தெரியுமா ? எது கனிமம்? நிலக்கரி, எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றையும் கூட கனிமம் என பொதுவாக கூறலாம். இவை தேசத்தின் முக்கியமான இயற்கை வளங்களாகும். மேற்சொன்ன பொருட்களை துல்லியமாக அடையாளப்படுத்த ஹைட்ரோகார்பன் எனலாம். திரவங்கள் மற்றும் வாயுக்களை கறாரான விதிகளின்படி பார்த்தால் கனிமம் இல்லை என்று கூறிவிடலாம். வைரம், மரகதம் ஆகியவை ஆய்வகத்தில் உருவாக்கப்படுகின்றன. இயற்கையாக உருவாகவில்லை என்பதால் இவற்றை கனிமம் என்று கூறமுடியாது. உணவில் உள்ள கனிமங்கள் என்று கூறப்படுபயான இரும்பு, கால்சிய்ம, ஜிங்க் ஆகியவற்றையும் துல்லியமாக கனிமம் என்ற வகையில் வரையறுக்க முடியாது. ஒரே வேதிப்பொருட்களைக் கொண்ட உலோகங்கள் தங்கம், செம்பு. உலோகமல்லாத சல்பர், கார்பன் ஆகியவற்றை இயற்கையான கூறுகள் (Native elements) எனலாம். உலோகம் அல்லது பகுதியளவு உலோகம் சல்பருடன் இணைந்தால், அதனை சல்பைடு எனலாம். எ.டு. சால்கோசைட் (Chalcocite) இதிலுள்ள உலோகம், செம்பு. நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வேதிப்பொருட்கள் உலோகத்தோடு இணைந்தால் அதனை ஹைட்ராக்சைடு எனலாம். எ.டு. ப்ரூசைட் (Brucite), இதிலுள்ள உலோகம்,...