இடுகைகள்

அயோத்திதாசர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

அயோத்திதாசரின் பெயரை மறைத்து விமர்சித்த ஆளுமைகளைப் பற்றிய நூல் - பெயரழிந்த வரலாறு - ஸ்டாலின் ராஜங்கம்

படம்
  பெயரழிந்த வரலாறு - அயோத்திதாசர்  பெயரழிந்த வரலாறு அயோத்தி தாசரும் அவர் காலத்திய ஆளுமைகளும் ஸ்டாலின் ராஜாங்கம் காலச்சுவடு தமிழ் வழியில் படித்து ராயப்பேட்டையில் சித்த மருத்துவமனைச்சாலை நடத்தி வந்த அயோத்திதாசர், பௌத்த மதத்தை பட்டியலின மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களை அதைநோக்கி ஈர்த்தார். இதற்கென தனது நாளிதழில் பல்வேறு தொடர்களை எழுதி அதை நூல்களாக தொகுத்து வெளியிட்டார். இதேபோல இரட்டைமலை சீனிவாசன், சிங்கார வேலர், லட்சுமி நரசு ஆகியோர் பட்டியலின மக்களுக்கு பல்வேறு பங்களிப்புகளை ஆற்றினர். அன்றைய காலத்தில் மக்களிடையே புகழ்பெற்றிருந்த பிராமண கவிஞர்கள், எழுத்தாளர்கள் பட்டியலின மக்களுக்காக பாடுபட்ட அயோத்திதாசரின் செயல்பாடுகளை எங்குமே குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட நேர்ந்தாலும் கூட பெயரைக் கூறவில்லை. இந்தவகையில் அவரது செயல்பாடு குறிப்பிடப்படாமல் அழிந்துபோனது. இதை ஸ்டாலின் ராஜாங்கம், அன்றைய போக்கு அப்படித்தான் இருந்தது. உவேசா, பாரதி மட்டும் அயோத்திதாசரின் பெயரைக்குறிப்பிடாமல் இல்லை. அயோத்திதாசரும் மேற்சொன்னவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விமர்சித்தார் என்று கூறுகிறார்...

பௌத்தம்/ சமணத்தை போலச் செய்து சைவம் வென்ற வரலாறு - வைத்தியர் அயோத்திதாசர்/ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
  வைத்தியர் அயோத்திதாசர் நூல் ஸ்டாலின் ராஜாங்கம் வைத்தியர் அயோத்திதாசர் ஸ்டாலின் ராஜாங்கம் நீலம் ரூ.175                                           தமிழன் என்ற நாளிதழை நடத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இவர், சித்த வைத்தியராக ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தியவர். மருத்துவமனை என்பதை விட வைத்திய சாலை என்று கூறலாம். தனது நாளிதழில் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும், உண்ண வேண்டிய பல்வேறு மருந்துகளைப் பற்றியும் எழுதி வந்தார். பௌத்தம்/சமணம் ஆகிய மதங்களிலிருந்து எப்படி சைவம், வைணவம் போலச்செய்தல் முறையில் தன்னை வளர்த்திக்கொண்டது. அதற்கேற்ப திரிக்கப்பட்ட இலக்கியங்கள், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதத்தை பல்வேறு ஆதாரங்களின்படி நூல் விளக்குகிறது. நூலில் வரும் சிறுவன் ஒருவனுக்கு அயோத்தி தாசர் வைத்தியம் செய்விக்கும் முறை சிறுகதை போல உள்ளது. அந்தளவு நுட்பமான தன்மையில் விளக்கப்படுகிறது. அந்த சிறுவன்தான், வளர்ந்தபி...