இந்தியாவில் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள்... தீவிர வறுமையில் அழுத்தப்படும் 95 சதவீத மக்கள்!

 



பெர்னி சாண்டர்ஸ் பார்வையில் இந்தியா...

இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மொத்தம் 1.46 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மொத்தம் 200 பெரும் பணக்காரர்கள்.இவர்கள், 2025ஆம் ஆண்டில் 941 பில்லியன் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். 

இந்தியாவில் 75 மில்லியன் மக்கள் தீவிரமான வறுமையில் வாடி வருகிறார்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள கௌதம் அதானி, பிரதமருக்கு நெருக்கமானவர்.இவர் நிலக்கரி, அடிப்படை கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமரின் நெருக்கமான நட்பை பயன்படுத்தி பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார். கூடுதலாக பெரும் வரி விலக்கு, தனது நிலக்கரி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு, தொழிலாளர் சங்கங்களை அழுத்தி செயலிழக்கச் செய்வது, ஆதரவான நீதித்துறையினர் மூலம் விசாரணைகளை தாமதப்படுத்தி நிறுவனங்களை காப்பாற்றுதல் என நிறைய விஷயங்களை சாதித்து வருகிறார். 

பல கோடி மக்கள் அடிப்படையான சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, வேலை கிடைக்காமல் வறுமையில் தடுமாறி வருகிறார்கள். 

இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் பணக்காரர்கள் பணம் அதிகாரத்தை அடைந்து ஒட்டுமொத்தமாக சமூக அமைப்பை களங்கப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் பணக்காரர்கள் ஆக அதற்கான விலையாக மக்கள் வாழ்க்கை பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. 

நன்றி
பைட் ஒலிகார்ச்சி நூல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!