இடுகைகள்

நாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டின் தரைக்கு கீழே தோண்டப்பட்ட குகை - ஜெயமோகனின் குகை குறு நாவல்!

 குகை - ஜெயமோகன் குறுநாவல் இக்கதையில் வரும் மனநல குறைபாடு கொண்டவர், புதிதாக வாங்கிய வீடு ஒன்றின் கீழே குகை வழிப்பாதை செல்வதைக் கண்டறிகிறார். அந்த வழிப்பாதையின் மர்மத்தைக் கண்டுபிடித்து என்ன செய்தார் என்பதே குறுநாவலின் மையம். நாவலை நடத்திச்செல்ல பெரிய பாத்திரங்களின் தேவை இல்லை. இதில் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. அம்மா, மகன், மருமகள் என மூன்றே பாத்திரங்கள்தான். கதை உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து உருவானது. ஆனால், அதை சாகச கதையாக எழுத்து திறமையால் மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். கதையை சொல்பவராக வரும் மகன், மனநல குறைபாடு கொண்டவர். அவருக்கு திருமணமாகிவிட்டிருக்கிறது. ஆனால், மனைவியோடு பேச்சு முறிந்து ஆறுமாதகாலமாகிறது என்றொரு தகவல் கூறப்படுகிறது. இப்படியான மனநல குறைபாடு கொண்டவருக்கு எப்படி மணமாகியிருக்க கூடும். கதையை முழுதாக படித்தால், அவருக்கு சிறுவயது முதற்கொண்டு மனநல குறைபாடு உள்ளதை அறியலாம். மனநல குறைபாடு கொண்ட கணவன், வேலைக்கு செல்லும் நவநாகரிக மனைவி கதை என்பதை தனியாகவே எழுத முடியும். கதைக்கு அது பெரிய முக்கியத்துவம் தரும் விவகாரம் இல்லை. அப்படி பார்த்தால் மனைவி என்ற பாத்திரமே க...

உங்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நூல் - டெய்லி ரிச்சுவல்

படம்
 டெய்லி ரிச்சுவல்  மாசன் குரே சுயமுன்னேற்ற நூல் 171 பக்கம் தினசரி சடங்கு என கலைஞர்களுக்கு என்ன இருக்கும்? கட்டுரை, நாவல், ஓவியம், திரைப்படம் இதுதானே? அதை எப்படி உருவாக்குகிறார்கள், அதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள்.  நூலில் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கட்டுமான கலைஞர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள் தங்களின் பழக்க வழக்கம் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களைப் பற்றி கூறுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி சுயசரிதை எழுதும் பத்திரிகையாளர்கள் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். நூலை வாசிப்பவர்களுக்கு தேவையான குறிப்புகளும் கூட நூலின் பின்பக்கத்தில் உள்ளது. நூல்களை தேடி எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.  சில எழுத்தாளர்கள் திருமணம் செய்தாலும் கூட எழுத்தாளராக சாதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காகவே ஒருவர் வேலைக்கு செல்வது இன்னொருவர் எழுதுவது என திட்டமிடுகிறார்கள். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், இன்னொருவர் தோல்வியுறுகிறார். இந்தவகையில் எழுத்தாளர் கார்சன், ரீவ்ஸ் ஜோடியில் கார்சன் வெற்றிபெறுகிறார். அதாவத...

பொதுவாழ்க்கையை மதம் கட்டுப்படுத்தும்போது, மதச்சார்பற்றவராக இருப்பதே நல்லது - எழுத்தாளர் எலிஃப் சாஃபாக்

