இடுகைகள்

கட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ! - book review

படம்
 தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங்  ஒலிவியா செங், ஸ்டீவ் யுயி சங் ட்சங் கட்டுரை நூல் 297 பக்கங்கள் ஷி ச்சின்பிங் தனது அரசின் நிர்வாக சாதனைகளைப் பற்றி பிரசாரத்துறை மூலம் ஏராளமான நூல்களை எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து விற்று வருகிறார்கள். அந்த நூல்களை படித்த நூலாசிரியர்கள், அதை வைத்து ஷி என்ன யோசிக்கிறார், உண்மையில் அவரது நாட்டில் நடந்த சம்பவங்கள், அதைப் பின்பற்றி அவர் என்ன யோசித்தார், செய்தார். கட்சியினர் என்ன நினைத்தனர் என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.  ஷியின் ஆளுமை, கட்சியில் தன்னை வளர்த்துக்கொண்ட பாங்கு ஆகியவை தொடக்கத்தில் விளக்கமாக கூறப்பட்டுவிடுகின்றன. டெங், மாவோ ஆகியோரிடமிருந்து அவர் வேறுபடும் விதம் பற்றி மெதுவாக பல்வேறு திட்டங்களை அவர் எப்படி செயல்படுத்தினார், அதில் அடைந்த ஆதாயம் என கூறிக்கொண்டே வருகிறார்கள். நூலில் அத்தியாயம் தொடங்கும்போது அதில் கூறியுள்ள செய்திகள், இறுதியாக முடியும்போது படித்த விஷயங்கள் என்னென்ன என பாடநூல் போல வடிவமைப்பை பின்பற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு எதற்கு என புரியவில்லை.  ஷி எ...

கட்சி, நாட்டிற்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் மக்களே தேவை - ஷி ச்சின்பிங்

படம்
  விசுவாசம் அனைத்துக்கும் மேலானது! தாய்நாடு என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சீன அதிபர் ஷி ச்சின்பிங், வெளிநாட்டில் வாழும் சீனர்களை உங்கள் தந்தை நாட்டிற்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துங்கள் என்று பேசுகிறார். எதற்காக? உலகம் முழுக்க சீன மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அதற்கு உள்நாட்டு அரசியல் நிலைமை, வேலையின்மை, கல்வி, தொழில்வாய்ப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவர்களை ஷி, பொதுவுடைமைக் கட்சியின் கீழ் ஒருங்கிணைக்க நினைக்கிறார். அனைவருக்கும் தனிக்கனவுகள் உண்டு, ஆனால், அதிபர் காணச்சொல்வது சீனக்கனவை. அது அனைவருக்குமான கனவு என்பதாக கட்டமைக்கிறார்.  நாடு, கட்சி, அதிபர் ஷி ச்சின்பிங் என மூன்றையும் சீனாவிலுள்ள மக்கள் நேசிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். வாழ்க்கையை அப்படியே அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் விசுவாசம். கட்சியை மட்டுமே மையப்படுத்திய தேசப்பற்று. அப்படியல்லாது கேள்வி கேட்பவர்களை, கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் பாலியல் புகார்களை சொல்பவர்களை ஷி மன்னிப்பதில்லை. பாலியல் புகார் சொன்ன டென்னிஸ் வீராங்கனை ஒருவர் காணாமல் போனார். திரும்ப வந்தபோது தனது ஓய்வை அறிவித்துவி...

ஆப் வழியாக மக்களை, கட்சி உறுப்பினர்களை கண்காணிக்கும் ஷி ச்சின்பிங்!

