இடுகைகள்

மின்வாகனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன்

படம்
            சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன் வணிக ரீதியான போட்டியை, தொழில் சார்ந்து நிறுவனங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். போட்டியை சமாளிக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். கரிம எரிபொருள் வாகனமோ, மின் வாகனமோ புதுமைகளை புகுத்த வேண்டும். ஆனால், மக்களுக்கு குறைந்த விலையில் தரமாக கிடைக்கக்கூடிய சீன மின் வாகனங்களை ஐரோப்பிய கமிஷன் முப்பத்து மூன்று சதவீத வரியை விதித்து தடுக்க முயல்கிறது. குறிப்பாக அவர்களது இலக்கு, பைடு என்ற சீன மின் வாகன நிறுவனம்தான். இந்த நிறுவனம், மின்வாகனங்களை டெஸ்லாவை விட தரமாகவும் விலை குறைவாகவும் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று வருகிறது. இதைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டுக்கான கார்பன் வெளியீட்டு இலக்கைக் கூட ஐரோப்பிய கமிஷன் அடையமுடியும். பதிலாக, சீனாவின் மின்வாகன இறக்குமதிக்கு அதிக வரியை விதித்து அமெரிக்காவுடன் கைகோத்திருக்கிறது. இந்த வரி விதிப்பிற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பைடு, ஜீலி ஆகியவற்றோடு வெளிநாட்டு நிறுவனங்களான டெஸ்லா கூட மின் வ...

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - மைக்ரோசாஃப்ட், பைடு, சாம்சங்

படம்
  பைடு, சீனா ஜேபி மோர்கன் சேஸ் சிஏடிஎல், சீனா லேண்ட் ஓ லேக்ஸ் லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட் சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் இயக்குநர் மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு உலகின் வாசல் மைக்ரோசாஃப்ட்   டெக் உலகில் இருக்கிறதா இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் இயக்குநர் சத்யா நாதெள்ளா மாற்றியிருக்கிறார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அதை தன் வசப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் டெக் உலகில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களை விலக்கி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட், சாட் ஜிபிடியை தனது அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது, அதன் இணைய உலாவியான பிங் தொடங்கி ஆபீஸ் வரையில் அனைத்துமே இனி மாறிவிடும். மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். டெக் வல்லுநர்கள் பயன்படுத்தி வந்த கிட்ஹப்பும் கூட மைக்ரோசாஃப்ட் வசம் சென்றுவிட்டது. எனவே, இதிலும் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கும். இதில் கோடிங் எழுதுவதற்கு பயன்படுத்தும் கோபைலட் என்ற கருவியை செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தவிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை க...

அமெரிக்காவில் மின் வாகனங்கள் பரவலாக மாறாததற்கு காரணம்!

படம்
  மின் வாகனங்களை நகரம் தொடங்கி கிராமத்தில் வசதியானவர்கள் வரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். விலை அதிகமென்றாலும் தவணைக்கு வாங்கி ஓட்டுகிறார்கள். கிராமத்தைப் பொறுத்தவரை இப்படி ஓட்டுவது புதிய அந்தஸ்தாக மாறிவிட்டது.   மின்வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் அளவுக்கு இன்னும் புழக்கமாகவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டாக மின் வாகனங்களின் வளர்ச்சி நடந்துவருகிறது. ஆனாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. பரவலாவதைத் தடுக்கும் சில காரணிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அவற்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.   மின்வாகனங்கள் குறிப்பாக கார்கள் இன்று வலிமையாக தயாரிக்கப்படுகின்றன. மக்களும் அதை வாங்கி ஓட்டுகிறார்கள். ஆனால் கார்கள் இத்தனை கி.மீ. தூரம் செல்லும் என கணக்குப் போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்த கணக்கு உண்மையா என்றால் அதை பருவநிலைதான் தீர்மானிக்கும். மேற்குநாடுகளில் உறைபனி கொட்டும் காலங்களில் மின் வாகனங்களின் திறன் முப்பது சதவீதம் குறைந்துவிடுகிறது. பயணிகள் வாகனம் என்றால் அதற்கான ஆற்றலை எளிதாக சேமிக்கலாம்.   ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்ட...

கேம்ஸாப், ஏத்தர் வெற்றிக்கதை - 40 அண்டர் 40 பார்ச்சூன் பட்டியல்!

படம்
  தருண் மேத்தா, இயக்குநர், ஏத்தர் ஸ்வப்னில் ஜெயின், தருண் மேத்தா, ஏத்தர் யாஸாஸ் அகர்வால், கௌரவ் அகர்வால், கேம்ஸாப் கேம்ஸாப் கேம்ஸாப் யாஷாஸ் அகர்வால் கௌரவ் அகர்வால் கௌரவ், புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். யாஸாஸ் அகர்வாலுக்கு மொபைலில் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் உண்டு. இதுதான் கேம்ஸாப் நிறுவனம் தொடங்குவதற்கான விதை. இந்திய நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் தொகையினர் 35 வயதினராக இருக்கிறார்கள். தொழிலுக்கு இதை விட நல்ல விஷயம் என்ன வேண்டும்? பல்வேறு விளையாட்டுகளை டெவலப்பர்களிடம் பேசி உரிமம் பெற்று வாங்கி அதை பிரபலமான ஆப்கள், வலைத்தளங்களில் இணைத்துவிடுவதே கேம்ஸாப்பின் வேலை. இப்படி செய்து கடந்த ஆண்டு 42 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளனர். இதில், அவர்களோடு இணைந்துள்ள வலைத்தளம், ஆப்களுக்கு 50 சதவீத தொகையை ஒப்பந்த தொகையை வழங்கிவிட்டனர். கேம்ஷாப்பின் இயக்குநர், யாஸாஸ் அகர்வல். கேம்ஸாப் வேலை செய்யும் என்று தெரிந்தவுடன் கௌரவ், தான் பெய்ன் கன்சல்டன்சியில் பார்த்து வந்த வேலையைக் கைவிட்டார். அட்வெர்கேம் டெக்னாலஜிஸ் பி. லிட் என்பதே கேம்ஸாப்பின் தாய் நிறுவனம். இன்று கேம்ஸாப்பின் விள...

சட்டவிரோத வேட்டையைத் தடுக்க உதவும் மின் வாகனங்கள்!

படம்
  விலங்கு வேட்டையைத் தடுக்கும் மின்வாகனங்கள்! மொசாம்பிக் நாட்டின் தேசியப் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. 2021ஆம் ஆண்டுவரையில், இங்கு நடைபெற்ற சட்டவிரோத வேட்டைகளின் எண்ணிக்கை அதிகம்.  வனக்காவலர்கள் குழு, வேட்டைக் குழுக்களைத் தடுக்க இரவில் ரோந்து சென்றாலும் கூட நிலைமை மேம்படவில்லை.  இதற்கு முக்கியக் காரணம், வனக்காவலர்களின் பைக்குகள் தான்.  அவை இயங்கும்போது எழுப்பும் சத்தம் அதிகம்.  இதன் சத்தத்தை வைத்து வனக்காவலர்களின் நடமாட்டத்தை, வேட்டை கும்பல் எளிதாக அடையாளம் கண்டுகொண்டது. உடனே, தேசிய பூங்காவில் உள்ள பல்வேறு சதுப்புநிலங்கள், புதர்ப்பகுதிகள் ஆகியவற்றில் மறைந்து தப்பித்து வந்தனர்.  சாமர்த்தியமாக வன விலங்குக ளை வேட்டையாட, வேட்டை நாய்களையும் பயன்படுத்தினர்.  சத்தமின்றி பாதுகாப்பு ஆனால் இன்று வனக்காவலர்கள், சட்டவிரோத வேட்டையை வெற்றிகரமாக தடுத்து வருகிறார்கள்.  இதற்கு அவர்கள் கையாளும் இ பைக்தான் காரணம். ஸ்வீடனின் வாகன தயாரிப்பு நிறுவனம் கேக் (CAKE), வனக் காவலர்களுக்கு இ பைக்குகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, அதிக ஒலி எழுப்பாமல் வேட்ட...

சூழல் சார்ந்த கவனம் கொள்ளும் இளைய தலைமுறை - ஆதித்ய தாக்கரே- மகாராஷ்டிரம்

படம்
தாக்கரே குடும்பத்தில் அடுத்த அரசியல் வாரிசு, ஆதித்ய தாக்கரே. தேர்தலில் வென்றுவிட்டு சுற்றுச்சூழல் அமைச்சராகியிருக்கிறார். குடும்ப அரசியல் என்றாலும் கூட சூழல் குறித்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். அதுவே இவரைப் பற்றி நாம் இங்கே எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 13 முதல் சூழல் சார்ந்த பாடத்தை பள்ளிக்கல்வியில் கொண்டு வர முயற்சிசெய்து வென்றிருக்கிறார். மஜிதி வசுந்தரா என்பது இதன் பெயர். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுப்பியவர் ஆதித்யா. பின்னர், அப்பா முதல்வர் ஆன பிறகு சூழல் அமைச்சகத்தின் தலைவராக ஆனார். பிறகுதான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். மின் வாகனங்களை மும்பை சாலைகளில் ஓட்டுவதை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். கவிதை நூல் ஒன்றை பதிப்பித்துள்ளார். தனியாக ஆல்பம் ஒன்றை தயாரித்தவர், அதில் எட்டு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். சுற்றுலாவை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை மனதில் வைத்திருக்கிறார். ஹோட்டலை தொடங்க இதற்கு முன்னர் 70 முதல் 100 ...