நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்!
நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்! கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்திருப்பீர்கள். உடனே களமிறங்கிய கூலிப்படை ஊடகங்கள் அதை வைத்து கல்லா கட்டா தொடங்கிவிட்டன. மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக வல்லுறவு படுகொலையை தற்கொலையாக மாற்ற முயன்ற மாநில அரசும் கூட நீதி வேண்டி பேரணி நடத்தியது. அதிகாரத்தில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, யாரிடம் நீதியை வேண்டுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து மாநில ஆட்சியை பிடிக்க மதவாத கட்சியின் சார்பு கொண்ட ஆளுநர், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். குடியரசுத் தலைவரை சந்திக்கவும் விரைந்தார். இதெல்லாம் படிக்கும்போது ஏதோ நம்மைச் சுற்றி அவல நகைச்சுவை நாடகம் நடப்பது போல தோன்றுகிறதா? இந்து பார்ப்பன பாசிச தத்துவத்தில் புழங்கிய புதிய இந்தியா இப்படித்தான் இயங்குகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த அவரவர் தங்களால் முடிந்த பிரயத்தனத்தை செய்கிறா...