அதிதிகளே வெளியேறுங்கள்!- சுற்றுலாவை தவிர்க்கும் நாடுகள்
விருந்தினர்களே வெளியேறுங்கள்! – ‘அதிதி தேவோ பவா’ என இந்திய அரசு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பன்னீர் தெளித்து சந்தனமாலை போட்டு அழைக்கும் நிலையில் இத்தாலி, நார்வே, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சுற்றுலா பயணிகளை உஷாராக கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. என்ன காரணம்? சூழல் பிரச்னைகளும், சுற்றுலா பயணிகளால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதுதான். உலகமயமாக்கலால் வணிகத்தின் வடிவங்கள் மாறி பெருமளவு மக்களின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது சுற்றுலா பெருக்கத்திற்கு முக்கியக்காரணம். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தால் அந்த இடம் என்னாகும்? மாசடையும்தானே! உலகின் தொன்மையான சுற்றுலாதளங்களும் இப்பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றன. வெனிஸ், பாரீஸ் ஆகிய நகரங்கள் சுற்றுலா பயணிகளின் நில, நீர்வழி போக்குவரத்துகளை குறைத்து தினசரி வருகையை நிர்ணயித்து அனுமதிக்க தொடங்கியுள்ளன. வெப்பமயமாதல் விளைவுகளால் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், உணவு ஆகியவற்றுக்கான பற்றாக்குறை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அந்நிய படையெடுப்பு போல வரும் டூரிஸ்ட்டுகளுக்கு தங்குவதற்கு முன்னுரிமையாக வசதி...