படம்
      நேர்காணல் எலிஃப் சாஃபாக் ஆங்கில துருக்கி பூர்வீகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாஃபாக். தனது பத்தொன்பதாவது நூலை எழுதியிருக்கிறார். அந்த நாவலின் பெயர், தேர் ஆர் ரிவர்ஸ் இன் தி ஸ்கை.  நாவலின் கதை தொன்மைக்கால மெசபடோமியா, விக்டோரியா காலகட்ட இங்கிலாந்து எனச் சுற்றி நவீன கால துருக்கியில் வந்து நிறைவு பெறுகிறது. இந்த விஷயங்களை ஒன்றாக இணைக்கும் புள்ளியாக நீர் உள்ளது. ஹெவி மெட்டல் இசை கேட்டபடியே நாவல் எழுதும் பழக்கம் கொண்டவரிடம் பேசினோம். புதிய நாவலில், வரலாறு, நிலப்பரப்பு என இரண்டுமே கலந்துள்ளது. இப்படியான அம்சங்களை தொடர்ச்சியாக எடுத்து எழுத என்ன காரணம்? எழுத்தாளராக எனக்கு கதைகள் மட்டும் பிடித்தமானதில்லை, மௌனமும் பிடிக்கும். வரலாற்றில் மக்கள் மௌனமாக்கப்பட்ட இடங்கள் உண்டு. துருக்கியில் கூறப்பட்ட கதைகள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் கோணத்தில் அமைந்தவைதான். நமக்கு கூறப்படும் பெரும்பான்மை கதைகள் இப்படியான பின்னணி கொண்டவைதான். அதிகாரமற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண் ஆகியோரின் கதைகள் மறந்துபோனவையாக உள்ளன. கூறப்படாத கதைகளைக் கூறுவதில் எனக்கு ஆர்வமுண்டு. மௌனம், இட...

கருமியா, கயவனா - உண்மையில் சிவசிதம்பரம் செட்டியார் யார்?

படம்
      மலபார் ஹோட்டலில் மர்மப் பெண்மணி மேதாவி பிரேமா பதிப்பகம் மர்மநாவல். வேகமாக வாசித்துவிடக்கூடிய நூல். சென்னையில் சிவசிதம்பரம் என்ற செட்டியார் இருக்கிறார். வசதியானவர். பாழடைந்த பேய் பங்களா ஒன்றில் வாழ்கிறார். கஞ்சன் என்று பெயரெடுத்த அவரின் செயல்பாடு, சொத்து என அனைத்துமே மர்மமாக உள்ளது. திடீரென ஒருநாள் அவர், தனது பங்களாவின் பாதாள அறையில் முதுகில் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அறைச்சாவி அங்குள்ள மேசையில் உள்ளது. உண்மையில் இந்த கொலைக்கு காரணம் தேடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் துப்பறிகிறார். கூடவே, பத்திரிகையாளர் மணிவாசகம் உதவி செய்கிறார். கொலைகாரன் யார் என்பதுதான் இறுதிப்பகுதி. இன்ஸ். சிவராஜ், மணிவாசகம், நடிகை பரிமளா, சங்குண்ணி நாயர், சூரிய மூர்த்தி, சண்முக சுந்தரம், பங்காரு ஆகியோர்தான் முக்கியப் பாத்திரங்கள். இவர்களில்தான் கொலைகாரனும், கொலையைத் தேடுபவர்களும் உள்ளனர். கதையில் கொலை, கொலைக்கான மர்மம் என்பதைவிட சிதம்பரம் செட்டியார் எப்படிப்பட்ட ஆள் என்பதை எழுத்தாளர் வெகுநேரம் மறைத்து வைத்து ஆர்வத்தை தூண்டுகிறார். அவருக்கு ஒரு மோசமான கடந்தகாலம் இருக்கிறது. அதில் பரிமளாவின் பெ...

நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுபவர்களுக்கான வழிகாட்டி நூல்!

படம்
            நாவலும் சினிமாவும் தொகுப்பு - திருநாவுக்கரசு நிழல் வெளியீடு நிழல் என்பது சினிமா தொடர்பான பத்திரிகை. இந்த பத்திரிகையில் பல்வேறு எழுத்தாளர்கள் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். நூலின் மையப்பொருள், நாவலை அடிப்படையாக வைத்து எப்படி திரைப்படங்களை உருவாக்குவது, அப்படி உருவாக்கியதில் சிறந்த திரைப்படங்கள் உள்ளனவா, அந்த பணியில் சொதப்பிய படங்கள் எவை, எந்த இடத்தில் பார்வையாளர்களை கவராமல் போயின என்ற விளக்கமாக கூறியுள்ள நூல். நூலின் இறுதியில், திரைப்பட இயக்குநர்கள் எந்தெந்த நாவல்களை திரைப்படமாக எடுக்கலாம் என குறிப்பிட்டு முருகேச பாண்டியன் அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். அதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நூல்களாக வாங்கி வாசித்து பயன்பெறலாம். மற்றபடி கதை, திரைக்கதை என அனைத்துமே தான் என்று போட்டுக்கொள்ள விரும்பாத பெருந்தன்மை கொண்ட இயக்குநர்கள் கதைகளை படித்து உரிமை வாங்கி திரைப்படமாக மாற்றிக்கொள்ளலாம். நாவல்களை படித்தால் கூட அதை திருடி தன்னுடைய படத்தில் வைத்து ஜெயிக்க முயல்பவர்களே அதிகம். அதையும் மீறி யோக்கிய இயக்குநர்கள் இரு...

நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு

படம்
  நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு மிஸ்டர் ஹெகல் அண்ட் மிஸ்டர் ஹைட் லூயிஸ் ஸ்டீவன்சன் நாவல்  மொழிபெயர்ப்பு - ரகுநாதன் ஒருவரின் மனதிற்குள் நன்மை, தீமை என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை தனியாக பிரித்து அதற்கென உருவம் கொடுத்தால் இரண்டு இயல்புமே சந்தோஷமாக இருக்குமே என மருத்துவர் யோசிக்கிறார். இதற்காக அவர் செய்த ஆய்வு விபரீதமான திசையில் செல்கிறது. அதன் விளைவுகள் என்னவென்பதே கதை.  ஒருவரின் மனதில் இருக்கும நன்மை, தீமைக்கெதிரான போர் நிற்காத ஒன்று. காலம்தோறும் நடந்துகொண்டு இருக்கிற ஒன்று. இதை ஒருவர் தனித்தனியே பிரித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அது எப்படியொரு மோசமான தீர்வை நோக்கிச் செல்கிறது என்பதே கதை.  வக்கீல் அட்வன்சன், அவரது நண்பர் என்பீல்ட், டாக்டர் ஜெகில், டாக்டர் லான்சன், ஜெகிலின் வேலைக்காரன் பூல் ஆகியோர்தான் நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள். ஒரு மனிதனின் மனதிலுள்ள நன்மை, தீமை ஆகிய இரு இயல்புகளுக்கான போராட்டம் அவனை எப்படியான நெருக்கடியில் தள்ளுகிறது என்பதே கதை. இதை கடிதம் வழியாக டாக்டர் ஜெகில் சொல்லும்போது யாருக்கும் மயிர்க்கூச்செரியும். அந்தளவு...

உடல்பசி, வயிற்றுப்பசி என இரண்டாலும் தவிக்கும் ராமோஜி ராவின் சுயசரிதை! - ராமோஜியம் - இரா முருகன்

படம்
  ராமோஜியம்  இரா முருகன் கிழக்கு பதிப்பகம் பிரிட்டிஷாரின் ஆட்சியில் நடக்கும் கதை. அக்காலகட்டத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிளர்க்காக வேலை செய்யும் ராவ்ஜி, அவரது மனைவி ரத்னாபாய் ஆகியோரின் வாழ்க்கை கதைதான் நாவல்.  கொரிய டிவி தொடர்களில் பன்றிக்கறி, மாட்டிறைச்சி, நூடுல்ஸ், முட்டை எப்படி நீங்காமல் இடம்பெறுகிறதோ அதுபோல இந்த நாவலெங்கும் உணவு வகைகள் ஏராளம். தாராளம். உணவு கதையில் ஒரு பாத்திரம் போலவே வருகிறது. ராவ்ஜிக்கு அரசு வேலை என்பதால் அவர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவரது உறவினர்கள் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அத்தனை ருசியாக, வகை வகையாக சமைத்து போடுகிறார்கள். கும்பகோணத்தில் டீ ஆபீசராக சென்று வேலை பார்த்து, அங்கு விடுமுறைக்கு வந்திருந்த இளம்பெண் ரத்னாபாயை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருமே வீழ்கிறார். பிறகுதான் அரசு தேர்வு எழுதி கிளர்க்காக சென்னையில் உத்தியோகமாகிறது. அதை வைத்தே மராட்டிய மாமனார், மச்சினன் ஆகியோரை சரிகட்டி ரத்னாவை கல்யாணம் செய்கிறார்.  1975 நாவலைப் போலவே இதிலும் நாயகன் ராவ்ஜி, அரசு விவகாரங்களை விமர்சிக்க விரும்பாத குட...

