக்கிள் 1&2

படம்
                ஷனாரா குரோனிக்கிள் அமெரிக்க வெப் தொடர் 20 எபிசோடுகள் ஆக்லாந்து , நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளது . எம்எக்ஸ் பிளேயர் எல்வின் என்ற நாட்டு மக்களுக்கு தெய்வமாக ஒரு மரம் இருக்கிறது . அந்த மரம்தான் அங்குள்ள நான்கு நாட்டு மக்களையும் காப்பாற்றி வருகிறது . எல்கிரிஸ் என்ற மரத்தை காப்பாற்ற ஏழுபேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த பட்டியலில் இளவரசியும் கூட தேர்வாகிறார் . உண்மையில் அந்த மரம்தான் மக்களை காக்கிறதா ? கருப்பு மந்திரத்தை பயன்படுத்தும் சாத்தான்களை அந்த மரம் இலையாக தன்னுடன் கட்டி வைத்திருக்கிறது என்று கூறப்படும் கதை உண்மையா என்பதை தொடர் விரிவாக பேசுகிறது . இதனுடன் கிளைக்கதையாக பில் என்பவனின் அம்மா , மரணப்படுக்கையில் இருந்து இறந்துபோகிறார் . அப்பாவின் சொத்தாக அவனுக்கு எல்ஸ் ஸ்டோன் எனு்ம் நீலநிற கற்கள் கிடைக்கின்றன . அதைப் பெற்று வேறிடம் நோக்கி சென்று வாழலாம் என நினைக்கிறான் பில் . அப்போது அவனது முயற்சியை அவனது மாமா பிலிப் தடுக்கிறார் . வெளியுலகம் நேர்மையானது அல்ல என்று எச்சரிக்கிறார் . அவனது...