இடுகைகள்

சோவியத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!

படம்
  சர்வம் ஸ்டாலின் மயம் மருதன் கிழக்கு பதிப்பகம் ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது. 139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை. ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும். லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற...

அரசு, தொழிலாளர் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நூல்!

படம்
        அரசும் புரட்சியும் புரட்சியாளர் லெனின் தமிழில் ரா கிருஷ்ணய்யா சோவியத் யூனியனை மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக ஆண்ட லெனின் எழுதிய நூல். இந்த நூலை கிருஷ்ணய்யா சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நூல் முழுக்க அரசு என்றால் என்ன, அதன் நோக்கம், யாருக்காக செயல்படுகிறது, அதை தொழிலாளர்கள் எப்படி கைபற்றி மக்களுக்காக இயங்க வைப்பது என நிறைய உதாரணங்களோடு எழுதியுள்ளார். நூலில் கூடுதலாக சந்தர்ப்பவாதிகள் பற்றியும் விரிவாக விமர்சனங்களை எடுத்து வைத்து விவாதித்துள்ளார். நூல் எளிதாக வாசித்து யோசித்து புரிந்துகொள்ளக்கூடியதல்ல. மொத்தம் 570 பக்கங்களைக் கொண்டது. மார்க்சிய தத்துவம் சார்ந்த நூல் என்பதால், நூலை அனைவருக்கும் பொதுவான நூலாக கூற முடியாது. நிதானமாகவே படிக்க முடியும். நூலை வாசிப்பதற்கு முன்னர், அதன் பின்னே உள்ள பல்வேறு சம்பவங்களை படித்துவிட்டு வந்தால் நூலை முழுவதுமாக வாசிக்க எளிதாக இருக்கும். ஏராளமான சம்பவங்களை நூல் சுருக்கமாக கூறிச்செல்வதால் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. லெனின் எழுதியுள்ள இந்த நூல் முழுக்க மார்க்ஸ், எங்கல்சின் பல்வேறு கூற்றுகள், ஏராளமான நூல்களில் ...

பெட்ரோல் பாம்களை வீசி ரஷ்யாவை சாய்த்த பின்லாந்து ராணுவம்! - மோலடோவ் காக்டெய்ல் தெரியுமா?

படம்
  மோலடோவ் காக்டெய்ல் மோலடோவ் காக்டெய்ல் ஈராக், தாய்லாந்து, பிரான்ஸ், மெக்சிகோ என அனைத்து நாடுகளிலும் இந்த காக்டெய்லை மக்கள் பயன்படுத்துகிறார்கள். உடனே, அந்தளவு புகழ்பெற்ற மதுபானமா என்று கேட்டால் நீங்கள் பெரும் அப்பாவி. மோலடோவ் காக்டெய்ல் என்பது அடுத்தவர்களை கொல்வதற்கென உருவாக்கும் பாம், பெட்ரோல் பாம் என்று கூட சொல்வார்கள்.  தயாரிப்பது எப்படி? அதிக நீளமாக செய்முறை சொல்லமுடியாது. கண்ணாடி பாட்டிலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு மேலே திரியை நீட்டி வைத்து தூக்கி எதிரியின்(போலீசின் மீது) எரியவேண்டியதுதான். இப்படி எறிந்தால்தானே புரட்சி தீ நாடெங்கும் பரவும்.  பெரும்பாலும் புரட்சிக்காரர்கள் இதனை செய்வார்கள். இல்லையெனில் புரட்சியாளர்களை ஏதேனும் காரணம் சொல்லி கைது செய்யவேண்டுமே? அரசு கூட ஆட்களை இப்படி தயார் செய்து அரசு கட்டிடங்கள்  மீது ஏற வைக்கலாம். பெட்ரோல் பாம்களை வீச வைக்கலாம்.  டேட்டா இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் அய்கோ கார்ப்பரேஷன் 4 லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மோலடோவ் காக்டெய்லைத் தயாரித்தது.  காக்டெய்ல் திரியை பற்றவைத்த உடனே 43 டிகிரி செல்சியஸ...