படம்
  ஆப் வழியாக கண்காணிப்பு சீனாவில் ஷி ச்சின்பிங் செல்வாக்கு என்பது தானாக வளர்ந்தது என்று கூறுவதை விட அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கில் வளர்த்தெடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். ஏற்கெனவே ஷி யின் உரைகளை நூலாக வெளியிட்டு கட்சி பள்ளிகளில் பாடமாக வைத்துவிட்டனர். அடுத்தகட்டமாக, ஆப் ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். மிகப்பெரிய அதிகாரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் ஆப்பின் பெயர். ஷி ச்சின்பிங் சிந்தனைகளிலிருந்து அரசு அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலரும் கற்றுக்கொள்ளலாம். இதை கட்சியின் பிரச்சார நிறுவனம் கண்காணிக்கும். 2019ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டுகிறது. பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40-60 சதவீதமாக உள்ளது. இந்த ஆப்பை பொதுவுடைமைக் கட்சிக்காக தயாரித்து கொடுத்தது அலிபாபா குழுமம். குழந்தைகளின் விளையாட்டுப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஷி ச்சின்பிங் எண்ணங்கள் வண்ணங்களைப் பற்றி ஒருவர் படிக்காமல் தேர்வு எழுதாமல் வெளியே வரமுடியாது. கொரோனா காலத்தில் ஷியின் ஆப் பயன்பாடு, அதிகரித்தது. ...

அறிவால் பகை வெல்வோம் - பாயும் பொருளாதாரம்

படம்
      பாயும் பொருளாதாரம் 7 அறிவால் பகை வெல்வோம் கையில் நிறைய ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அதை எங்காவது பயன்படுத்திப் பார்க்க முயல்வார்கள். அதை தவிர்க்கமுடியது. மனித குண இயல்பே அப்படித்தான். இந்த வகையில் அமெரிக்கா, தனது பொருளாதார வளர்ச்சிக்கு பலிகடாவாக மாற்ற கனடாவை, கிரீன்லாந்தை நிர்பந்தித்து வருகிறது. பெரிய பொருளாதாரத்திற்கு அதிகளவு இயற்கை வளங்கள் தேவை. அதை அடைய பிற நாடுகளை விலைக்கு வாங்கி, நேரடியாக அல்லது மறைமுகமாக காலனியாக்கினால் மட்டுமே பெறமுடியும். பெரிய அரசு, சிறிய அரசு என இரண்டுக்குமே சேவை வரி செயல்பாடு என அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. அரசு இயங்குவதில் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகின்றன. வலதுசாரிகள், அரசு தனிப்பட்ட வணிகம், தொழிலதிபர்கள், தொழில்கள் எதிலும் அரசு தலையிடாது பார்த்துக்கொள்கிறார்கள். மக்களை உயிரோடு பாதுகாப்பது மட்டுமே அரசின் கடமை. என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுவதல்ல. தொழிலதிபர்களுக்கு குறைந்தளவு வரியே அரசு விதிக்கும். இதெல்லாம் வலது கருத்தியல். இதில் மதம் சேர்ந்தால் புல்டோசர்கள் பிரதமர் கட்டித்தந்த வீட்டைக்கூட இடிக்கும். ஊழல்கள், கொலை, கொள்ளை மன்...

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! - அரசியல் கட்சிகளின் வருமானம்

படம்
            காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! இந்தியாவில் தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெறுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென வலதுசாரி மதவாத ஆளும்கட்சி, தனியாக சட்டம் ஒன்றை உருவாக்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பயன்களைப் பெற்றது. அதே சட்டங்களை பிற கட்சிகளும் பயன்படுத்தின. மதவாத ஆளும்கட்சி, இன்னும் சற்று மேலே போய் நிதி அளிப்பவர்களை, தொழில் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, தேசிய புலனாய்வு முகமை வைத்து மிரட்டி பேரளவிலான நிதியைப் பெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஒரு பார்முலா உருவானது போல, ரெய்டு நடந்த சில வார, மாதங்களில் கட்சிக்கு நிதி வரவு அதிகரித்தது. இதைப்பற்றிய உண்மையான செய்திகளை அறிய நியூஸ்மினிட், நியூஸ் லாண்ட்ரி, தி வயர், கேரவன் ஆகிய ஊடகங்களை அணுகலாம். தேர்தல் பத்திரம் மூலம் பேரளவிலான நிதியை ஆளும் கட்சி திரட்டியபிறகு, அதுவரை மீளாத உறக்கத்திலிருந்த நீதிமன்றம் எழுந்தது. தேர்தல் பத்திரம் அச்சிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சன்டிவி சீரியல் திருப்பங்களை விட நகைச்சுவையானது. இரண்டு தேர்தல்கள...

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்...