இடுகைகள்

நூலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிடித்த விஷயம் பின்னாளில் தொழிலாக மாறியது!

படம்
  அன்பரசு சண்முகம் மொழிபெயர்ப்பாளர் பிழைப்புக்கான தொழில்! மொழிபெயர்ப்பை பாடமாக பயின்றீர்களா? அப்படி பயின்றிருந்தாலும் சிறப்புதான். எனக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு, தமிழாக்கம் ஆகியவற்றை நான் சுயமாக கற்றவன். தாளில் எழுதி அதில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து மீண்டும் அத்தவறு நடக்காமல் பார்த்துக்கொண்டுதான் மின்னூல்களை எழுதி வருகிறேன். சுயமாக மொழிபெயர்ப்பை கற்கும் முயற்சியில் வெளியில் இருந்தும் சிலர் உதவி புரிந்தனர். என்னுடைய மொழிபெயர்ப்புகள் புனைவல்ல(சிறுகதை, கவிதை, நாவல்). கட்டுரைகள் சார்ந்தது. அபுனைவு. அதுவே பின்னாளில் பிழைப்புக்கான தொழிலானது. இது பலமா, பலவீனமா என்றால் இரண்டுமே உள்ளது.  இதற்கான தொடக்கம் எது? நெ.2 இதழான குமுதம் வார இதழ்தான். இளமை புதுமை முதன்மை என ஏகத்துக்கும் புதுமை செய்யும் இதழ் இன்றைக்கு வாராவாரம் பக்க எண்களை மட்டும் மாற்றிப்போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், அன்றைக்கு வார இதழ் தனது கதைகள், சிறுகதைகள், பேட்டி என அனைத்திலும் அவர்களின் கேப்ஷனுக்கு ஏற்றாற்போலவே புதுமையாக இருந்தது.  குமுதம் இதழின் அட்டையைப் பார்த்த...

குடும்பத்தால் ஏற்படும் இறந்தகால அவமானங்களுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு பழிவாங்கும் இளைஞன்!

படம்
    மார்சியல் மாஸ்டர் ஃபிரம் மார்சியல் லைப்ரரி மங்காகோ.காம் முரிம் கூட்டணியில் கூலிப்படையில் வேலை செய்யும் தற்காப்புக்கலை வீரரான இளைஞருக்கு வேலை ஒன்றை கொடுக்கிறார்கள். வேலைக்கு மறுக்க முடியாதபடி அதிக காசும் கொடுத்து துணைக்கு இரண்டு வலுவான வீரர்களையும் அனுப்பி வைக்கிறார்கள். நாயகன், ஒரு கற்பலகை ஒன்றை தேடி கொண்டு வந்து கொடுக்கவேண்டும். ஆனால், அதை அடையச் செல்லும் பாதை முழுக்க ஏராளமான பொறி அமைப்புகள். அதை உடைத்துக்கொண்டு போக முயன்றதில் நாயகனைத் தவிர்த்து அனைவருமே இறந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு கற்பலலை உள்ள இடத்தில் அம்பு, ஈட்டி, விஷம் என நிறைய பொறிகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். நாயகன் எப்படியோ தப்பி பிழைத்து சுரங்கம் போன்ற பாதை வழியாக ஊர்ந்து சென்று கற்பலகையை கண்டுபிடித்துவிடுகிறான். அதிலுள்ள வினோதமாக எழுத்துகளை தன் கையைக் கடித்து அந்த ரத்தம் மூலமாக எழுதிக்கொள்கிறான். கிரந்த எழுத்துக்கள் போல பார்க்க வினோதமாக படிக்க பொருளை அறியமுடியாதபடி இருக்கிறது கற்பலகையின் தொன்மை எழுத்துகள். அதை தொட்டு பார்க்கும்போது எதேச்சையாக விரலிலுள்ள ரத்தம் கல்லில் படுகிறது. உடனே கணினி உயிர் பெற்றதைப் ...

இழந்த தாய்நிலத்தை மீட்க போராடத் தூண்டும் கவிதைகள்!

