பத்திரிகையாளராக ஊடகவியலாளராக கரண் தாப்பர் எதிர்கொண்ட சுவாரசிய அனுபவங்களின் தொகுப்பு - சண்டே சென்டிமென்ட்ஸ்
சண்டே சென்டிமென்ட்ஸ் கரண் தாப்பர் கட்டுரை நூல் பத்திரிகையாளர் கரண் தாப்பர், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். தற்போது தி வயர் இணைய பத்திரிகையில் நேர்காணல்களை எடுத்து வருகிறார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சண்டே சென்டிமென்ட் பத்தியை எழுதி வருகிறார். படித்து பட்டம் பெற்றபிறகு, இங்கிலாந்தின் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியவர். பிபிசியில் ஹார்ட் டாக் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். இந்தியாவில் டெவில்ஸ் அட்வகேட் என்ற நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியவர். குறிப்பாக, இன்றைய இந்தியாவின் ஆட்சித்தலைவர், குஜராத் முதல்வராக இருக்கும்போது அவரிடமே, அவரும் கட்சியினரும் உருவாக்கிய கோத்ரா கலவரம் பற்றி கேள்விகேட்ட தைரியசாலி. அதனால் அந்த பேட்டி ஏழு நிமிடங்களில் முடிந்துபோனது. அந்த பேட்டிக்கு பிறகு பாஜகவினர் எவரும் கரண் தாப்பருக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு இடப்பட்டது. விமர்சனங்களை பொறுக்க முடியாத தரம் தாழ்ந்த கீழ்த்தரமான பாசிச சுயமோக அரசியல்வாதி காரணமாக கரண் தாப்பர், நடத்தி வந்த நேர்காணல் நிகழ்ச்சிகள் பாதிக...