விபச்சாரக்கும்பலில் சிக்கிய காதலியை போலீஸ் காதலன் மீட்கும் கதை! -
வீடிக்கி தூக்குடெக்குவா ஶ்ரீகாந்த், காம்னா ஆங்கிலத்தில் வெளியான டேக்கன் படத்தை தெலுங்கு மொழியில் கண்றாவியான ஒளிப்பதிவில் இசையில் எடுத்தால்... அதுதான் 'இவனுக்கு துணிச்சல் அதிகம்' என்ற தெலுங்குப்படம். தெலுங்கு படத்தலைப்பை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க கூடாது. அது தவறு. நாயகனின் பெயரைக் கூட தலைப்பாக வைக்கலாம். கிராந்தி. நன்றாகத்தான் உள்ளது. அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன? படத்தைப் பார்க்க பார்வையாளர்களுக்கு கூடுதல் துணிச்சல் தேவை. நீதி என்பது துப்பாக்கித் தோட்டாக்களால் வழங்கப்படுகிறது என நம்புபவர், கிராந்தி. பணிநீக்கம், கடுமையான விமர்சனம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் குற்றவாளி என தெரிந்தால் அவர்களை பாய்ண்ட் பிளாங்கில் துப்பாக்கி வைத்து சுடுவதுதான் அவரது பாணி. இப்படி செய்தால் சமூகத்தில் குற்றம் குறையும் என நம்புகிறார். கதைப்படி, நாயகனின் இந்த மூடநம்பிக்கையை அவரது மேலதிகாரியும் பெரிதாக புகார் சொல்லாமல் ஏற்கிறார். நாயகன் கிராந்திக்கு ஒரு இளம்பெண் அறிமுகமாகிறார். அவர் வேறு யாருமல்ல. அவரின் பள்ளிக்கால ரவுடித் தோழி. அவரை நாயகன் காதலிக்...