இடுகைகள்

செயல்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளை என்பது பிளாஸ்டிக்கை போன்றதா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மூளையை பிளாஸ்டிக் என்று கூறுவது ஏன்? மூளை, ஒருவர் பெறும் அனுபவங்களைப் பொறுத்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக அதை பிளாஸ்டிக் என்று கூறுகிறார்கள்  மூளை இளம் வயதில் எப்படி மாறுகிறது? பிறக்கும்போது குழந்தைக்கு மூளை 350 கிராமாக உள்ளது. பின்னர், வயது வந்தவராக மாறும்போது அதன் எடை 1450 கிராம்களாக மாறுகிறது. பிறக்கும்போது மூளையில் நியூரான்களின் தொடர்பு முழுமை பெற்றிருப்பதில்லை. வயது வந்தோராக மாறும்போதுதான் அதன் முழுமையாள வளர்ச்சி நிறைவுபெறுகிறது.  மூளையை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? மதுபானம் அருந்தக்கூடாது. அடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. உடற்பயிற்சியை தினசரி செய்யவேண்டும். அடிப்படையாக மூளையில் டிமென்சியா போன்ற நோய்கள் வரக்கூடாது என்றால், அங்கு ரத்தவோட்டம் சீராக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பல்வேறு மொழிகளைக் கற்பது எளிது. நடப்பது, பேசுவது, சமூக வாழ்க்கையை புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றை செய்யமுடியும். இதையெல்லாம் தொடக்கத்தில் க...

மரபணு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ - மருத்துவ நோபல்பரிசு 2024

படம்
  நோபல் பரிசு 2024 நடப்பு ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு அறிவியலாளர்கள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணுக்கள் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் மைக்ரோஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மரபணுக்களின் செயல்பாட்டை ஒழுங்குமுறை செய்வது மைக்ரோஆர்என்ஏ. பல கோடி ஆண்டுகளாக உயிரியல் மூலக்கூறுகளின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது மைக்ரோஆர்என்ஏ. டிஎன்ஏவில் மரபணு தொடர்பான தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன. செல்களில் உள்ள உட்கருவில் டிஎன்ஏ உள்ளது. இத்தகவல்களை எம்ஆர்என்ஏ மூலக்கூறு பிரதி எடுத்து வைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்ய குறிப்பிட்ட மரபணுக்கள் உதவுகின்றன. உடலிலுள்ள திசுக்கள் பல்வேறுவித புரதங்களை உருவாக்குகின்றன. இவை, குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்ய உதவுகின்றன. வேலை செய்ய, தகவல்தொடர்பு கொள்ள என குறிப்பிடலாம். மரபணுக்களின் ஒழுங்கான செயல்பாடு, மூலமே உடல் பிரச்னையின்றி இயங்குகிறது. இதில் பிரச்னை நேர்ந்தால், உடலில் நீரிழிவு, நோய்எதிர்ப்பு சக்தி சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள். இன்று மருத்துவ நோபல் பரிசு ...

விலங்குகளின் ஹார்மோன்களை மனிதர்களின் உடலில் செலுத்தி வினோத ஆராய்ச்சி!

படம்
              ஹார்மோன் மாயாஜாலம் ! உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்கள் , தனக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் ஏற்பது , பெண்களின் கூட்டத்தை ஆர்வமாக கவனிப்பது , குரல் உடைவது , நடவடிக்கையில் துணிச்சல் வருவது என கூறிக்கொண்டே போகலாம் . இன்று ஹார்மோன் என்றால் பெரும்பாலானோர்க்கு என்ன விஷயம் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது . நீரிழிவு அல்லது கருவுறுதலை தடுப்பதற்கு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடங்கியுள்ளது . எண்டோகிரைன் சுரப்பி மூலம் ரத்தத்தில் இணையும் இந்த வேதிப்பொருள் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் , மனநிலை என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது . இருபதாம் நூற்றாண்டு வரை ஹார்மோன்கள் இருக்கிறதா இல்லையா எப்படிவேலை செய்கிறது என்பது பற்றிய எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் இருந்தது . மண்டையோடு , உடல் உறுப்புகள் , தசைகள் ஆகியவற்றில் உள்ளதாக தொடக்கத்தில் நம்பினர் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹார்மோன்களை எண்டோகிரைன் சுரப்பி சுரக்கிறது என்பதை கண்டறிந்தனர் . ஆனாலும் கூட அதன் செயல்பாடு பற்றி முழுமை யாருக்கும் தெரியவில்லை . ...

உடற்பயிற்சி எதற்காக?- இதயம், நுரையீரல் செயல்பாடுகளை அறிவோம்.

