இடுகைகள்

மூலிகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியத்தில் இருந்து உயிர்பெற்று வரும் தொன்மை மருத்துவர்!

படம்
      காலம் கடந்து வரும் தொன்மை மருத்துவர் சீனதொடர் யூட்யூப் சீனாவைப் பொறுத்தவரை நிறைய டிவி தொடர்களை ஒன்றாக இணைத்து அதை திரைப்படம் என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியான டிவி தொடர்தான் இது. அனைத்து டிவி தொடர்களிலும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பெரிதாக சீன எழுத்தில் இருக்கும். மற்றொன்று சிறியதாக ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கில சப்டைட்டில் போட்டு உலகளவில் வியாபாரம் பார்க்கிறார்கள். இந்த தெளிவும் வியாபார புத்தியும்தான் சீனாவுக்கு பெரிய பலம். இளம்பெண், பாரம்பரிய சீன மருத்துவமனையை நடத்தி வருகிறாள். ஆனால் அவளுக்கு நோயாளிகளின் நோயைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. உண்மையாக என்ன நோய் என்று கண்டுபிடித்தாலும் அதைக்கூறாமல் ஏராளமான மருந்துகளை பரிந்துரைத்து அதையும் தனது கடைவழியாக விற்று காசு சம்பாதிக்கிறாள். இதில் அவளது தம்பியும் உடன் நிற்கிறான். நாயகியின் தந்தைக்கு மகள் முறையாக மருத்துவம் பார்ப்பதே பிடித்தமானது. அவள் தில்லாலங்கடி வேலை பார்த்து காசு சம்பாதிப்பது பிடிக்கவில்லை. இந்த சூழலில், அவர்களது வீட்டில் மாட்டியுள்ள பழைய தொன்மையான ஓவியத்தின் முன் நாயகி நின்று பிரார்த்தனை செய்கிறாள...

பச்சை குத்துதல், டாட்டூ வரைதலை நவீனமாக செய்யும் பழங்குடி மக்கள்!

படம்
  கோண்ட் பழங்குடிகள் கலைஞர் மங்களா பாய் ஒரு தொன்மை மொழி உள்ளது. அதை பேசும் மக்களில் ஒருவர் மிஞ்சினாலும் கூட அம்மொழி உயிரோடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படித்தான் பச்சை குத்துதலை நரிக்குறவர்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறார்கள். முதலில் சைக்கிள் கம்பிகளை பச்சு குத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்தவர்கள், இப்போது அதற்கென தனி கருவிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள. இதற்கான மை தனித்துவமானது, பல்வேறு மூலிகைகளை கலந்து இதைச் செய்கிறார்கள். பழங்குடி மக்கள் இயற்கையான மையை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் உள்ள டாட்டூ கலைஞர்கள் பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளில் பச்சை குத்துவதற்கான செயற்கை மையை வாங்குகிறார்கள். இந்த மையை ஒருவர் பயன்படுத்தும்போது வரையப்படும் உருவங்கள் பச்சை நிறமாக மாறாது. தொன்மைக் காலத்தில் பச்சை குத்தியவர்களுக்கு, அந்த இடம் பச்சையாக மாறியது, மூலிகைகள் காரணமாகத்தான். பச்சை குத்துவதில் சுகாதாரம் முக்கியம். இதில் எளிதாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.   நாகலாந்து பழங்குடிகள் பச்சை குத்துவதற்கு புகழ்பெற்றவர்கள். இவர்கள், இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை போல சொல்வதற்கு புகழ்பெ...