இடுகைகள்

விடுதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பி வந்து சுற்றுலாவை வளர்க்கும் இளைஞர்கள்!

படம்
            கிராமங்களில் வளரும் சுற்றுலா சீனாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவ கலாசார, உணவு, பண்பாட்டு தன்மை கொண்ட கிராமங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர். இதை சீனாவில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரும், இளைஞர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த சீன அரசும், உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள எட்டு கிராமங்களை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என சர்வதேச சுற்றுலா அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு, ஐ.நாவுடையது. எடுத்துக்காட்டாக ஷிதி கிராமத்தைப் பார்ப்போம். இந்த கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு, தேயிலைப் பயிர் ஆகியவை முக்கியமான தொழில்கள். 1986ஆம் ஆண்டு, சுற்றுலா துறை மேம்பட்டது. கிராமத்தில் உள்ள வரலாற்று கட்டுமானங்கள், ஹூய்சூ கலாசாரம் ஆகியவை பிரசாரம் செய்யப்பட, உலக நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் சுற்றுலா வணிகத்தை கையாண்டாலும் பின்னாளில் 2013க்குப் பிறகு சுற்றுலாவுக்கென தனி ந...

கஜகஸ்தானில் குழந்தைகளுக்கு நேரும் அநீதி!

படம்
கஜகஸ்தானில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடுமையாக வன்முறைக்கும் புறக்கணிக்கும் உள்ளாவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறிவருகிறது. நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் கஜகஸ்தானில்  வன்முறைக்கு இலக்காவதோடு, குடும்பத்தைச் சந்திக்கவும் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மித்ரா ரிட்மன். அக். 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 27 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை நேர்காணல் செய்த தில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள 19 மாநில காப்பகங்களில் மனநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் 2 ஆயிரம் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றன. இக்குழந்தைகளுக்கு சில மருந்துகளைக் கொடுத்து மயக்கமுறச்செய்து அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் அழைத்துச் சென்று அழைத்துவிடுகின்றனர். இவர்களுக்கு சிசோபெரெனியாவுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதுதான் பிரச்னை. இம்மருந்து அச்சிறுவர்களை 24 மணிநேரத்திற்கு தூக்கத்திலேயே வைத்திருக்கும் சக்தி கொண்டது. இங்கு வளரும் குழந்தைகளை பணியாளர்கள் தாக்குவது இயல்பாக...