படம்
    பலஸ்தீன கவிதைகள் தமிழில் நுஃமான் நூலகம் இது, சிறிய கவிதை நூல். மொத்தம் ஒன்பது பலஸ்தீன கவிஞர்கள் எழுதிய முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது. பலஸ்தீனம், இனப்படுகொலைக்கு உள்ளாகி மெல்ல அழிந்து வருகிறது. இன்று அமெரிக்கா, அழிந்த பலஸ்தீனத்தில் சொகுசு விடுதிகள், ஆடம்பர இல்லங்கள் கட்டினால் சிறப்பாக இருக்கும் என எகத்தாளமாக இனப்படுகொலையை ஆதரித்து பேசி வருகிறது. இப்படியான சூழலில் இக்கவிதைகளை நாம் வாசித்தோம் என்றால், அதன் அழுத்ததை புரிந்துகொள்ள முடியும். இனப்படுகொலை, தடுப்புக்காவல், சித்திரவதை, சிறை, பசி, பட்டினி, கல்வியின்மை, எதிர்காலம் பற்றிய இலக்கின்மை, வறுமை, போரில் மரணமடைந்த வீரர்கள், பலஸ்தீனியர்களுக்குள் உள்ள துரோகிகளால் வீழும் மக்கள் என நிறைய விஷயங்களை கவிதைகள் அழுத்தமாக பல்வேறு உருவகங்களை முன்வைத்து பேசுகிறது. பெரும்பாலும் அவற்றை ஒருமுறை வாசிக்கும்போதே முழு அரசியல், சமூக, பொருளாதார சூழலை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். பேரினவாதம் பேசுவோர், எதிரினத்தை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என வன்ம வாதத்தை முன்வைப்பார்கள். அப்படியான கருத்தில் மஹ்மூத் தார்விஷ் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். ரொட்...

கணித்தமிழ் மின்னிதழ் வெளியீடு - தமிழ் இணையக் கல்விக்கழகம்

படம்
      தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் - டிஜிட்டல் நூலகப்பக்கத்தில் கணித்தமிழ் என்ற மின்னூல் வெளியாகி இருக்கிறது. இருபத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இதழில், தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்ட முக்கியமான தமிழ் வளர்ச்சிப் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மின்னிதழ் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.   தொகுப்பாற்றுப்படை என்ற பக்கத்தில் சித்த மருத்துவ நூல்கள், அண்ணாவின் படைப்புகள் ஆகியவை உள்ளன. ஆர்வம் இருப்பவர்கள் சென்று நூல்களை வாசியுங்கள். அல்லது தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் சமூகப் பகிரல் தத்துவம்!

படம்
முதலாளித்துவத்தில் அடிப்படையானது லாபம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆப்பிள், கூகுள் தங்கள் அலுவலகங்களை திறப்பது குறைந்த கூலியில் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கருத்தில்தான். தொழிலாளர் சங்கம் அமைத்து அடிப்படையான உரிமைகளை கேட்க முடிந்தால், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆசியா பக்கமே தலைவைத்து படுக்காது. ஒரு தொழிலில் முதலீடு செய்து கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக லாபம் வரவேண்டும். லாபம் வரவில்லையா? லாபம் கிடைக்கும் இடத்திற்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இப்படித்தான் வெளிநாட்டு முதலீடுகள் செயல்படுகின்றன. லாபத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சியை பல்வேறு நாடுகள் அடைய முயன்று வருகின்றன. இதன் மறுபுறம் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை அவலமான வறுமைக்குள் தள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். சாமானிய மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கியாவது உயிர்பிழைக்க முடியுமா என அல்லாடுவார்கள். முதலாளித்துவத்திற்கு கருணை தெரியாது. இரக்கம் கிடையாது. மனிதநேயம் பார்க்காது. மக்களை தேவையற்ற ஏராளமான பொருட்களை வாங்க வைத்து க...

