அப்பாவின் மீது மகனுக்கு உருவாகும் கொலைவெறி!
உளவியல் மிஸ்டர் ரோனி ஓடிபல் காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அம்மா மீது ஏற்படும் ஈர்ப்பு எனலாம். சிக்மண்ட் பிராய்ட் இந்த கோட்பாட்டை உருவாக்கினார். இதற்கு சொந்த வாழ்க்கையிலேயே உதாரணம் இருந்தது. அவரின் பெற்றோர் இருபது ஆண்டுகள் தனியாக பிரிந்து வாழ்ந்தனர். அம்மாவிற்கு சிக்மண்ட் முதல் பிள்ளை. அந்த பாசம், ஈர்ப்பு அம்மா, மகன் இருவருக்கும் இடையே தீவிரமாக இருந்தது. அம்மா, 95 வயதில் காலமானார். மகன் சிக்மண்ட் அதற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இறந்தார். ஓடிபல் காலகட்டம் என்பதையும் அவர் வரையறுத்து கூறினார். நான்கு முதல் ஏழுவயது வரையிலான காலகட்டத்தில் மகனுக்கு தாய்மீது அதிக ஈர்ப்பு உருவாகிறது. இந்த எந்தளவுக்கு செல்கிறது என்றால், அப்பாவை எதிரியாக கருதி கொல்லவேண்டும் என்ற அளவுக்கு... அந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டால் அவர்களது இளமைக்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். மகனின் கோபத்தை அப்பாவின் பலம் கட்டுப்படுத்துகிறது. பிறகு மகன் அக்காலகட்டத்தை கடந்தால் வளர்ந்து அவனுக்கென்று மனைவியைத் தேடி குடும்பத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவன் மனதில் இருந்த கோபம், அவனது மகனது மனதிற்கு குடியேறுகிறது. கார்ல் ...