பிணங்களோடு வாழ்வதே இன்பம் - நீல்சனின் வாழ்க்கை முறை
அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெஃப்ரி டாமர், நீல்சன் ஆகிய இருவரும் அமைதியாக இருக்கும் நபர்கள்தான். ஆனால் செய்த கொலைகள் எல்லாமே பீதியூட்டும் ரகத்தைச் சேர்ந்தவை. டாமரைப் பொறுத்தவரை உடலுறவில் ஈடுபடவென தனி ஜோம்பி போன்ற உடல் தேவைப்பட்டது. அதை உருவாக்க முடியும் என நம்பினார். நீல்சனைப் பொறுத்தவரை தன் ஆயுளுக்கும் தன்னை விட்டு நீங்காத ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவர்கள் மட்டுமல்ல கொலைகளை செய்யும் பலரும் மக்களை உயிருள்ளவர்களாக பார்க்கவில்லை. அவர்கள், பொருட்களை எப்படி தேவைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். அதுபோல நினைத்து பயன்படுத்தினார்கள். நீல்சன் தனக்கு தேவையான இரைகளை பப்களில் கண்டுபிடித்தார். இவருக்கு பிறரை தனக்கு வேண்டிய விஷயங்களைச் செய்யச் சொல்லி கேட்பது அவமானமாக இருந்தது. எனவே தன்னைத் தானே இறந்துபோனது போல மாற்றிக் கொண்டு கண்ணாடி முன்னே சரி பார்த்துக்கொள்வார். ஆனால் இதெல்லாம் கூட அவருக்கு மனதில் நினைத்த மகிழ்ச்சியைத் தரவில்லை. 78களில் நீல்சன், பப் ஒன்றுக்குச் சென்றார். அங்குள்ளவரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் சில பீர்க...