அறிவுசார்ந்த ஜனநாயகத்தன்மையை அளிக்கும் இணையம்- சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டம் - இன்டர்நெட் ஆர்ச்சீவ்

படம்
  அரசு பொது நூலகங்களுக்கு உள்ளே சென்று படிப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இன்று அப்படி செல்பவர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பொதுவான அறிவுத்தேடலுக்காக செல்பவர்களுக்கு அங்கு இருக்கைகள் கூட இருப்பதில்லை. எல்லாவற்றையும் நாளைய ஊழல்வாதிகளாக உருவாகவிருக்கும் அரசு அதிகாரிகளே நிரப்பியிருக்கிறார்கள். அதையும் மீறி சென்று ஆங்கில வார இதழ்களை படித்தால் நீ யார், அப்பா என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்கிற  நூலகர்களே கிராமப்புறங்களில் அதிகம். ஆனால் இணையத்தில் இந்த பாகுபாடுகள், வேறுபாடுகள் கிடையாது. அமைதியாக நூல்களை தேடிப்பார்த்து தரவிறக்கிக் கொள்ளலாம். அதிலும் இன்டர்நெட் ஆர்ச்சீவ் வந்தபிறகு நிலைமை மாறிவிட்டது. அதில் ஏராளமான அரிய நூல்கள், வார இதழ்கள், கட்டுரைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதை நூலகரிடம் சாதி சொல்லாமல் எளிதாக இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திற்கு எதிராக நூல் பதிப்பாளர்கள் வன்மம் கொண்டு வழக்குகளை தொடுத்து வருகிறார்கள்.  பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் உள்ள காந்தி பற்றிய நூல்களை ஸ்கேன் செய்...

தடை செய்யப்பட்ட நூல்களை படிக்க உதவிய நூலகர்! - டைம் 100 போராளிகள்

படம்
  நிக் ஹிக்கின்ஸ் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் நிக் ஹிக்கின்ஸ்   45 புத்தக விற்பனையாளர் சங்கமே மாஃபியா குழு போல நடந்துகொண்டு சில நூல்களை விற்க கூடாது என மிரட்டும் சூழல் இருக்கிறது. சில இடங்களில் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கொண்ட நூல்களை விற்க கூடாது என காவல்துறை அதிகாரமீறல்களை செய்வது உண்டு. இந்த சூழலில் நூல்களை காப்பாற்றி வைத்து அதை வாசகர்களுக்கு கொண்டு செல்வது வேறு யார்? நூலகர்கள்தான். ப்ரூக்ளின் பொது நூலக தலைவரான நிக் ஹிக்கின்ஸ், பல்வேறு மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட நூல்களை சேகரித்து அதை டிஜிட்டலாக சேமித்து வாசகர்கள் படிப்பதற்கு உதவுகிறார். பொதுவாகவே உலகின் பல்வேறு நாடுகளில் பழமைவாதிகள், பழமைவாத அரசுகள் அமைந்து வருகின்றன. எனவே, ஏராளமான நூல்களை தடை செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக நிக் ஹிக்கின்ஸ் நிற்கிறார். நிக்கும் அவரது குழுவினரும் தடை செய்யப்பட்ட நூல்களை வாசகர்கள் படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தணிக்கை செய்வது, தடை செய்வது என்பது குழந்தைகள், வயது வந்தோர் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே ஆகும். இப்படி...

காரியத் தடைகளால் நின்றுபோன செயல்கள்!

