சக நண்பர்களைக் கொன்று துரோகம் செய்த முரிம் கூட்டணி அமைப்பின் தலைவரை பழிவாங்க துடிக்கும் இளம்பெண்!
பிளாக் சர்பென்ட் வெப்டூன்.காம் காமிக்ஸ் முரிம் கூட்டணி, பிளாக் சர்பென்ட் என்ற வலிமையான படையை பயிற்சி கொடுத்து உருவாக்குகிறது. தீயசக்தி இனக்குழுவை அழிக்க பயன்படுத்துகிறது. ஆனால், இறுதியில முரிம் கூட்டணி தலைவர், பிளாக் சர்பென்ட்படையை துரோகம் செய்து அவர்களை முற்றாக அழிக்கிறார். ஏனெனில் அப்படையினர், ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள். பெற்றோர் இல்லாதவர்கள். குழுவின் தலைவி, ஜியோன்மா, படுகாயமுற்றாலும் உயிர் பிழைத்து முரிமை பழிவாங்க முற்படுவதுதான் கதை. ஆதரவற்ற வலிமையான தற்காப்புக்கலை கொண்ட இளம்பெண்ணின் கதை. ஈட்டிதான் அவளின் ஆயுதம். தன்னையொத்த வீரர்களை துரோகம் செய்து முரிம் கூட்டணி ஏமாற்றியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, படுகாயமுற்ற நிலையில் கூட தன்னை பிழைக்க வைத்துக்கொண்டு எதிரிகளை கொல்ல நினைக்கிறாள். அப்படி வரும் வழியில் ஒயிட் பந்தனா என்ற கொள்ளைக்கூட்டத்தினரை சந்திக்கிறாள்.அவர்கள்,அவளை வல்லுறவு செய்து அனுபவிக்க நினைக்கிறார்கள். நாயகி ஈட்டியைச் சுழற்ற தலை காற்றில் பறக்கிறது. மெல்ல கொள்ளைக்காரர்களின் தலைமையிடத்திற்கு வந்து அத்தனை பேரையும் ஒரு விஷயம்தான் கேட்கிறாள். சாப்பிட சோறு இருக்கி...