இடுகைகள்

பகடி உரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பன்பட்டர்ஜாம் எக்ஸ்டென்டட் - பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு

படம்
அறிமுகம்... வீரசுப்பி தாஸ், மெகந்தியா நாட்டை ஆளும் சர்வாதிகாரி. முன்னதாக நாடு ஜனநாயக தன்மையில் இயங்கியது. பின்னாளில், கல்வியறிவு இல்லாத மூடநம்பிக்கை கொண்ட விலங்குகளின் குதத்தை வழிபடும் பெரும்பான்மை மக்களே வீரசுப்பியின் ஆதரவாளர்கள். இதற்காக அவர் போலிச்செய்திகளை மெகந்தீயம் என்ற அரசு டிவி, தனியார் டிவி சேனல்கள் வழியாக பரப்பத் தொடங்கினார்.  ஜூமன் என்ற குதிரைக் கடவுளின் பக்தனாக காட்டிக்கொண்ட வீரசுப்பி, பிறகு தானே ஜூமனின் மறுபிறப்பு என கூறிக்கொண்டு தன்னுடைய சிலைகளை நாடெங்கும் வைக்கத் தொடங்கினார். வீரசுப்பிக்கு பொய்,புரட்டு, பித்தலாட்டம் என்ற தாய்க்கழகம் உண்டு. அவரது தொண்டர்களை அங்கிருந்து பொறுக்கி எடுத்து கலவரப்படைக்கு ஆள் சேர்க்கிறார். பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு 2 பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்! எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே, நமது நாட்டில் பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. மக்கள் அதற்கு பலியாகி வருகிறார்கள். பரவாயில்லை. பூநூலியர்கள் நோய்த்தொற்றுக்கான சடங்குகளைக்கூறி அதைச்செய்ய கோரிக்கை விடுத்தனர். இத்தனை நாட்கள் மக்கள் வலியிலும...

சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்

படம்
  பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.  நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.  பன்பட்டர்ஜாம்  நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.  இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்த...