படம்
  நாளிதழ் 8.1.2022 சென்னை -4   அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நேற்று புக்டே.இன் எனும் தளத்திற்கு சென்றேன். பாரதி புத்தகாலயத்தின் தளம். அதில் படிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருந்தன. ஆகார் படேலின் நேர்முகம் ஒன்றைப் படித்தேன். கரண் தாப்பர் நேர்காணல் செய்திருந்தார்.’’ தீர்மானமான ஆற்றல் மிக்க என்பதோடு, விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடியவர்’’ என ஆகார் படேல் பயன்படுத்திய சொற்கள் வினோதமாக பட்டது. அவர் மோடியைப் பற்றிய கூறியவைதான் அவை. கரண்தாப்பர், அவர் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என கேட்டு கேள்விகளை அமைத்திருந்தார். நல்ல நேர்காணல். போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றால் வெளியே எங்காவது போகவேண்டும். ‘’மாணவர் இதழை 50 இதழ்களாக வெளியிடலாம்’’ என எடிட்டர் கூறினார். ஆனால் ஒரு இதழ் வெளிவருவதே கடினமாகிவிட்ட சூழ்நிலை. தேவையான விஷயங்களை எழுதி கணினியில் ஏற்றிவிட்டு எங்காவது செல்ல முடிந்தால் திட்டமிட்டு செல்லவேண்டும். காரியத் தடைகளால் அனைத்தும் அப்படியே நிற்கின்றன. இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளம் சென்று பார்த்தேன். நிறைய நூல்களை வைத்திருக்கிறார்கள். என்...

அரசுபள்ளி மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் நடமாடும் நூலகம்!

படம்
  வாசிப்பை வளர்க்கும் நூலகம்!  திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆடையூர் பஞ்சாயத்து பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரம் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.  பைக்கில் வரும் நூலகருக்காகத்தான் மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். நூலகர்,நடமாடும் நூலகம் என எழுதப்பட்ட பெட்டியிலிருந்து நூல்களை எடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கிறார். 15 நாட்களுக்குள்  நூல்களை படித்துவிட்டு திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.  மாணவர்களுக்கு, இதற்கென தனி அடையாள அட்டை உண்டு.  குறிப்பிட்ட கால அளவில் பத்து நூல்களை படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக ஒரு நூலை வழங்குகிறார் நூலகர்.  இந்த நடமாடும் நூலக திட்டத்தை அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருவது, ரெஜன்பூக் இந்தியா பௌண்டேஷன் (Regenboog India Foundation). இதனை நிறுவி நடத்தி வருபவர், மதன் மோகன்.  2006ஆம் ஆண்டு மதன் மோகன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியில், மனநிறைவு கிடைக்காததால் , வேலையை விட்டுவிலகி சமூகப் பணிகளைச் செய்ய நினைத்தார்.   அப்போது திருவ...

அன்பளிப்பு நூல் திட்டத்தை தொடங்கிய மாவட்ட நீதிபதி!

படம்
  அன்பளிப்பு நூல்களால் உருவாகும் வாசிப்பு பழக்கம்!  பீகாரின் புர்னியாவில்  மாவட்ட நீதிபதியாக ராகுல் குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். இவர், நூல்களை அன்பளிப்பாக வழங்கும் அபியான் கிதாப் தான் (‘Abhiyan Kitab Daan’) திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.  நூலகத்திற்காக, மக்கள் தங்களிடமுள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் இது.  இத்திட்டம், கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதனை ராகுல்குமார், சிறியளவில் தொடங்கினார். இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பில் பெரிய திட்டமாக வளர்ந்துள்ளது. இதனால், மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராம, நகர்ப்புறங்களிலும் நூலகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  வரலாறு, புவியியல், போட்டித்தேர்வு, இலக்கியம் என பல்வேறு துறை சார்ந்து ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்களை உள்ளூர் மக்கள் வழங்கியுள்ளனர்.  இதனை மேலும் மேம்படுத்த ராகுல்குமார் மேசை, புத்தக அலமாரி, நாற்காலிகளை வாங்கித் தர திட்டமிட்டுள்ளார்.  ”கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் வயது வேறுபாடின்றி நூலகத்தால் பயன் பெறலாம். நூல்களை வ...

