வங்கதேச தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தப் போராடும் ஊழல் கறைபடிந்த போலீஸ் அதிகாரி
டெரர் ஶ்ரீகாந்த்மேகா, நிகிதா, நாசர், பிருதிவிராஜ், கோட்டாசீனிவாசராவ் தெலுங்கு மற்றுமொரு தேசபக்தி படம். இதில் தீவிரவாதிகள் பாக்கிலிருந்து வரவில்லை வங்க தேசத்திலிருந்து வருகிறார்கள். இந்தப்படத்தை இப்போது வெளியிட்டால், வலதுசாரி மதவாத கட்சி ஆளும் ஆந்திரத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் கலவரம் செய்து களிக்கலாம். அந்தளவு வெறுப்பு விஷத்தை மதம் வழியாக கக்கியுள்ள படம். எல்லாமே முஸ்லீம் தீவிரவாதம் என்ற கிளிஷேதான். ஒரே டெம்பிளேட். ஒரே நடைமுறை. பதினைந்து நாட்களில் ஆந்திரத்தின் ஹைடெக் சிட்டியில் மாநில முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. அதை உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்கிறார். இதை நாயகன் விஜய் அறிந்துகொள்கிறான். அவனால் முதல்வர், விழாவிற்கு வரும் மக்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே கதை. நாயகன் விஜய், தீவிரவாத தாக்குதல்களை கண்காணிக்கும் பிரிவில் மாற்றப்பட்டு வேலை செய்கிறான். இதற்கு முன்னர் நன்றாக வேலை செய்தவன். இடையில் அவனது மேலதிகாரி, சில அரசியல் தலைவர்கள் செய்த சூழ்ச்சி, சதியால் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொள்கிறான். பணியில் சற்று தாழ்ந்த நிலை...