அவசரகாலத்தையும், அதில் நடைமுறையான குடும்பக்கட்டுப்பாட்டு விவகாரத்தை அங்கதமாக்க முயலும் நாவல்! - 1975 - இரா முருகன்

படம்
  1975 இரா முருகன் கிழக்குப் பதிப்பகம்  pages 449 விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களை நினைவுபடுத்துகிற படைப்பு. அதாவது, நல்ல அவல நகைச்சுவையை படிக்கலாமே என தூண்டுகிற இயல்பு கொண்டது. காங்கிரஸ் அரசின் சர்வாதிகாரம், கண்காணிப்பு ஆகியவற்றை அவல நகைச்சுவையாக்கி ஆசிரியர் எழுதியுள்ள நாவல்தான் 1975. இரா முருகன், வங்கிப் பின்னணியைக் கொண்டு எமர்ஜென்சி காலகட்டத்தை பகடி செய்திருக்கிறார். இந்நாவலை கிழக்கு பதிப்பகம் எதற்கு வெளியிட்டிருக்கிறது என்ற காரணத்தை நாம் ஆராய அவசியமே இல்லை. வலதுசாரி பதிப்பகம். அதற்கு உகந்தபடி நாவலின் மையப்பொருளை தேர்ந்தெடுக்கிறது.  இருபத்தொரு மாதங்கள் நீடித்த எமர்ஜென்சியை நினைவூட்டும் விதமாக அதே எண்ணிக்கையில் அத்தியாயங்கள் உள்ளன. சென்னை, திருநெல்வேலி, தில்லி என மூன்று நகரங்களுக்கு கதை நகர்கிறது. அதேபோல பாத்திரங்களும் மாறுகிறார்கள். அனைத்திலும் மாறாத ஒன்று, இருபதம்ச திட்டம். ஐந்து அம்ச கொள்கை, பேச்சைக் குறை. வேலையைச் செய் என்ற வாசகம் ஆகியவைதான்.  நாயகன் சிவசங்கரன் போத்தி வங்கி ஊழியன். அவனுக்கு அரசியலோ, தத்துவமோ, அப்பா வழியில் கூடக்குறைய கற்ற ஆயூர்வேதம் கூட முக்க...

எல்ஐசி முகவரின் ஆன்மிகத்தேடல் பயணம் - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

படம்
  வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்  கிழக்கு பதிப்பகம்  நாவல்  சந்தானம் என்ற எல்ஐசி ஏஜெண்ட், திருவண்ணாமலையில் கணபதி என்பவரைச் சந்திக்கிறார். அதன் வழியாக வேதமூர்த்தி என்ற சாமியாரைப் பற்றி அறிவதோடு அவரது சீடர்களையும் சென்று சந்திக்க செல்கிறார். இதன் வழியாக அவர் பெறும் அனுபவங்கள்தான் கதை.  ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம், அவர்களது சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்குகிறது. மாதச்சம்பள வேலைக்குப் போகவேண்டும் என நினைத்த பால்பாண்டி, சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக மாறுகிறார். கண்பார்வை இல்லாத ஹரி, குருவின் தீட்சை பெற்று அடுத்த குருவாக மாறுகிறார். இறந்துபோன அம்மாவின் நினைவில் இருந்து மீளாத வைரவன், நகரத்தார் விடுதிக்கு பொறுப்பாளராகிறார். மடத்தின் விடுதியில் வளர்ந்த கோவர்த்தனம் பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தபிறகு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மகன் அகாலமாக இறந்துபோக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து அதன் வழியாக துக்கத்திலிருந்து மீள முயல்கிறார் கட்டுமானக் கலைஞர் சிவராமன். ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து இறக்க, ம...

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் ப...

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசி...

குடும்ப வரலாற்றின் களங்கத்தை வெளிவராமல் தடுக்கும் மாயப்பபனின் கதை! - க்ரைம் - ரா கி ரங்கராஜன்