வாசிப்பு பழக்கத்தை மாணவர்களின் மனதில் விதைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  ஆசிரியர் உமா மகேஸ்வரி வாசிக்கும் பழக்கம் என்பது மாணவர்களுக்கு இன்று அவசியமானது. அதிலும் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாகிக்கொண்டு இருக்கும் நிலையில், அவர்களது கற்பனைத் திறனை வளர்க்க வாசிப்பு உதவுகிறது. இதற்கு சில ஆசிரியர்கள் எப்போதும் உதவி வருகின்றனர். கூடவே அதனை வளர்க்கவும் மாணவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி ஒருவர்தான் ஆசிரியர் உமா மகேஸ்வரி. இவர் குரோம்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இங்கு வகுப்பில் மாணவர்களுக்கென தனி நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்.  மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட அவர்கள் நூல்களை வாசிப்பது, அதை பற்றி மதிப்பீடுகளை முன் வைப்பதற்கும் கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறார். இது மாணவர்களுக்கு நூல்களின் மீது அக்கறை செலுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக, அரசுப் பள்ளி மாணவி விமானத்தில் செல்லும் வாய்ப்பையும் நூல் வாசிப்பு வழங்கியிருக்கிறது. திரைப்பட நிறுவனம் ஒன்று உங்கள் கனவு பற்றி கட்டுரை எழுதுங்கள் என்று சொல்லி நடத்திய போட்டியில் மாணவி வெற்றி பெற்று முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்து திரும்பியிருக்கிறார்.  2005ஆம் ஆண்டு சேலம் மாவ...

தனது கிராம மக்களுக்கு அறிவுபுகட்ட நூலகத்தை அமைத்த பேராசிரியர்!

படம்
  pixabay கிராம மக்களுக்காக நூலகம் அமைத்த பேராசிரியர்!  உத்தரப் பிரதேசத்தின் கல்யாண்பூரில் கிராம மேம்பாட்டு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அருண்குமார் உருவாக்கியுள்ளார். அருணின் பூர்விக வீடு, இங்குதான் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 750 நூல்களைக் கொண்ட நூலகத்தை கிராமத்தினருக்கு  அமைத்துக்கொடுத்துள்ளார். அருண், டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கு முதல்முறையாக நூலகத்திற்கு சென்றார்.  அங்கு அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை பார்த்து வியந்திருக்கிறார். அதற்கு முன்பு வரை அவர் நூலகத்திற்கு சென்றதேயில்லை. அவரது கிராமத்திலும் நூலகம் அமைந்திருக்கவில்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.  நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கும் அவருக்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். “நூலக வாசிப்பு, மாணவர்களுக்கு பாடநூல்களைத் தாண்டி இலக்கிய அனுபவத்தையும் தரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ” என்றார் பேராசிரியர் அருண்குமார்.  கல்யாண்பூரில் தொடங்கிய கிராம நூலகத்திற்கு முன்னோடி,  பன...

ஆத்மாவை பற்றி படரும் குரல்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
3.12.2021  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு , வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெயில் காய்கிறது. அறையின் சுவரின் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. நான் வைத்திருந்த சமையல் பொருட்கள் ஈரத்தால் பூஞ்சை உருவாகி வீணாகிவிட்டன. இதனால் பொருட்களை வைக்க பிளாஸ்டிக் டப்பாக்களைத்தான் சேட்டா கடையில் வாங்கி வர வேண்டும். இப்போதுள்ள பாட்டில்களும் டீக்கடையில் விலையின்றி பெற்று வந்தவைதான்.  டெல் மீ வொய் என்ற குழந்தைகள் நூலை வாங்கினேன். இதுவும் முன்னர் நான் வேலை செய்த முத்தாரம் போன்ற இதழ்தான். மலையாள மனோரமா குழுமத்தின் தரமான தயாரிப்பு. பொது அறிவுத்தகவல்களைக் கொண்டது. இந்த மாத இதழ் பெண் சாதனையாளர்களை மையமாக கொண்டுள்ளது. ரூ.40க்கு வாங்கினேன்.  நாளிதழ் ஆசிரியருக்கு மகள் வயிற்றுப் பேரன் பிறந்துள்ளான். மனம் கொள்ளாத மகிழ்ச்சியும், முகத்தில் இதுவரை பார்த்திராத சிரிப்புமாக இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே சக உதவி ஆசிரியரும் ஒன்றிய அரசின் விருது பெற்ற எழுத்தாளருமான பி.பி சார் பிரியாணி என அடிபோட்டு இருக்கிறார்.  அன்பரசு 3.12.2021 -----------------------------------...

நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
pixabay நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்!  5.4.2021   அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா? நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும்.  இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்....  நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்ட...

இரண்டு பேர் இரண்டு பேருடனும் காதல்! - கடிதங்கள்

படம்
  பிரிய முருகுவிற்கு.... நலமுடன் திகழ வேண்டுகிறேன். சேட்டன் பகத்தின் நாவல் ஒன்றைப் படித்தேன். அதுபற்றித்தான் இந்த மடல்.  கோபால் மிஷ்ரா, ராகவ் காஷ்யப், ஆர்த்தி பிரதான் என இரண்டு ஆண், ஒரு பெண் என மூவருக்கு இடையிலான உறவுச்சிக்கல்களும், வாரணாசியின் வளர்ச்சி மாற்றங்களும்தான் கதை. இந்த மூவரில் ஒருவர் இதில் நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க எழுகிறார். அவர் வெற்றி பெற்றாரா, எப்படி வென்றார் என்பதை சேட்டன் பகத்தின் ரிவல்யூஷன் 2020 என்ற நாவல் பேசுகிறது.  நாவலை நீங்கள் வாசிக்கவேண்டியது அவசியம்.  ஒருவரின் புரட்சி குறித்த அறைகூவல் மற்றவரை விழித்தெழச் செய்யலாம. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சமூகத்திற்கு தரவேண்டும். அப்படி பங்களித்தால்தான் சமூகத்திற்கு பல  மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.  இந்த நாவலில் காதல் என்பது முழுக்க ஆர்த்தி என்ற பாத்திரத்தைச் சேர்ந்தது. ஆர்த்திக்கு, ராகவுடன் காதல் இருக்கும்போது கூட விரக்தியடையும் நேரத்தில் கோபாலுடன் உடலுறவு கொள்கிறாள். மில்லினிய கால வாசகர்களுக்கான நாவல் இது.  தற்போது வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம் பூவுலகுதான். வடக்குப்புதுப்பாளையும...

நூலகங்களை புத்துயிர் பெறச்செய்வது எப்படி? கர்நாடகா வழிகாட்டுகிறது!

படம்
  நூலகங்கள் மட்டும்தான் அனைத்து குழந்தைகளும் உள்ளே வந்து படிக்கும் வாய்ப்பை அனைத்து பிரிவினருக்கும் வழங்குகின்றன. இங்குதான் ஏராளமான வார, மாத, நாளிதழ்கள் எளிதாக கிடைக்கும். நீங்கள் இருக்கும் பகுதியைப் பொறுத்து அங்கு ஊர்ப்புற, பகுதிநே, கிளைநூலகம் இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் சிரத்தை எடுத்து வேலை செய்யும் நூலகமும், கொஞ்சமேனும் துடிப்புள்ள தன்னார்வலர்கள் இருந்தால் சிறப்பு. இல்லையெனில் தூசி துடைக்கப்படாத மேசையும், குப்பைகளாக போடப்பட்ட நூல்களும்தான் நூலகத்தின் அடையாளமாக இருக்கும்.  கர்நாடக மாநிலத்தில் 5600 கிராம நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராம பஞ்சாயத்துகளின் கீழ் செயல்படும் இந்த நூலகங்கள், பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவின. ஒடுவா பெலகு எனும் திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்தி நூலகங்களை மீட்டெடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த நூலகங்களில் இலவசமாக கட்டணமின்றி இணைந்துகொள்ளலாம்.  நூலகங்களில் உள்ள நூல்களை வீட்டுக்கே எடுத்துச்சென்று படித்துவிட்டு பிறகு குறிப்பிட்ட நாள் தவணையில் கொடுத்தால் போதுமானது. இவர்களுக்கென மஞ்சள் நிற அட்டை ஒன்றைக் கொடுக...

மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!

படம்
ozy சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது. இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன. நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல...