இடுகைகள்

அபினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அபினியால் அழிந்த தேசம் மீண்டெழுந்த வரலாறு! - சீனாவின் வரலாறு - வெ.சாமிநாதன்

படம்
      சீனாவின் வரலாறு வெ சாமிநாதன் பிரபஞ்ச ஜோதி பதிப்பகம் பதிப்பு 1962 தமிழ் இணைய கல்விக்கழகம் நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பு சீனாவைப் பற்றி அன்றைய காலத்தில் 81 ஆங்கில நூல்களை படித்து அதிலுள்ள விஷயங்களை எடுத்து சேர்த்து 564 பக்கத்திற்கு நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் அடிக்குறிப்புகளே நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் அனுபந்தம், நூலின் முக்கிய பகுதிகள், குறிப்புகள், நூலை எழுத உதவிய மேற்கோள் நூல்கள் என அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு கூட இப்படியான தெளிவான நூலை ஒருவர் எளிதாக எழுதிவிட முடியாது. அந்தளவு நூல் சிறப்பாக தெளிவாக உள்ளது. இன்றைக்கு சீனா, தரைவழியாக, நீர் வழியாக தன்னை விரிவுபடுத்திக்கொள்ள முயன்று வருகிறது. எதற்கு இந்த கோபம், ஆக்ரோஷம் என பலரும் நினைப்பார்கள். அதற்கான விடை அதன் வரலாற்றில் உள்ளது. குறிப்பாக ஜென்ம எதிரியான ஜப்பான், சீனாவை அழித்து மக்களை வேட்டையாடிய வரலாற்றை இன்றும் சீன டிவி தொடர்களில் நீங்கள் பார்க்க முடியும். பெரும்பாலான வரலாற்றுத் தொடர்களில், திரைப்படங்களில் ஜப்பானியர்கள்தான் தீயவர்கள், வில்லன்கள். அதற்கான காரணங்களை நீங்கள் வெ ச...

வணிகத்திற்காக நடந்த போர்!

படம்
    பாயும் பொருளாதாரம் 14 போர் எப்படி தொடங்குகிறது? போர் தொடங்கி நடப்பதற்கு அரசியல், வரலாறு, உளவியல் காரணங்கள் உண்டு. போருக்கு பின்னணியில் பொருளாதாரமும் உள்ளது. தொன்மைக் காலத்தில் ரோம் நாடு,போர் செய்து தன்னை செல்வாக்காக சொகுசாக வைத்துக்கொண்டது. சுரங்கம், பயிர் விளையும் வயல்கள், சொகுசு பொருட்கள் என பலவும் போர் காரணமாக அந்த நாட்டுக்கு சொந்தமாயின. இன்றும் கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஜனநாயகம் பற்றி அக்கறைப்படுவதற்கு அந்நாட்டிலுள்ள கனிமங்கள், எரிபொருள் வளங்களே முக்கியக் காரணம். அமெரிக்கா மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகள் பலவும் ஏதேனும் ஒருவகையில் பலலவீனமான நாடுகளை தன்னுடைய காலனியாக்கிக்கொள்ள துடிக்கின்றன. கடன் கொடுத்தோ, ராணுவ ஆதரவு கொடுத்தோ தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் அடியாட்கள் போல மாறிவிட்டன. இங்கிலாந்து அபினியை சீன மக்களுக்கு கொடுத்து சட்டவிரோத வணிகம் செய்தே அந்த நாட்டிற்குள் சுதந்திரமாக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது. இதை தடுக்க முயன்ற சீன பேரரசர்களோடு 1839,1856ஆகிய காலகட்டங்களில் போர் செய்யவும் தயங்கவில்லை. ...