இடுகைகள்

இந்துமதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

இந்தியாவை தேங்கி கிடக்கிற, நோய் பிடித்த சமூகமாக மாற்றியதே இந்துமதம்தான்!

படம்
 அரசை கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கம் இந்தியச்சமூகத்தில் கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்று தேடினாலும் ஆளும் வர்க்கத்தின் அளவு பத்து சதவீதம்தான் தேறும். இந்தியாவிற்கென நாடாளுமன்றம் உள்ளது. அதற்கான உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இயங்க முடியாது. இந்த ஆளும் வர்க்கம்தான் அரசை நடத்துகிறது. அரசு இவர்களை நடத்தவில்லை. அரசியலமைப்புச்சட்டம் சில விஷயங்களைக் கூறலாம். நாடாளுமன்றம் சட்டங்களை கொண்டு வரலாம். கேபினட் அமைச்சகம் முடிவுகளை எடுக்கலாம். அரசு கூட இறுதியாக ஏதேனும் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் ஆளும்வர்க்கத்திற்கு அந்த முடிவுகள் சட்டங்கள் பிடிக்காதபோது, அவை நடைமுறைக்கு வராது. எனவே, தலித்துகளை காக்கும் சட்டங்கள் அனைத்தும் காகித தாளில் மட்டுமே உள்ளது. அவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம், அவையெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு உவப்பாக இல்லை. இப்பிரச்னையை எளிதாக கூறலாம். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எந்த அரசும் இயங்க முடியாது. இதை எதிர்த்து யாரும் இயங்க முடியாது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை ஆட்சியை விட்டு அகற்றியது கூட இதே ஆளும...

பிராமணாள் ஹோட்டல் பெயர்ப்பலகை! - பெரியார் ஆயிரம் நூலில் இருந்து....

படம்
            பெரியார் வாக்கு! இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்று கூறியதைக் கேட்ட ஒருவர், இந்து மதத்திற்கு மாற்றாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு பெரியார் சொன்னது என்ன? வீட்டிற்குள் அசிங்கம் இருக்கிறது. எடுத்து எறியுங்கள் என்றால் அதற்கு மாற்றாக அந்த இடத்தில் எதை வைக்கலாம் என்பது சரியா என்று கேட்டார். கடவுள் இல்லை என்று கூறுறீர்களே, கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டவருக்கு பெரியார் கூறியது என்ன? வந்துவிட்டால் கடவுள் உண்டு என்று ஒத்துக்கொள்வேன் என பதிலளித்தார். பிராமணாள் ஹோட்டல் பெயர்ப்பலகையை ஏன் அழிக்கவேண்டும் என பெரியார் நினைத்தார்? தெருவில் உள்ள ஒரு வீட்டில் இது பதிவிரதை வீடு என்று  எழுதினால் பக்கத்து வீடுகள் தேவடியாள் வீடுகள் என்பது போல பிராமணாள் என்று எழுதினால் மற்றவர்கள் சூத்திரர்கள் என்றுதானே அர்த்தம் என பொருள் சொன்னார். படிப்பறிவின்மையை முற்றிலும் நீக்க பெரியார் பரிந்துரைத்த யோசனை? ஆறு மாதத்திற்குள் கையெழுத்து கூடப் போட தெரியாதவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அளிக்க வேண்டும்.  மனுதர்மத்தில் சாதிக்கு ஒரு நீதி இருந்ததைக் ...

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தி...