இடுகைகள்

ஜானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலாளர்களின் வேலை நீக்கத்தை எதிர்த்து போராடும் அப்பாவி மனிதவளத்துறை அதிகாரி!

படம்
  ஜானி கீப் வாக்கிங் சீன திரைப்படம் யூட்யூப் ஜானி, நட், போல்ட், ஸ்க்ரூ என தயாரிக்கும் பெரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்தாலும் அவனுக்கு செல்வாக்கான ஆட்கள் பின்புலம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில்லை. கிராமத்தில் உள்ள தொழிலாளர்களிடையே அவனுக்கு நல்ல பெயருண்டு. ஜானி சீனியர் பிட்டர். எந்த வேலையாக இருந்தாலும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். அவன் மனைவி, கணவனுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவில்லையென சண்டை போட்டு விவாகரத்து செய்துவிட்டு போய்விடுகிறாள். அதற்குப் பிறகு அவனுக்கு நண்பர்கள்தான் உலகம். அப்படி இருப்பவனுக்கு திடீரென நிறுவனத்தின் தலைமையகத்தில் வேலை செய்ய பணி இடமாற்ற ஆணை வருகிறது. ஜானிக்கு மகிழ்ச்சிதான். நண்பர்களுக்கு விருந்து கொடுத்துவிட்டு நகருக்கு கிளம்புகிறான். உண்மையில் அந்த பணி ஆணை, இன்னொருவருக்கு வழங்கவேண்டியது. தவறுதலாக அவனுக்கு வந்துவிடுகிறது. ஜானி, தலைமையகத்திற்கு செல்கிறான். அங்கு அவனுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் வேலை அளிக்கிறார்கள். அவனுக்கு ஒன்றும் புரிவதில்லை. அவன் சீனியர் பிட்டர். அவனை எதற்கு...

மனிதர்களின் உலகைப் புரிந்துகொள்ளும் டிராகுலா! - டிரான்சில்வேனியா 4

படம்
  டிரான்சில்வேனியா 4 டிரான்சில்வேனியா 4 சோனி அனிமேஷன் டிரேக் தனது ஹோட்டலை தனது மகள் மாவிஸ், மருமகன் ஜானியிடம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் மருமகன் மனிதன் என்பதால், அவனை டிரேக்கிற்கு பிடிப்பதில்லை. மேலும், ஜானி உற்சாகப்பட்டு செய்யும் பல்வேறு அட்டகாசங்களால் ஹோட்டலை அவனிடம் கொடுக்க மறுத்து டிராகுலா சட்டம் என ஒன்றை சொல்கிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை.  படம் தொடங்கும் டைட்டில் கார்டு தொடங்கி அனிமேஷன் படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. இந்த கொண்டாட்டமான மனநிலை படத்தின் இறுதி வரை தொடர்கிறது.  டிரேக் தனது ஹோட்டலில் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கு வரும் ஜானி, விழாவை படு உற்சாகமாக மாற்றுகிறார். ஆனால் அது மாமனார் டிரேக்கிற்கு பிடிக்கவில்லை. ஜானி உற்சாக மிகுதியில் செய்யும் விஷயங்களை மாற்றி இயல்பாக நடக்க வைக்கிறார். தனது மனைவியிடம் ஹோட்டலை அவனிடம் ஒப்படைக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இறுதியில் நிலைமை மாற தான் சொன்னதை மாற்றிக்கொள்கிறார். இதற்கு பதிலாக ஜானி, மான்ஸ்டர் கிடையாது என்பதை சொல்கிறார்.  டிரான்சில்வேனியா 4  இதனால், மனம் உடையும் ஜானி தன்னை மா...