படம்
                உடலை எப்படி அசைக்க முடிகிறது ? உடலிலுள்ள தசைகள் ஒன்றாக இயங்கினால் மட்டுமே நமது கைகால்களை அசைத்து நகர முடியும் . தசைகள் உள்ளிழுக்கப்படும் தன்மை கொண்டவை . வெளித்தள்ளும் திறன் இல்லாதவை . தசைகள் இழுக்கப்படும்போது உடல் உறுப்பு குறிப்பிட்ட திசையில் நகரும் . இன்னொரு தசை உள்ளிழுக்கப்படும்போது இன்னொரு திசையில் உறுப்புகள் நகரும் . தசைகள் குழுவாக இயங்குவதால் நாம் உடலை அனைத்து திசைகளிலும் நகர்த்திக்கொள்ள முடியும் . வளைக்கலாம் நேராக்கலாம் . முழங்கையின் முன்பகுதி உயர்ம் குறைவாக இருக்கும் பின்பகுதி பைசெப்ஸ் அமைந்துள்ளது . பைசெப்ஸ் தசைகளை ட்ரைசெப்ஸ் தளர்த்துகிறது . முழங்கையை எளிதாக மடக்கும் இணைப்பு எலும்புகளும் இங்குள்ளன . இதனை தெளிவாக பார்க்க கைகளின் அமைப்பு அல்லது பாடி பில்டர்களின் கைகளைப் பார்க்கலாம் . உடற்பயிற்சி காரணமாக அவர்களின் தசை அமைப்புகள் தனியாக தெளிவாக தெரியும் . எதற்காக உடற்பயிற்சி ? உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகள் பெரிதாகவும் வலிமையாகவும் உருவாகும் . புதிய தசை நார்கள் உருவாகும் . எனவே தினசரி ந...

டூடுல் வரைவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் சும்மாயிருக்கும்போது கையில் பேனா இருந்தால் அதில் டூடுல்களை வரையத்தொடங்குவது ஏன்? காரணம், அப்போதும் நம் மனம் ஏதோவொன்றை சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். இதனால்தான், பேனாவை எடுத்தால் கடகடவென ஏதாவது யோசித்துக்கொண்டே ஏதோவொன்றை கிறுக்கி வைக்க முடிகிறது. சிலர் இதனை போனில் பேசும்போது செய்வார்கள். தாள் என்றில்லை படிக்கும் நூலிலும் குறித்து வைப்பது இப்படிப்பட்ட செயல்பாடுதான். நன்றி: பிபிசி, படம் பின்டிரெஸ்ட்

மூளையின் ஆச்சரியங்கள்!

படம்
நம் மூளை எப்போது ஆச்சரியங்களை அள்ளித்தருவது. அதிலுள்ள சிந்தனை, எப்படி செயல்படுகிறது, சைக்கோ கொலைகாரர்களின் மூளை, புதிய விஷயங்களை பழகுவது, பழகிய விஷயங்களை சட்டென மறப்பது என ஆராய்ச்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூளை ஆராய்ச்சியாளர் தாரா ஸ்வர்ட் தி சோர்ஸ் என்ற நூலை இதுகுறித்து எழுதியுள்ளார். நம் மூளைகளுக்கு ஆசைகளை பழகினால் அதனை சாதிக்க முடியும் என்கிறார் தாரா ஸ்வர்ட். தற்போது எழுத்தாளராக சுயமுன்னேற்ற பேச்சாளராக உள்ளார் இந்த உளவியலாளர்.  ”நான் இந்த நூலை எழுதியது அறிவியல் முறையில் தங்கள் வாழ்க்கையை சரியானபடி வாழ நினைப்பவர்களுக்காகத்தான். நியூரோசயின்ஸ் குறித்த ஆய்வுகளை முதலில் பலரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று அதனை பலரும் தேடிவரக் காரணம், அதன் தேவை அதிகரித்துள்ளதான்.  Deccan Chronicle இன்று வாழ்வில் நீங்கள் பெறும் அனைத்து வெற்றிகளுக்கும் மூளையில் பங்கு பின்னணியில் உண்டு. அதுதான் உங்களின் ஆதாரம் அதாவது சோர்ஸ். நான் அறிவியல் முறையில் இந்த நூலில் கூறியுள்ளது அதுதான்.  நூலில் ஏராளமான ஆய்வுத்தகவல்கள், நோயாளிகளின் அனுபவங்கள், ஆளுமைகளை மேம்படுத்தும்...

மூளையில் மின்னல் வெட்டுதா?

படம்
Pexels.com பொதுவாக மூளை தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் உண்மைத்தன்மையும் மிகச்சிக்கலான தன்மை கொண்டவை. விளக்கப்புகுந்தால் அதை கூறுபவருக்கு மட்டுமல்ல; புரிந்துகொள்ள நினைப்பவருக்கும் பூமி வலமிருந்து இடமாக சுற்றி பொறி கலங்கும். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நியூரான்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன. மின் துடிப்புகளாக செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகளை அறிய முற்படுவதற்கு முக்கியக் காரணம், பார்கின்சன் மற்றும் அல்சீமர் தொடர்பான நோய்களுக்கு இவை உதவுமே என்பதுதான். மனித மூளையின் எடை 1.4 கி.கி மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை - 100 பில்லியன் உடலின் இருபது சதவீத ஆற்றல் மூளையின் பயன்பாட்டிற்கு செல்கிறது. இதுவே மின்தூண்டுதலுக்கு ஆதாரம். ஒரு நியூரானிலிருந்து 70 மில்லிவோல்ட் மின்சாரம் உருவாகிறது. இசிடி சிகிச்சையில் 450 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கடல் உயிரினமான ஈல், இரண்டு மில்லி செகண்டுகளில் 860 வோல்ட் மின்சாரத்தை உருவாக்குகிறது. நன்றி: க்வார்ட்ஸ்