படம்
  ரா கி ரங்கராஜன், எழுத்தாளர் க்ரைம் ரா கி ரங்கராஜன் அல்லயன்ஸ் பதிப்பகம்   ஒரு முக்கியமான கதை வழியே ஏராளமான கிளைக் கதைகளைக் கூறும் முறையை எழுத்தாளர் ரா கி ர கையாண்டிருக்கிறார். அதில் பழுதும் இல்லை. வாசிப்பில் நீங்கள் எங்கேயும் குழம்பாமல் டோல்கேட்டே இல்லாத நெடுஞ்சாலைபோல சென்றுகொண்டே இருக்கலாம். பாலா, டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவள். அவளுக்கு மாயப்பன் என்பவன் போன் செய்து. அவளது தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜனார்த்தனன் தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அதில் தனது மாயப்பன் குடும்பம் பற்றிய கதை, வரலாறு வரக்கூடாது. வந்தால் அவளது தந்தை கொல்லப்படுவார் என எச்சரிக்கிறான்.   கதை இப்படித்தான் தொடங்குகிறது. பெரிதாக ரத்தம் வல்லுறவு என நீண்டு செல்லாத கதை. கதையின் போக்கில் ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. இதில், சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய கதை சுவாரசியமாக உள்ளது. இதில் நினைத்துப் பார்க்காத திருப்பங்களும் உள்ளன. இன்று வரும் கோர்ட் டிராமா படங்களை விட நன்றாகவே எழுதப்பட்ட கதை. இதற்கடுத்த கதையென தினேஷ், சபிதா என்ற பெண்ணால் கொல்லப்பட்ட கதையைக் கூறலாம். இதிலும் குற...

பட்டியல் - விநோதரச மஞ்சரி

படம்
  பட்டியல் தியோடர் சியஸ் கெய்சென் என அழைக்கப்படும் டாக்டர் சியஸ், தனது லோரக்ஸ் நாவலை கென்யன் ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து யானைக்கூட்டத்தை பார்த்தபடியே எழுதி முடித்தார். எழுத பயன்படுத்திய காகிதம், சலவை துணிகளின் பட்டியல் காகிதம்.   1907ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி எழுத்தாளர் எட்மண்ட் மோரிஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு விருந்து உண்ண வரும் விருந்தினர் பட்டியலைக் கவனித்தார். அதில்   நோபல் பரிசு வென்றவர், கலாசாரவாதி, வரலாற்று அறிஞர், கட்டுரையாளர், சுயசரிதையாளர், மானுடவியலாளர், குடிமைச்சமூக சீர்திருத்தவாதி, சமூக செயல்பாட்டாளர், நியூயார்க் நகர முன்னாள் ஆளுநர் என பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருந்த ஒரே பெயர் தியோடர் ரூஸ்வெல்ட். அமெரிக்கா வியட்நாம் போரில் தோற்றுப்போனது. அதில் இறந்துபோனவர்களுக்கான நினைவகம் வாஷிங்டனில் உள்ளது. அதில், இறந்து அல்லது காணாமல் போனவர்கள் என 58 ஆயிரம் ராணுவ வீரர்களின் பெயர்கள் உள்ளன. அதற்கான நிதியகத்தில் 38 வீரர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் அமெரிக்காவில் முதன்முதலில் சிகாகோவில்தான் வெளிய...
  ஓப்பன் மைண்ட்ஸ் 2023 விக்ரமாதித்ய மோட்வானே 46 இந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் உதவி இயக்குநர். 2010ஆம் ஆண்டு உடான், 2013ஆம் ஆண்டு லூட்டெரா ஆகிய மறக்க முடியாத திரைப்படங்களை உருவாக்கியவர். தனது சினிமா பயணத்தில் தொடக்க கால சினிமா செட்டில், மிக இளம் வயது கொண்ட நபராக இருந்து தற்போது செட்டில் அதிக வயதான நபராக மாறியிருக்கிறார். அப்போதும் இப்போதும் மாறாத காதலுடன் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். 1940ஆம் ஆண்டில் இந்தி சினிமா உருவாக்கப்பட்டதை ஜூப்ளி என்ற வெப் சீரியசாக எடுத்து வருகிறார். ‘’கதை சொல்லும் முறை, பாத்திரங்கள் என அனைத்துமே வேறுபட்டவை’’ என ஜூப்ளி வெப் சீரிஸ் பற்றி கூறுகிறார். இந்தி சினிமாவின் வெளியை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் நவீன இயக்குநர்களில் மோட்வானே முக்கியமானவர். ஆபிரஹாம் வர்கீஸ் 68 மருத்துவர், எழுத்தாளர் ஒரு மருத்துவர் நூல் எழுதுவதாக இருந்தால் என்ன எழுதுவார்? அவரது அறுவை சிகிச்சைகள், திறன் வாய்ந்த நுட்பங்கள், காப்பாற்றிய மனிதர்கள் இப்படித்தானே? ஆனால் ஆபிரஹாம் எழுதிய நாவலான தி காவ்னன்ட் ஆஃப் வாட்டர், அதன் கதை அளவில் புகழ்பெற்ற...